• -9%

    தரூக்.

    0
    ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இங்கிலாந்துக் குடிமக்களையும் இன்று வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஆசிய நாடுகளின் குடிமக்களையும் இணைகோடுகளாகச் சித்திரிக்கிறது நாவலின் கதை.
    இடப்பெயர்வு ஏற்படுத்தும் சலனங்களினூடே மாறிவரும் மனித உறவுகளையும் உணர்வுகளையும் நுண்ணுணர்வுடன் சித்திரிக்கிறது. நேரடியான காட்சிகளையும் குறியீடுகளையும் கொண்ட கதையாடல் பல்வேறு நுட்பங்களையும் அடுக்குகளையும் கொண்டு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
    ‘நட்சத்திரவாசிகள்’ என்னும் தனது முதல் நாவலுக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது நாவல் இது.
    Original price was: ₨ 1,925.0.Current price is: ₨ 1,750.0.
    Add to cart
  • -9%

    திருத்தி எழுதிய தீர்ப்புகள்.

    0
    கவிதை என்பது ஒரு மொழியின் புடைப்பு சிற்பம் நூற்றாண்டுகள் கடந்தும் காலத்தின் தடமாய் நிற்பது எனவே தன் சமூகத்தை தன் மக்களை தன் சிறப்பை மட்டுமின்றி சிதிலத்தையும் பிரதிபலிக்க வேண்டியது அதன் கட்டுப்பாடு
    வைரமுத்து நம் காலத்தில் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக் கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன
    தனி நபர்களையல்ல ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள் இந்ததொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களை தம் பயணப் பாதைகளாக்கி கொள்கின்றன.
    ஆயினும் இப்போது பிறந்தது போன்ற தோற்றத்தையும் அனுபவத்தையும் எப்போதும் தருகின்றன.
    மனித குலம் முழுமைக்குமான மகிழ்ச்சி என்பதே வைரமுத்து கவிதைகளின் சாரம் இந்த தொகுப்பும் அவருடைய எல்லாத்தொகுப்புகளும் இதைத்தான் தம் மெளன முன்னுரையாக எப்போதும் சொல்கின்றன.
    Original price was: ₨ 825.0.Current price is: ₨ 750.0.
    Add to cart
  • -10%

    திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908.

    0
    1908 மார்ச் 13. வெள்ளிக்கிழமை.
    கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல்.
    ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.
    Original price was: ₨ 1,920.0.Current price is: ₨ 1,728.0.
    Add to cart
  • -10%

    திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்

    0
    Original price was: ₨ 1,360.0.Current price is: ₨ 1,224.0.
    Add to cart
  • -9%

    தீரா நினைவுகள்.

    0
    அவருடைய பதிவுகள் எல்லாம் அவருடைய சொந்த அனுபவங்கள்தான். அரசியலில் இருந்து தனிப்பட்ட ஆளுமைகள் வரை பலரகமானவை. ஹனீபாவின் ஆளுமை சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அனுபவங்கள் இவற்றுட் பல. இதில் எதுவும் புனைவு அல்ல. உண்மைதான். உண்மையைப் புனைவுபோல் ஈர்ப்புடன் வார்க்கும் எழுத்தாற்றல் அவருக்குரியது.
    -பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.
    Original price was: ₨ 770.0.Current price is: ₨ 700.0.
    Add to cart
  • -10%

    தென்னம்படல் மறைப்பு

    0

    நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்துவிடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி உருவாக்கித் தருகிறது. அனுபவங்களை நறுக்குத் தெறித்தாற்போலான வாக்கிய அமைப்புகளுக்குள் பிசிறின்றி, வார்த்தை வீணடிப்பின்றி எழுதிச் செல்கிறார் ஆசிரியர். அந்தக் காலம் பற்றிய விதந்தோதலையும் நினைவேக்கத்தையும் பெருமிதத்தையும் கூருணர்வுடன் தவிர்த்திருக்கிறார். இவ்வனுபவப் பிரதியில் அங்கங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார வழக்கில் சுவையையும் இனிமையையும் உணரலாம். இலங்கையின் பல்வேறு மக்கள் குழுக்களிடையிலான பேச்சுவழக்குகளின் இன்னொரு தரப்பையும் தமிழ்ச் சூழலுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஈரமும் மென்மையும் கொண்ட மனிதர்களை இந்நூலில் மீட்டெடுத்திருக்கிறார் நபீல். அழுத்தும் சமகால வாழ்விலிருந்து சற்று வெளியேறிக் காலப்பயணம் செய்த அனுபவத்தை இந்நூல் தருகிறது.

    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart
  • -10%

    தோட்டியின் மகன்.

    0
    நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல்.
    இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல்
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.
    Add to cart
  • -10%

    நம்மை நாமே செதுக்குவோம்.

    0
    நம்மை நாமே காலத்திற்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டு, வெற்றி வாகை சூடத் தேவைப்படும் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களை எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
    பாஸ்டர், சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போன்றிருப்பர். ஆனால் பிரச்னைப் புயல் வீசினால் வேரோடு சாய்வர். சிலர் நாணல் போல் எந்தப் பிரச்னைப் புயல் வீசினாலும் வளைந்து நெளிந்து கொடுத்துப் பின்னர் நிமிர்ந்து விடுவர் என்கிறார்.
    தோற்று விட்டேனென்று நீ கருதுவாயானால் நிச்சயமாக நீ தோற்றவனே என்கிறார் ஆங்கில அறிஞர் ஒருவர். தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்குப் பதிலாகத் தலையால் நடப்பதைப் போன்றது என்கிறார் எமர்சன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை உடையவனோ அவன் அந்தப் பொருளாகத்தான் ஆகிறான் என்பது கீதை வாக்கு.
    Original price was: ₨ 1,460.0.Current price is: ₨ 1,314.0.
    Add to cart
  • -9%

    நளவெண்பா. (மூலமும் விளக்கவுரையும்)

    0

    நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா’ என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள் உணரத்தக்க நிலையில் பிரித்தும், பாடலுக்குத் திரண்ட பொழிப்புரை எழுதி சிறப்பித்துள்ளார்.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -20%

    நாவலும் வாழ்க்கையும்.

    0
    ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.
    உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர்.
    Original price was: ₨ 750.0.Current price is: ₨ 600.0.
    Add to cart
  • -7%

    நிறுத்தக் குறிகளும் பயிற்சியும்.

    0
    உயிரி எதுவாயினும் இயக்கம் உடையதே. ஆனால் உயிரியின் இயக்கம், குறித்த இடத்தில் குறித்த காலத்தில் குறித்த காரணத்தில் குறித்த தேவையில் நின்றே ஆக வேண்டும்.
    ஊரும் உயிரி, நடக்கும் உயிரி, பறக்கும் உயிரி, ஆகியவை எல்லாம் நிற்பதையும், நின்று மீளவும் இயங்குவதையும் காண்கின்றோம். நிற்கும் இடத்திற்கு “நிறுத்தம்” என்பது பெயர்.
    நிறுத்தம் உயிர்களுக்கு உண்டு என்பது போல், மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு.
    Original price was: ₨ 300.0.Current price is: ₨ 280.0.
    Add to cart
  • -9%

    நினைவுகளே எங்கள் கேடயம்.

    0
    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,500.0.
    Add to cart