பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை பெற்றுள்ளன.மேலும் அரசு, தனியார் அலுவலகப்பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செயல்படுவதோடு கதை, கவிதை, கட்டுரை புதினம்போன்ற இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களும் நமது நாட்டில் எண்ணிலடங்கார்.இயற்கையாகவே அழகு, ஒப்பனையில் மேலும் அழகாக விளங்கிய மாணவி, படிப்பில்
அக்கறை செலுத்தாது தன் அழகால் யாவரையும் கவர்ந்தவள், தன் சொந்த ஊரில் அழகுப்போட்டியிலும் பரிசு பெற்றவள், ஆனால், சென்னைக் கல்லுரியில் தன்னை விட அறிவிலும்அழகிலும் சிறந்த மாணவியரைக் கண்டு தற்மெருமை, தற்புகழ்ச்சி கூடாது என்பதையும்கல்வியே அழகு என்பதையும் ‘அழகோ அழகு’ கதையின் மூலம் அறிவுறுத்துகிறார்.