-
-10%
-
-9%
கறுப்புக் குதிரை.
0Original price was: ₨ 740.0.₨ 675.0Current price is: ₨ 675.0.இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள்’ என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்தக் கதை உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டது. சுஜாதாவுக்கே ஆச்சரியம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.‘தூண்டில் கதைகள்’ என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளைத் தொடர்ந்து, அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை. -
-9%
கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன.இத்துறையில் நிகழ்ந்துவரும் அண்மைக்காலத்தைய ஆய்வுகளை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வறுமையாலும் சமூக நிராகரிப்புக்களாலும் இடர் தழுவிய கற்போர் அல்லது ஆபத்து விளிம்பிலுள்ள கற்போரின் எண்ணிக்கையும் பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.அவர்களை வளமான கல்விச் செயல்முறையில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் எழுகோலம் கொண்டுள்ள சமகாலச் சூழலிற் பயன்கருதி இந்நூலாக்கம் முன்வைக்கப்படுகிறது. -
-3%
கற்றல் கற்பித்தல்: மேம்பாட்டுக்கான வழிமுறைகள்.
0Original price was: ₨ 1,510.0.₨ 1,460.0Current price is: ₨ 1,460.0.———————————இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இவை ஆசிரியர்களது கல்விச் செயற்பாட்டிலும் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. கடந்தகாலம் பற்றிய நோக்கினைக் கைவிட்டு எதிர்காலம் பற்றிய புதிய நோக்கினைக் கைக்கொள்ள நேரிடுகின்றன. துரிதகதியில் மாற்றங்கள் ஏற்படும் போது கடந்தகால எடுகோள்கள், நோக்கங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன.கற்றல்-கற்பித்தல் செயன்முறையும் உயிர்ப்பற்றதாகி விடுகின்றது. -
-10%
காட்டாறு.
0Original price was: ₨ 480.0.₨ 432.0Current price is: ₨ 432.0.ஆர்ப்பாட்டம் இல்லாத அடங்கிய மெல்லிய குரலில் சொல்லப்பட்டுள்ள இக்கதைகள் வாசக மனதில் நேரடியாக வலுவான தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன.
-
-10%
காட்டில் ஒரு மான்.
0Original price was: ₨ 1,440.0.₨ 1,296.0Current price is: ₨ 1,296.0.அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்துவருகிறது. ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித் திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலையும் (Face Behind the Mask, 1984) எழுதியிருக்கிறார்.
-
-9%
காட்டின் குரல் கேட்கிறதா?
0Original price was: ₨ 1,460.0.₨ 1,330.0Current price is: ₨ 1,330.0.மோப்பம் பிடிக்கும் யானைகள், கொத்தாத பாம்பு, கிளையுள்ள பனைமரம், ஆண் பப்பாளி மரம்-பெண் பப்பாளி மரம், தேளைப் போல் கொட்டும் புல், மனிதர்களைக் கண்டு அஞ்சாத பறவைகள் என பல அம்சங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.
-
-9%
காட்டுப்பன்றி புராணம்.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன்,அரச கால்நடை வைத்தியர்.2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தமிழ் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் விலங்குகள்,கால்நடை மருத்துவம்,கால்நடை உற்பத்தி தொடர்பாக எழுதி வருபவர்.’காட்டுப் பன்றி புராணம்’இவரது முதல் அச்சு நூல்.2013ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பத்திரிகைகளில் வெளிவந்த 18கட்டுரைகளின் தொகுப்பு இது.விலங்குகளின் நடத்தைகள்,மனித விலங்கு மோதல்,அவற்றுக்குரிய தீர்வுகள்,அன்றாடம் விலங்குகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒவ்வொரு கட்டுரைகளும் ஆராய்கின்றன.பல கட்டுரைகளில் ஆசிரியரின் கால்நடை வைத்திய அனுபவங்கள் வெளிப்பட்டு நிற்கிறது. -
-10%
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். காலரா காலத்தில் காதல்.
0Original price was: ₨ 3,540.0.₨ 3,186.0Current price is: ₨ 3,186.0.காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் அலாதியானது.காலராப் பெருந்தொற்றை வரலாற்றுப் பின்புலமாகவும் காதலின் குறியீடாகவும் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கொலொம்பிய நாட்டின் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. -
-10%
கார்ப்பரேட் கோடரி : மண் மீதான வன்முறையின் வரலாறு!
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0. -
-10%
காலத்தால் அழியாத கலைஞர்கள்.
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0.தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களின் மறக்க முடியாத பங்களிப்பினை விளக்கும் கட்டுரைகள் அடங்கிய முக்கியமான தொகுப்பு. சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் அவர்கள் எப்படியெல்லாம் சோபித் திருக்கிறார்கள், எங்ஙனமெல்லாம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு எப்படிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை உரையாடல் மற்றும் காட்சி ரூபமாய் விளக்கும் சுவையான, ரசனை மிக்க, சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய முக்கியமான கட்டுரை நூல். தலைமுறை தாண்டி காலத்துக்கும் அறிய, பாதுகாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நூல்.
-
-10%
காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி
0Original price was: ₨ 280.0.₨ 252.0Current price is: ₨ 252.0.