ஆரம்பகாலம் தொடங்கி ஒல்லாந்தர் காலம் வரையிலான யாழ்ப்பாண வரலாற்றை விபரித்து ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ என்ற முதலியார் செ.இராசநாயகம் அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலினைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆங்கிலக்கால வரலாற்றை விபரிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. வடமாகாண ஏசண்டர்கள், தலைமைக்காரர், வரிகள், நீதி பரிபாலனம், நாணயங்கள், ஏற்றுமதி – இறக்குமதி, ஊழியம், முத்துச்சலாபம், புகையிலை, புடைவை நெய்தல், தபால், பகிரங்க வீதிகள், சட்டசபைத் தமிழ்ப் பிரதிநிதிகள், இந்தியக் கூலிகள், யாழ்ப்பாணச் சுகாதாரம் போன்ற 37 விடயங்களினூடாக யாழ்ப்பாணத்தின் ஆங்கிலகால வரலாறு இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.