போரில் வெற்றிகண்ட மன்னர்கள், ரத்தம் குடித்த புலிகளாக, அடுத்தடுத்த தேசங்களுக்கு அலைவார்கள். ஆனால், மக்களின் துயரம் கண்டு நெஞ்சுடைந்து, இனி யுத்தமே வேண்டாமென்று சத்தியம் செய்த இன்னொரு மன்னரை இந்த உலகம் கண்டதில்லை.
மதம் மாறுகிற ஒரு மன்னர் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி, தன் கொள்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மக்கள் மேல் திணிப்பார். தான் பெளத்தமதத்துக்கு மாறியபோதும், எம்மதமும் சம்மதம் என மனிதநேயத்தை முன்னிறுத்தும் மாமனிதர்கள் வரலாற்று அதிசயம்.
மண்ணை வெல்பவர்கள் மன்னர்கள். மக்களின் மனங்களை வெல்பவர்கள் மகாத்மாக்கள். உலக வரலாற்றில் மகாத்மாவான மன்னர் ஒரே ஒருவர்தான். அவர் – பேரரசர் அசோகர்.