உயிரி எதுவாயினும் இயக்கம் உடையதே. ஆனால் உயிரியின் இயக்கம், குறித்த இடத்தில் குறித்த காலத்தில் குறித்த காரணத்தில் குறித்த தேவையில் நின்றே ஆக வேண்டும்.
ஊரும் உயிரி, நடக்கும் உயிரி, பறக்கும் உயிரி, ஆகியவை எல்லாம் நிற்பதையும், நின்று மீளவும் இயங்குவதையும் காண்கின்றோம். நிற்கும் இடத்திற்கு “நிறுத்தம்” என்பது பெயர்.
நிறுத்தம் உயிர்களுக்கு உண்டு என்பது போல், மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு.