இது ‘வழமையான மற்றுமொரு’ திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல.
மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி!
1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது.