தமிழ்நாட்டில் தீண்டாதார்’, ” புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்’ என்ற நொபொரு கராஷிமாவின் இரு கட்டுரைகளும் , “சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்’, “பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி’ என்ற எ.சுப்பராயலுவின் இரு கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
“வரலாற்று ஆய்வுகள் பண்டைய காலம் குறித்து கவனம் செலுத்தினாலும், அவை தொடக்கப்புள்ளியாக நிகழ்காலத்தைக் கொள்ள வேண்டும்’ என்ற அடிப்படையில் இந்நூலில் கட்டுரைகள் சோழர்கால வரலாற்றை ஆராய்கின்றன.
முதலாம் ராஜராஜன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் சாதிமுறையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்ந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள், சாதிப் படிநிலை பற்றிய குறிப்புகள் காணப்படுவது, திருச்சி மாவட்டம் திருப்பாலத்துறையில் உள்ள ஒரு கல்வெட்டில் அடிமைமுறை இருந்ததற்கான சான்றுகள் இருப்பது ஆகியவை இந்நூலில் கூறப்பட்டுள்ளன.