-
-13%
சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி – 02
0இந்த நூலின் பல கட்டுரைகளின் பேசுபொருட்களில் நவதாராளவாதம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.இந்த நூலை ஒரு கட்டுரைத் தொகுப்பாக பார்க்குமிடத்து அதன் பேசுபொருட்கள் பெரும்பாலும் கடந்த நான்கு தசாப்தங்களின் உலக அரசியல் போக்குகள் மற்றும் விவாதங்கள் தொடர்பானவை என்பது புலப்படும். -
-9%
சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி – 03
0இந்த நூல் பன்னிரண்டு கட்டுரைகளை உள்ளாடக்குகிறது.பெரும்பாலன கட்டுரைகள், கலை இலக்கியம் தொடர்பானவை.மற்றையவை பொதுவாக சமூக மற்றும் அரசியல் விடயங்கள் சார்ந்தவை, ஆயினும் கலை இலக்கியம் தொடர்பான கட்டுரைகளிலும் அரசியல் பேசப்படுகிறது. -
-9%
சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி – 04 இலங்கை தேசிய இனப்பிரச்சனை.
0வர்க்க உறவுகளை அடிப்படையாக கொண்ட இலங்கை தொழிலாளர் வர்க்கம், அமைப்புகள், படிப்படியாக இன, மத, பிரதேச உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டதையும், எந்த வகையில் அக புறவயமாக இதன் தாக்கம் நிகழ்ந்தது என்பதை நடைமுறை வெளிப்பாடுகள், நிலைப்பாடுகளை முன்வைப்பவை.
-
-9%
சமூகவிஞ்ஞான ஆய்வுகளுக்கான புள்ளிவிபர மென்பொருளில்(SPSS) தரவுப் பகுப்பாய்வு.
0இப்புத்தகத்தில் எண்கணித ரீதியான தரவுப்பகுப்பாய்வின் அடிப்படை தரவுப்பகுப்பாய்வு வகைகள் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளது.SPSS மென்பொருள் ஊடான தரவுப்பகுப்பாய்வு முறைகளை தமிழில் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்காகவும் ஆங்கிலத்தில் இம்மென்பொருளை விளங்கிக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குபவர்களுக்குஇப்புத்தகம் உதவியாக இருக்குமென நம்புகிறேன். -
-10%
சமூகவியல் சமூக மானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்.
0சமூகவியல், சமூக மானிடவியல் என்பனவற்றின் அடிப்படை எண்ணக்கருக்களை பற்றிய தமிழ் மொழி மூல நூல்கள் மிகவும் குறைவாகும். அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்வாறான ஒரு கன்னி முயற்சியில் இறங்க ஆரம்பித்தேன். அந்த முயற்சியின் பலனாக உருவானதேஇந்நூலகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமின்றி, சதாரண பொது மக்களுக்கும் விளங்கிக்கொள்ளும் வகையில் பல உபதலைப்புகளுடனும், உதாரணங்களுடனும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. -
-9%
சர்வதேச அரசியல் பிரச்சினைகள்.
02013-2015 காலப்பகுதியில் சமகாலம் சஞ்சிகைக்காக சர்வதேச அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பல கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்தேன். இக்கட்டுரைகளுள் சிலவற்றைத் தேர்வு செய்து இந்நூலில் சேர்த்துள்லேன். உலகம் என்ற பகுதி 1 எட்டு கட்டுரைகளைக் கொண்டது. பகுதி 2 பத்து கட்டுரைகளைக் கொண்டமைகிறது. இவை மேற்கு ஆசியா பற்றியவை.
-
-9%
சஹிதா. நிபந்தனையற்ற் அன்பின் குரல்.
0சஹிதா நாவலை அழகியல், அரசியல் என்று இருவிதமாக பிரித்துப் பார்க்கலாம். கருத்தியல் ரீதியாக இந்நாவல் எழுப்புகின்ற கேள்விகளையே நான் பிரதானமாக கருதுகிறேன்.
-
-9%
சாதனையாளர்களின் சரித்திரம்.
0இன்றைய ஒன் க்ளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துக்காட்டுகள் அல்ல. நிகழ்கால முன்மாதிரிகள்.அதற்காகவே இந்தப் புத்தகம். நவீன உலகில், முட்டிமோதி, தடுமாறி விழுந்து, அடையாளமின்றித் தொலைந்து, தவறுகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து, வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்த, பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை, அதே உணர்வுடன், உயிர்ப்புடன், உத்வேகத்துடன் விவரிக்கிறது – நம்பர் 1, சாதனையாளர்களின் சரித்திரம்! -
-9%
சாமிநாதம். (உ.வே.சா. முன்னுரைகள்)
0பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று புத்தகங்கள்.தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின் வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடிகளுள் ஒருவராகிய உ.வே.சாமிநாதையர் (1855 &1942) அவர்கள்.ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ’மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என மகத்தான சாதனையாளர்கள் வலம்வந்த நவீனத் தமிழ்ச் சூழலில் உ. வே. சா. என்னும் ஆளுமை உள் நுழைந்தபோது ஆரோக்கியமான அதிர்வுகளும் அடுத்தகட்டப் பாய்ச்சலும் தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்தன.இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதற்கு நூல்களில் இடம்பெறும் அவரது முகவுரைகளே சான்று.காலவெள்ளத்தில் கரையும் முன்னே அவரது 106 நூல்களிலிருந்து 130 முன்னுரைகளை அவர் வாழ்ந்த காலம்வரை வெளிவந்த பதிப்புகளிலிருந்து கண்டறிந்து முகப்பேடுகளுடன் முழுமையாகப் பதிப்பித்திருக்கிறார் ப. சரவணன். -
-9%
சாயங்கால மேகங்கள்.
0சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறி விட்டது. இனி அவற்றைத் துணித்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும், மனத்தாலும் முடியாதபோது-உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே ‘பூமி’ இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழமுடியாது. தீரர்களே வாழமுடியும்.
-
-23%
சாயத்திரை.
0விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத – அல்ல, மறக்கக் கூடாத – புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
-
-20%
சார்த்தர்: விடுதலையின் பாதைகள்.
0சார்த்தரின் நூறாண்டு நிறைவின் போது, கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ கிராண்மா’ எழுதியது:மார்க்ஸ் திட்டமிட்ட சோசிலசத்தை, அதன் தூய்மையான வடிவத்தில் சார்த்தர் எடுத்துக் கொண்டார், அந்த சோசிலசம் மே 1968 போராட்டத்தின் தோல்வியாலும் சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை. இந்தத் தனிநபர்களும் அந்தக் கனவுகளும் கடந்த காலத்துக்கல்ல, எதிர்காலத்துக்குரியவை.”மாபெரும் சிந்தனையாளராக, படைப்பிலக்கியவாதியாக, நாடகாசிரியராக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக, காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளராக , 1968 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் ஆதர்சங்களிலொருவராகத் திகழ்ந்த ழான் பால் சார்த்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்நூல். அவற்றை பின்னணியாகக் கொண்டு அவரது தத்துவம், இலக்கியப் படைப்புகள், அரசியல், சமூகச் செயல்பாடுகள் ஆகியன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.