-
-10%
பிழை இல்லாமல் எழுதுவோம்.
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0.எழுத்துபிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும்.எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப்பார்த்து எழுத வேண்டும். எழுதி முடிந்ததும் மீண்டும் படித்துப்பார்த்து சந்திப் பிழைகள் முதலியன இருப்பின் சரிப்படுத வேண்டும். -
-10%
புதிய இந்தியா எனும் கோணல் மரம்.
0Original price was: ₨ 2,394.0.₨ 2,154.0Current price is: ₨ 2,154.0.நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014 மே மாதத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, அல்லது அப்படிக் கூறப்பட்டதா? உள்ளபடியாக, நெருக்கடியைத்தான் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நம்முடைய ஆட்சியமைப்பு, சமூகம், பொருளாதாரம் என அனைத்தும் நொறுங்கிப்போய்விட்டன. அதற்கான அறிகுறிகளெல்லாம் நம்மைச் சுற்றியே இருக்கின்றன.’24/7 வேலைபார்த்துவந்த டிஜிட்டல் ராணுவமும் சமரசத்துக்கு ஆட்பட்ட ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூச்சல்களால் பொதுத் தளங்களை மூழ்கடித்துக்கொண்டிருந்த வேளையில், துணிவுமிக்க விமர்சனக் குரலால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் உறுதியோடு இருந்தார் பரக்கலா பிரபாகர். 2020 முதல் 2023 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எழுதிவந்த இந்தக் கட்டுரைகளில், அவர் உண்மைகளையும் தரவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிகழ்வுகளையும் பொது அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நம்முடைய ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொருளாதாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் ஏன் அச்சப்படுகிறார் என்பதை எடுத்துவைக்கிறார். -
-10%
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்.
0Original price was: ₨ 510.0.₨ 459.0Current price is: ₨ 459.0.இலக்கிய வாசகர்களுக்கும் கல்விப்புலத்தில் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படத் தக்கவையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்த பொது அறிமுகத்தையும் மதிப்பீட்டையும் தரும் முறையில் இந்நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை, பிரான்சு, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் இலக்கியங்களை விரிவான ஆய்வுத்தளத்தில் ஆராய்கிற இந்நூலில் இடம்பெறும் கவிதைகளும் சிறுகதைகளும் வெவ்வேறு நாடுகளில் வாழுகின்ற படைப்பாளிகளையும் வெவ்வேறு படைப்பாக்கத்தன்மை கொண்ட படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
பொசிஷனிங்.
0Original price was: ₨ 1,660.0.₨ 1,494.0Current price is: ₨ 1,494.0.தொழில் தொடகுபவர்களுக்கன வழிகாட்டி.———————————உங்களை…உங்கள் தொழிலை…உங்கள் திறமையை…உங்கள் தயாரிப்பை…அடுத்தவர்கள்ரசிக்க…விரும்ப…வரவேற்க…அங்கீகரிக்க…நீங்கள் செய்ய வேண்டியது என்ன?உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான்.நிர்வாகவியலில் இந்த உத்திக்கு ‘பொசிஷனிங்’ என்று பெயர்.இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும்.ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. -
-10%
போர்த்தொழில் பழகு.
0Original price was: ₨ 1,950.0.₨ 1,755.0Current price is: ₨ 1,755.0.போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்கள், புத்திக்கூர்மையால் புதிய அரசுக்கு வித்திட்ட தளபதிகள் போன்று அரசாட்சிக்கு அடிகோலிய அத்தனை சாதுர்யங்களும், சரிவுக்குக் காரணமாய் அமைந்த மலிவான சூழ்ச்சிகளும் விரிந்து விரிந்து சொல்லப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கண்டடையும் வியூகங்கள் ஒவ்வொன்றாய் வாசகர் கண்முன் சித்திரங்களாய் விரிகின்றன.
-
-10%
ப்ளிங்க்- சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்
0Original price was: ₨ 3,990.0.₨ 3,591.0Current price is: ₨ 3,591.0.மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். -
-9%
மகாபாரதம்.
0Original price was: ₨ 1,375.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.
-
-10%
மணல் சமாதி.
0Original price was: ₨ 4,500.0.₨ 4,050.0Current price is: ₨ 4,050.0.-எண்பதை நெருங்கிக்கொண்டிருந்த பாட்டி விதவையானதும் படுத்த படுக்கையாகிவிட்டார்.குடும்பத்தினர் அவரைத் தங்களுக்குள் இழுக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். பாட்டிக்கோ ‘இனி நான்எழுந்திருக்கமாட்டேன்’ என்கிற பிடிவாதம்.பின்னர், இந்தச் சொற்கள் இப்படி மாறின: ‘இனி புதிதாய் மட்டுமே எழுந்திருப்பேன்’.பாட்டி எழுந்திருக்கிறார். முற்றிலும் புத்தம் புதிதாக. புதிய குழந்தைப் பருவம். புதிய இளமை. சமூகத்தின் தடைகளிலிருந்தும் மறுப்புகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுப் புதிய உறவுகளிலும் புதியஉணர்வுகளிலும் முழுவதும் சுதந்திரமாய், தன்னிச்சையாய் . . .கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது.இந்த நாவலின் கரு, காலகட்டம், ஒழுங்கமைதி, செய்தி அனைத்தும் தமக்கே உரித்தான தனித்துவம்நிறைந்த பாணியில் செல்கின்றன. நமக்குப் பழக்கமான எல்லைகளையும், எல்லை களுக்குஅப்பாலும், அனைத்தையும் நிராகரித்தும் தாண்டியும் செல்கின்றன. கூட்டுக் குடும்பம்தனிக்குடித்தனம், ஆண் – பெண், இளமை – முதுமை, உறக்கம் – விழிப்பு, அன்பு – வெறுப்பு, இந்தியா –பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லை களினூடே நாவல் பயணிக்கிறது.இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாயஜாலம்போலவும், இரண்டிற்குமிடையேயான வேறுபாட்டை அழித்தபடி துலங்கு கிறது. காலம் நிலையில்லாத் தன்மையில்புலப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் இறந்த காலத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. ஒவ்வொருகணமும் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. -
-10%
மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்?
0Original price was: ₨ 480.0.₨ 432.0Current price is: ₨ 432.0.இன்றைய சூழலில் அதிகரித்துவரும் மதவாத அரசியலின் ஆபத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் விரித்துக்கூறி மதச்சார்பின்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொடக்க காலம் அதன் வளர்ச்சி, அந்த இயக்கத் தலைவர்களின் ஆபத்தான சொல்லாடல்கள், அதனால் நாட்டில் விளைந்த கேடுகள் இவற்றுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணி போன்ற வரலாற்றுத் தகவல்கள் இடம் பெற்றுள்ள இந்நூலில், இந்தியாவில் சாதி, மதம், மொழி குறித்த கருத்துகள் பற்றிய தெளிவான விளக்கங்களும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
-9%
மம்பிள் மம்பிள் மழலையர் நாவல் (5+)
0Original price was: ₨ 1,375.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.அதென்ன மழலையர் நாவல்? பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளால் நாவல் படிக்க முடியுமா என்றெல்லாம் சிலருக்கு தோன்றலாம். இப்போதைய தலைமுறைக் குழந்தைகள் பாரமாக சிந்திக்கிறார்கள். படைப்பாற்றலுடன் இருக்கும் அவர்களின் எண்ணங்களுக்கு உரிய தீனி போட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
-
-10%
மலரும் சருகும்
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.தமிழ் நாவல் உலகில் தலித் மக்களின் வாழ்வியலை முதன் முதலாகச் சித்தரித்த படைப்பு.டேனியல் செல்வராஜ் சோசலிச யதார்த்தவாதத்தை தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். சிறந்த எழுத்தாளரான இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அடித்தட்டு மக்களுக்கான வழக்கறிஞராகக் கழித்தவர். 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தைத் (தமுஎகச) தோற்றுவித்த 32 எழுத்தாளர்களில் ஒருவர். மலரும் சருகும், தேநீர், அக்னிகுண்டம், தோல், மூலதனம், பொய்க்கால் குதிரை, அடுக்கம் ஆகிய நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்களை எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். -
-9%
மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்.
0Original price was: ₨ 880.0.₨ 800.0Current price is: ₨ 800.0.மலையகத்தின் அரசியல் தளத்தில் இயங்கிய 26 ஆளுமைகள் பற்றிய சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் பதிவு ஆறு தசாப்தங்கள் கழித்து நூல் வடிவம் பெறுகிறது. இது ஈழத்து அரசியல் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் பொக்கிசமாகும்.மலையக அரசியல் வரலாற்றை அறிய விரும்பும் யாரும் சி.வி. எழுதிய இந்த வரலாற்றுப் புதையலைக் கடந்துபோக முடியாது.