-
-10%
-
-11%
நோம் சோம்ஸ்கி.
0Original price was: ₨ 3,100.0.₨ 2,750.0Current price is: ₨ 2,750.0.நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம் , உளவியல் , சமூகவியல் , மொழியியல் , கணினியியல் , அரசியல் , விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர் அவரைப் பற்றியும் ஒரு மாமனிதரான உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது.
-
-10%
படிப்பது சுகமே!
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு இந்நூல் விளக்கித் தருகிறது.மாணவர்களின் படிப்புக்கும் தேர்வுக்கும் இந்நூல் ஒரு சிறந்த திறவுகோலாக இருக்கும். இந்நூல் ஊன்றிப் படிப்பவர்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பது உறுதி. -
-10%
பண்டைய நாகரிகம்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0.உயிரினங்கள் வாழமுடியும்.அவை ஒருகாலத்தில் சுருங்கத் தொடங்கும். அவை சுருங்கத்தொடங்கிய பின் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்காது என அறிவியல் அறிஞர் இசுடிபன் ஆக்கிங் கூறியுள்ளார். பூமியில் உயிரினங்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகள் ஆகிறது எனினும். மனித நாகரிகத்தின் காலம் 10.000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் முதல் நாகரிகமான சுமேரிய நகர அரசுகளின் நாகரிகம் யூப்ரடிசு. டைகிரிசு ஆறுகள் ஓடும் மெசபடோமியா பகுதியில் தோன்றியது. இப்பகுதியில் அதன்பின் அக்கேடியன். பாபிலோனியா. அசீரிய. பாரசீக. மிட்டணி, பார்த்திய. சசானிய நாகரிகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. அதேபோன்று எகிப்திலும், சிந்து சமவெளியிலும், சீனாவிலும், கிரீட் தீவிலும் நாகரிகங்கள் தோன்றின. -
-9%
பயமா எனக்கா?
0Original price was: ₨ 660.0.₨ 600.0Current price is: ₨ 600.0.குழந்தைகளை கை நீட்டி அடிக்க விரும்பாத பெற்றோரில் சிலர் கூட மறமுகமாக பயமுருத்தி, அதன்வழியே நினைத்த பணியை நிறைவேற்றிக்கொள்வது என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடங்கியது. குழந்தை சரியாகச் “சப்பிடவில்லையா? கூப்பிடு பூச்சாண்டியை “என்பதில் ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களில் பயமுறுத்துவது தொடர்கிறது.தேவையற்ற பய உணர்வு, குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. -
-9%
பழந்தமிழர் வணிகம்
0Original price was: ₨ 2,010.0.₨ 1,825.0Current price is: ₨ 1,825.0.நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று, அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திர மாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக் காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப்புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
-9%
பாடலும் ஆடலும்.
0Original price was: ₨ 495.0.₨ 450.0Current price is: ₨ 450.0.சபா.அருள்சுப்பிரமணியம் சிறுவர் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். சிறப்பாக சிறுவர்க்கான கவிதை, பேச்சு, பாட்டு, ஆடல் ஆகியவற்றில் அளப்பரிய பணியாற்றியவர்.25 ஆண்டுகளாக ஆசிரியப்பணியில் அனுபவம் பெற்றவர். தற்போது கனடாவில் வசிக்கும் இவர் அங்கு சிறார் பாடல் ஆடல்களுக்குப் புத்துயிர் ஊட்டி வருகிறார்.அறிவும் உணர்ச்சியும் ஊட்டும் இவரது கவிதைகள், எளிமையான வார்த்தைகளைக் கொண்டவை. சிறார் இனிமையாகப் பாடி ஆடக்கூடிய ஓசைநயம் மிக்கவை. சிறுவர் பாடல்கள் இக்குழந்தைக்கவிஞருக்குக் கைவந்த கலை. -
-10%
பாபாசாகேப்பின் பதிப்புலகம்: அறிவு மரபும் அதிகாரப்படுத்தலும்.
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0.பாபாசாகிப் அம்பேத்கரின் அறியப்பட்ட அடையாளங்களைத் தாண்டி “இதழாளர் அம்பேத்கர்” என்னும் பக்கத்தைத் திறந்து காட்டுகிறது இந்நூல். வாழ்ந்தபோதும் பின்னரும் ஊடகங்களால் பெருமளவு புறக்கணிக்கப்பட்ட அம்பேத்கரே ஊடகராகச் செயல்பட்டது வரலாறு. அம்பேத்கரின் சிந்தனை வெளிப்பாட்டிற்கும் செயல்பாடுகளுக்கும் ஊன்றுகோலாக இருந்த இதழியல் பணிகள் பற்றித் தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களைக் கொண்டு அறிமுகம் செய்திருக்கிறார் பா. பிரபாகரன்.அதிகம் படித்து, அரசியலில் நுழைந்த அம்பேத்கர் அன்றாடத்தோடு போராடிக்கொண்டிருந்த எளிய மக்களிடையே செயல்பட வேண்டியிருந்தது. இதழியலும் அன்றாடத்தோடு தொடர்புடையதுதான். அவருடைய நீண்ட கால நோக்கையும் அது அன்றாடத்தில் ஊடாடி முன்னகர்ந்த விதத்தையும் புரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.இந்திய ஊடகங்களில் தலித்துகளின் இடத்தைப் பொதுவான கேள்வியிலிருந்து தொடங்கும் நூல் அம்பேத்கரின் இதழியல் என்னும் குறிப்பான பொருளில் ஆழம் கண்டிருக்கிறது. தான் செயல்பட்ட காலத்தில் மற்றவர்களின் பார்வைக்குத் தெரியாத நுட்பங்களை அம்பேத்கர் நடத்திய இதழ்களின் சாரத்தைச் சொல்லுவதன் வழி விவரிக்கிறது இந்நூல். அம்பேத்கரைப் பற்றிய முழுமையை நோக்கிச் செல்லவும், முழுமையின் மத்தியில் வைத்து அவரைப் புரிந்துகொள்ளவும் இந்நூல் உதவும். -
-9%
பார்த்திபன் கனவு.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது.இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது.நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். -
-9%
பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு.
0Original price was: ₨ 330.0.₨ 300.0Current price is: ₨ 300.0.“அன்றிலிருந்து இன்று வரை ஃபலஸ்தீன போராட்டம் ஒரு வெகுஜன போராட்டமாகத்தான் இருந்து வருகிறது என்பதை வாசகர்கள் இந்தப் புத்தகத்தை படிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம்.”
-
-10%
பாலியல் அரசியல்.
0Original price was: ₨ 1,560.0.₨ 1,404.0Current price is: ₨ 1,404.0.கேற் மில்லற் தனது பாலியல் அரசியல் (1970)நூலில் பால்களுக்கு இடையிலுள்ள உறவு முறைகள் பற்றி முன்னணியான, மகத்தான அறிவு சான்ற புரச்சிகரமான பகுப்பாய்வினைச் செய்தார். அந்த ஆய்வு நம்முடைய வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் எவ்வாறு ஒரு தந்தைவழியாட்சியின் ஓரவஞ்சனை செயல் பட்டு வந்தது என்பதை வெளிப்படுத்தியது.அது நம்முடைய புராணங்களிலும் மதத்திலும் சமூக முறைமைகளிலும், மிக முக்கியமாக நம் இலக்கியத்திலும் செயல்பட்டு வந்ததென்பதைப் புலப்படுத்தியது.இந்த நூல் வெளிவந்து இருபதாண்டுகள் சென்றும் (1990) ஒரு பெண்ணின் பிரகடனம் என்ற அளவில், அதன் வல்லமையை இன்னமும் தக்கவைத்துள்ளது.மட்டுமின்றி அது மிக நேர்த்தியாக சிந்தித்து அருமையாக எழுதப்பட்ட கலாச்சார ஆய்வு வரலாற்று படப்பு என்ற தகுதிகளைத் தக்கவைத்து கொண்டுள்ளது. -
-9%
பிராத்தனையைப் பின்தொடர்ந்து.
0Original price was: ₨ 3,290.0.₨ 2,995.0Current price is: ₨ 2,995.0.வார்த்தைகளின் அழகைச் சொல்லும் அதே நேரத்தில் மௌனத்தின் அழகையும், அது நடத்தும் தொடர் உரையாடலையும் நாவல் சொல்கிறது. இசையின் மகத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில் ஒழுங்கின்மை கொண்ட ஓசைகளின் லயத்தையும் பேசுகிறது. தத்துவத்தைப் பாடமாகப் பல்கலைகளில் கற்பிக்கலாம் இல்லை இது போல நாவலாக இனிப்புத்தடவிய குளிகைகளாகவும் கொடுக்கலாம். முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. தெளிவான, சரளமான மொழிபெயர்ப்பை ஸ்ரீனிவாச ராமானுஜம் அளித்திருக்கிறார். இலக்கிய வாசகர்கள் தவறவிட வேண்டாம் என்று சொல்ல வைக்கும் நாவலிது.