தொடக்ககாலத்திலிருந்து மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை வளர்ச்சிகள் இந்நூலில் வரையறை செய்யப்பட்டுள்ளன. மொழி, அரசியலமைப்பு, விஞ்ஞானம், இனக்குழு சமுதாயம், தாய்வழிச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் போன்ற சமூகப்படிநிலை குறித்து விரிவாக ஆராயந்தெழுதப்பட்ட நூல். வழிபாடு, மத உருவாக்கம், சோசலிச மனித சமுதாயம், போர்கள், தத்துவங்களின் தோற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்ககால மார்க்சிய சோசலிசம், விஞ்ஞான மார்க்ஸியம் மற்றும் பெண்களின் வாழ்நிலை, ஆணாதிக்கச் சமூகம் விதித்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட மனித சமுதாய வளர்ச்சிநிலையின் முழுமையான வரலாற்றுப் பதிவுகளை இந்நூலில் காணலாம்.