-
-9%
பலவிதமான வீடுகள் (மலையாளச் சிறுகதைகள்)
0பலவிதமான வீடுகள்(மலையாளச் சிறுகதைகள்)-தொகுப்பும் மொழிபெயர்ப்பும் டி.எம். ரகுராம்.டி. எம். ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிறில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்த தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பசீர், எம்.டி. வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன்,,சந்தோஸ், ஏச்சிக்கானம், சித்திரா… என்பதாக கால வரிசைப்படுத்திப் பார்க்கிறேன்.கேரளத்திற்கு வெளியே இருப்பவர்கள் இப்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பது என்பது முடியுமா என்பது சந்தேகம்தான். மலையாளச் சிறுகதைகளின் கருத்தோட்டமும் நடைப்போக்கும் பதின்ம ஆண்டுகளில் எப்படி எல்லாம் மாறியிருக்கின்றன என்பதை இத்தொகுப்பு புலப்படுத்துகிறது -
-9%
பழந்தமிழர் வணிகம்
0நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று, அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திர மாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக் காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப்புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
-3%
பாசிசமும் சர்வாதிகாரமும் .
0இளமையும் ஆற்றலும் கொண்ட பிரெஞ்சு மார்க்சிய சிந்தனையாளர் நிகோஸ் புலண்ட்ஸஸ் 1970களில் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அல்தூசரிய அமைப்பியல் மார்க்சியராக இருந்தவர். பின்னாட்களில் ஜனநாயக சோசலிசவாதியாகப் பாராட்டப்பட்டார். சட்டவியல் ஆய்வாளராகப் பயின்று. அரசு குறித்த சிந்தனையில் புதிய எல்லைகளை எட்டினார். குறிப்பாக, பாசிச அரசு குறித்த அவரது ஆய்வுகள் பாசிச சமூக அமைப்பினுள் வர்க்கங்களில் தொழில்பாடு, தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல். கிரீஸ் ஆகிய நாடுகளில் பாசிசம் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் கவனம் கொண்டவர்.மொழிபெயர்ப்பாளர் அமரர் வேட்டை எஸ். கண்ணன். -
-9%
பாடலும் ஆடலும்.
0சபா.அருள்சுப்பிரமணியம் சிறுவர் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். சிறப்பாக சிறுவர்க்கான கவிதை, பேச்சு, பாட்டு, ஆடல் ஆகியவற்றில் அளப்பரிய பணியாற்றியவர்.25 ஆண்டுகளாக ஆசிரியப்பணியில் அனுபவம் பெற்றவர். தற்போது கனடாவில் வசிக்கும் இவர் அங்கு சிறார் பாடல் ஆடல்களுக்குப் புத்துயிர் ஊட்டி வருகிறார்.அறிவும் உணர்ச்சியும் ஊட்டும் இவரது கவிதைகள், எளிமையான வார்த்தைகளைக் கொண்டவை. சிறார் இனிமையாகப் பாடி ஆடக்கூடிய ஓசைநயம் மிக்கவை. சிறுவர் பாடல்கள் இக்குழந்தைக்கவிஞருக்குக் கைவந்த கலை. -
-9%
பாபாசாகேப்பின் பதிப்புலகம்: அறிவு மரபும் அதிகாரப்படுத்தலும்.
0பாபாசாகிப் அம்பேத்கரின் அறியப்பட்ட அடையாளங்களைத் தாண்டி “இதழாளர் அம்பேத்கர்” என்னும் பக்கத்தைத் திறந்து காட்டுகிறது இந்நூல். வாழ்ந்தபோதும் பின்னரும் ஊடகங்களால் பெருமளவு புறக்கணிக்கப்பட்ட அம்பேத்கரே ஊடகராகச் செயல்பட்டது வரலாறு. அம்பேத்கரின் சிந்தனை வெளிப்பாட்டிற்கும் செயல்பாடுகளுக்கும் ஊன்றுகோலாக இருந்த இதழியல் பணிகள் பற்றித் தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களைக் கொண்டு அறிமுகம் செய்திருக்கிறார் பா. பிரபாகரன்.அதிகம் படித்து, அரசியலில் நுழைந்த அம்பேத்கர் அன்றாடத்தோடு போராடிக்கொண்டிருந்த எளிய மக்களிடையே செயல்பட வேண்டியிருந்தது. இதழியலும் அன்றாடத்தோடு தொடர்புடையதுதான். அவருடைய நீண்ட கால நோக்கையும் அது அன்றாடத்தில் ஊடாடி முன்னகர்ந்த விதத்தையும் புரிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது.இந்திய ஊடகங்களில் தலித்துகளின் இடத்தைப் பொதுவான கேள்வியிலிருந்து தொடங்கும் நூல் அம்பேத்கரின் இதழியல் என்னும் குறிப்பான பொருளில் ஆழம் கண்டிருக்கிறது. தான் செயல்பட்ட காலத்தில் மற்றவர்களின் பார்வைக்குத் தெரியாத நுட்பங்களை அம்பேத்கர் நடத்திய இதழ்களின் சாரத்தைச் சொல்லுவதன் வழி விவரிக்கிறது இந்நூல். அம்பேத்கரைப் பற்றிய முழுமையை நோக்கிச் செல்லவும், முழுமையின் மத்தியில் வைத்து அவரைப் புரிந்துகொள்ளவும் இந்நூல் உதவும். -
-9%
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர்.
0செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்!உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை, ஜார்ஜ் எஸ். கிளேசன், சுவாரசியமான கதைகளின் வடிவில் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இன்றளவும் விற்பனையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற இந்நூல், சிக்கனம், சேமிப்பு, பாதுகாப்பான முதலீடு, கடின உழைப்பு, நேர்மை போன்ற அடிப்படை விஷயங்களின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது. -
-9%
பார்த்திபன் கனவு.
0பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது.இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது.நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். -
-9%
பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு.
0“அன்றிலிருந்து இன்று வரை ஃபலஸ்தீன போராட்டம் ஒரு வெகுஜன போராட்டமாகத்தான் இருந்து வருகிறது என்பதை வாசகர்கள் இந்தப் புத்தகத்தை படிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம்.”
-
-17%
பாலியல் அரசியல்.
0கேற் மில்லற் தனது பாலியல் அரசியல் (1970)நூலில் பால்களுக்கு இடையிலுள்ள உறவு முறைகள் பற்றி முன்னணியான, மகத்தான அறிவு சான்ற புரச்சிகரமான பகுப்பாய்வினைச் செய்தார். அந்த ஆய்வு நம்முடைய வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் எவ்வாறு ஒரு தந்தைவழியாட்சியின் ஓரவஞ்சனை செயல் பட்டு வந்தது என்பதை வெளிப்படுத்தியது.அது நம்முடைய புராணங்களிலும் மதத்திலும் சமூக முறைமைகளிலும், மிக முக்கியமாக நம் இலக்கியத்திலும் செயல்பட்டு வந்ததென்பதைப் புலப்படுத்தியது.இந்த நூல் வெளிவந்து இருபதாண்டுகள் சென்றும் (1990) ஒரு பெண்ணின் பிரகடனம் என்ற அளவில், அதன் வல்லமையை இன்னமும் தக்கவைத்துள்ளது.மட்டுமின்றி அது மிக நேர்த்தியாக சிந்தித்து அருமையாக எழுதப்பட்ட கலாச்சார ஆய்வு வரலாற்று படப்பு என்ற தகுதிகளைத் தக்கவைத்து கொண்டுள்ளது. -
-9%
பிராத்தனையைப் பின்தொடர்ந்து.
0வார்த்தைகளின் அழகைச் சொல்லும் அதே நேரத்தில் மௌனத்தின் அழகையும், அது நடத்தும் தொடர் உரையாடலையும் நாவல் சொல்கிறது. இசையின் மகத்துவத்தைச் சொல்லும் அதே நேரத்தில் ஒழுங்கின்மை கொண்ட ஓசைகளின் லயத்தையும் பேசுகிறது. தத்துவத்தைப் பாடமாகப் பல்கலைகளில் கற்பிக்கலாம் இல்லை இது போல நாவலாக இனிப்புத்தடவிய குளிகைகளாகவும் கொடுக்கலாம். முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. தெளிவான, சரளமான மொழிபெயர்ப்பை ஸ்ரீனிவாச ராமானுஜம் அளித்திருக்கிறார். இலக்கிய வாசகர்கள் தவறவிட வேண்டாம் என்று சொல்ல வைக்கும் நாவலிது.
-
-10%
பிழை இல்லாமல் எழுதுவோம்.
0எழுத்துபிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும்.எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப்பார்த்து எழுத வேண்டும். எழுதி முடிந்ததும் மீண்டும் படித்துப்பார்த்து சந்திப் பிழைகள் முதலியன இருப்பின் சரிப்படுத வேண்டும். -
-9%
பிள்ளைத் தீட்டு.
0சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். போர் பாதிப்பு, பெண் மனம், மன நோய் சார்ந்த விஷயங்களை கொண்டுள்ளன.நகரத்தில் வாழும் இளம் பெண் ஒருவரை காதலிக்க, பெற்றோர் கிராம விவசாயிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க, இறுதி முடிவை ஒரு கதை பேசுகிறது. இலங்கை ராணுவ பிடியில் இருந்த கிராமத்தை பாதுகாக்கும் சலவை தொழிலாளி கொல்லப்படுவதை, ‘துரோகம்’ என்ற கதை சொல்கிறது.போர் எங்கு நடந்தாலும் மனிதர்கள் துயரத்தை தான் சந்திப்பர் என்பதை வலியுறுத்தும் நுால்.