ஒரு விற்பனை மேலாளரின் வேலையில், விற்பனையாளர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களை நிர்வகித்தல், அவர்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். அதை எப்படிச் செய்வது என்பதை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். இந்நூலைப் படிக்கும் விற்பனை மேலாளர்களால், தங்களுடைய விற்பனைப் படையின் செயல்திறனை அதிகரிக்க முடியும், தங்கள் வேலையில் முன்னேற முடியும், அதன் ஊடாகத் தங்கள் வேலையில் திருப்தியை அனுபவிக்க முடியும். உலகப் புகழ் பெற்ற விற்பனை வல்லுநரான பிரையன் டிரேசி, வெற்றிகரமான விற்பனை மேலாளர்களை எது தனித்துவப்படுத்திக் காட்டுகிறது என்பது குறித்துப் பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். அந்தப் பல்லாண்டுகால அனுபவங்களை அவர் இந்தக் குட்டி நூலில் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார்.