-
-17%
எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம்
0இலக்கியப் படைப்பாக்கத்தின் வீரியமான காலமாக இருந்த எண்பதுகள் காலகட்டத்து கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்களையும் படைப்புத் தரம், விமர்சனப் பார்வை, இலக்கியச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விளக்கிச்செல்லும் இந்நூல் வாசக எளிமையோடு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பூமணி, டானியல், பாவண்ணன் ஆகிய படைப்பாளிகளின் படைப்புக்கள் பற்றிய மதிப்பீடுகளும், ‘பாரதீயம்’ நூல் பற்றிய மதிப்பீடும் தவிர பிற கட்டுரைகள் தமிழகப் பண்பாட்டுத் தளங்களைப் பற்றிய பொது அணுகுமுறைகளாக உள்ளன.
-
-9%
எதிர்ப்புக் குரல்கள்.
0இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த எதிர்ப்புக் குரல்களை எடுத்துக்கொண்டு, இந்தக் குரல்கள் இந்து சமயம் என்று இன்று பெயரிட்டு அழைக்கப்படும் சமயத்திலும் இந்தியச் சமூகத்திலும் ஏற்படுத்திய சலனங்களை ஆராய்கிறார். இந்தப் ‘பிறன்’களுக்கும் நிலைபெற்றுவிட்ட ‘தானு’க்கும் உள்ள உறவாடலையும் இந்த உறவாடல் பரஸ்பரம் உருவாக்கிய மாற்றங்களையும் சீரமைப்புகளையும் அறியத்தருகிறார். காந்தியின் சத்தியாகிரகத்தின் வெற்றியின் பின்னால் இந்த எதிர்ப்பு மரபு நுட்பமாகப் பிரதிபலித்ததையும் காட்டுகிறார். ஒவ்வொரு நவீன சமூகத்திலும் பேச்சுரிமையின் ஒரு பகுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமையும் குடிமகனுக்கு நிச்சயம் இருந்தாக வேண்டும். எதிர்ப்புக் கருத்துகளை விவாதத்திற்குட்படுத்த வேண்டும். எதிர்ப்பு என்றாலே வன்முறைப் புரட்சி என்று கொள்ளக் கூடாது; விடைகள் வேண்டி நிற்கும் தர்மசங்கடமான கேள்விகளைப் பண்பட்ட முறையில் விவாதிப்பதுதான் அதன் பொருள்.
-
-9%
எந்தக் கங்கையில் இந்தக் கைகளக் கழுவுவது.
0உள்ளடக்கத்தில் நேர்மையும், உருவத்தில் எளிமையும் விஜயேந்திரனின் அழகியல் எனலாம். தமிழ்த் தேசியத்தின் சுமையில் அவருடைய நேர்மை அமுங்கிப் போய்விடவில்லை. அநீதிக்கு எதிரான, நீதிக்கான, மனித விடுதலைக்கான, மனித மேன்மைக்கான குரலாக அவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன. இதில் சொல் விளையாட்டுக்கு இடம் இல்லை. வார்த்தைகளில் அலங்காரம் இல்லை. இயல்பான, நேரடியான படிமங்களால் அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அவை நம்முள் ஆழமான தாக்கத்தைச் செலுத்த வல்லவை. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எல்லாம் நாம் கடந்து வந்த வலிமிகுந்த காலத்தின் பதிவுகள். சமகால ஈழத்துக் கவிதையில், குறிப்பாக அரசியல் கவிதையில், விஜயேந்திரனின் இடத்தை இத்தொகுப்பு உறுதிப்படுத்துகின்றது என்பதை நான் அழுத்திக் கூறலாம்.
-
-9%
எல்லைப்புறம்.
0பாலுமை முக்கிய சரடாக இந்நாவல் முழுவதும் இழயோடுகிறது. காதலும் காமமும், தசையுணர்வும் ஆத்ம தியானமும், வெறியும் பழிவாங்கலும், வியப்பும் ஏமாற்றமும், உஸ்ணமான ஆசையும் சுகமான கனவும், கட்டுப்பாடுகளும் மீறலும், விதிகளும் ஒத்திசைவுகளும் என்று பல்வேறு உணர்வுகள் மோதும் களமாகவும் இந்த நாவல் கருக்கொள்கிறது.
-
-9%
எழுதித் தீராப்பக்கங்கள்.
0மூன்று நூற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள் தம்மை பதித்துக்கொண்டார்கள். அவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிய ஈழத் தமிழர்களில் முதல் தலைமுறையின் பிரதிநிதிகளில் செல்வம் அருளானந்தமும் ஒருவர்.ஈழத்திலிருந்து அகதியாக வெளியேறிய செல்வம் பாரீஸில் புகலிடம் தேடியவர். பின்னர் கனடாவில் புலம்பெயர்ந்தவரானார். இந்த மூன்று காலநிலைகளிலான தனது அனுபவங்களை மீள நினைவுகூர்வதே இந்த நூல். தன்னையும் தன்னைப் போன்ற வேர்பறிக்கப்பட்டவர்களின் பாடுகளையும் இந்த சுவிசேஷத்தில் வெளிப்படுத்துகிறார் செல்வம். நேற்றைய துயரங்களை இன்றைய வேடிக்கைகளாகப் பகிர்ந்துகொள்கிறார். நினைவுகளின் கசப்பையும் கண்ணீரின் உப்பையும் நகையுணர்வின் இனிப்போடு முன்வைக்கிறார். கூடவே யார் மீதும் பழிபோடாத செல்வத்தின் பேரிதயம் வேதனையைக் கடந்து மானுடத் தோழமையின் அமுதத்தைத் திரட்டி அளிக்கிறது. -
-9%
என்றென்றும் தாரா.
0உழுத்துப்போன ஒழுக்க நியதிகளைக் கிழித்தெறிந்த கலகக்காரியான கமலாதாஸ் வெவேறு காலகட்டங்களில் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.
-
-8%
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!
0சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான். மனிதர்களிலே சொற்களை நயமாக கையாளத் தெரிந்தவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் பாதாளத்தில் கிடப்பதையும் பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம் வாழ்வையே தீர்மானிக்கிறது;உரையாடலால் உயர்ந்தான் மனிதன்.மனிதன்,பேசும் திறனால் மகத்தானவன் ஆனான்.பேச்சு அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது.எழுத்து அவனை நாகரீகப்படுத்தியது. கடிதம் மனித இதயங்களை இணைத்தது.நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே மகத்துவம் உடையது என்பதை அறிந்து கொள்ளாமலே நாம் பயன்படுத்துகிறோம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. சரியான தருணத்தில் சரியான ஏற்ற இறக்கத்தோடு அவற்றை உச்சரிக்கும் போது அவை அசுரபலம் பெற்று விடுகின்றன! -
-9%
ஏவாளின் இரண்டாம் ஆப்பிள்.
0கதாபாத்திரங்களினூடாக ஆசிரியர் தனக்கே இயல்பான சமூகம், அரசியல், அடையாளம் முதலான விவாதங்களை துவக்கி வைத்திருப்பது இக்கதையை ஒரு காதல் கதைக்கப்பால் சமூக, அரசியல்கதையாகப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் தூண்டியிருக்கிறது. மொத்தத்தில் இக்கதைகள் நமக்கு புதிய அனுபவத்தை தருவன.
-
-9%
ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்)
0மனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல். ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல்.
-
-20%
ஏழாவது ஊழி (சுற்றுச்சூழல் கட்டுரைகள்.)
0சூழலியல் வெறுமனே கல்வி அல்ல, அது வாழ்க்கை. ரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஓர் அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல்,’ என்று பேசுகிற ‘ஏழாவது ஊழி’ நூல் பசுமை இலக்கியத்தையும் தாண்டித் தமிழிலும் தீவிரக் கவனம் கொள்ள வேண்டிய நூல்.சூழலியல் குறித்துப் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் இன்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அதன் அத்தனை கூறுகள் குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கும் பொ.ஐங்கரநேசன், ஈழத்தைச் சேர்ந்த சூழல் இதழியலாளர். தற்போது அங்கு வடக்கு மாகாண அமைச்சராக அவர் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. நாற்பத்தோரு கட்டுரைகள் அடங்கிய இந்நூலின் பேசுபொருள் புழு, பூச்சியில் தொடங்கிப் புவிவெப்பமாதல் வரைக்கும் விரிவானது. -
-9%
ஏழு போராளிகள் !
0இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல் சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்கப் போராடியவர்கள்.லட்சியங்களால் உந்தப்பட்ட இவர்கள் அனைவருமே காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர். சிலர் அவரைத் துதித்தனர். சிலர் அவரிடம் கருத்து வேறுபாடு கொண்டாலும் அவர் பாதையை ஏற்றார்கள்.உலகின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா கூறும் இந்தக் கதைகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பல புதிய புரிதல்களைத் தருகின்றன. பிரமிக்கவைக்கும் இந்தப் பதிவுகள் பல இடங்களில் நெகிழவும் வைக்கின்றன.இந்தியாவைத் தமது சொந்த நாடாக வரித்துக்கொண்ட இந்த ஆளுமைகளோடும் அவர்களின் வாழ்வோடும் நாம் நெருக்கம் கொள்ளும் வகையில் தியடோர் பாஸ்கரன் இதைத் தமிழில் தந்திருக்கிறார். -
-9%
ஏறுவெயில்.
01991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.