-
-9%
என்றென்றும் தாரா.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.உழுத்துப்போன ஒழுக்க நியதிகளைக் கிழித்தெறிந்த கலகக்காரியான கமலாதாஸ் வெவேறு காலகட்டங்களில் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.
-
-10%
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!
0Original price was: ₨ 7,800.0.₨ 7,020.0Current price is: ₨ 7,020.0.சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான். மனிதர்களிலே சொற்களை நயமாக கையாளத் தெரிந்தவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் பாதாளத்தில் கிடப்பதையும் பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம் வாழ்வையே தீர்மானிக்கிறது;உரையாடலால் உயர்ந்தான் மனிதன்.மனிதன்,பேசும் திறனால் மகத்தானவன் ஆனான்.பேச்சு அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது.எழுத்து அவனை நாகரீகப்படுத்தியது. கடிதம் மனித இதயங்களை இணைத்தது.நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே மகத்துவம் உடையது என்பதை அறிந்து கொள்ளாமலே நாம் பயன்படுத்துகிறோம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. சரியான தருணத்தில் சரியான ஏற்ற இறக்கத்தோடு அவற்றை உச்சரிக்கும் போது அவை அசுரபலம் பெற்று விடுகின்றன! -
-10%
ஒரு நாத்திகனின் பிரார்த்தனை.
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.பல்வேறு பிரிவினைகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும் உண்மையில் இம்மனித இனம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் சார்ந்தும் உதவியும் தான் தன்னை முன்னெடுத்துச் செல்ல விதிக்கப்பட்டது என்பது நிருபணம். அப்படித்தான் இந்த மனித விலங்கினம் பரிணாமம் பெற்று வந்திருக்கிறது. மனித எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன.
-
-9%
ஒரு யோகியின் சுயசரிதம்.
0Original price was: ₨ 1,980.0.₨ 1,800.0Current price is: ₨ 1,800.0.இந்தப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகின்ற அதேநேரம், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்கும் வாழ்க்கை வரலாற்றையும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர்.ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம். -
-9%
ஒற்றுமை.
0Original price was: ₨ 220.0.₨ 200.0Current price is: ₨ 200.0.அவரிடம் அதிக செல்வம் இருப்பதாக பிறர் கூரினர்.இவ்வாறு பிறர் சொல்லுவதை அவர் மறுத்துக் கூறவில்லை.ஒருமுறை அவர் நோயுற்றார். அவரது செல்வம் எங்கே இருக்கிறது என அவரது பிள்ளைகள் அவரிடம் கேட்டனர். தனது செல்வம் தனது வயலுள் இருப்பதாக அவர் கூரினார். அவர் சொல்லியதை உண்மை என அவரது பிள்ளைகள் நம்பினர். -
-10%
ஒற்றைக் கதவு.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.கவித்துவமான வரிகள் ஆனால் கவிதை உறுஞ்சப்பட்ட வாழ்வு, தத்துவங்களின் பெருமழை, என அபூர்வமான அனுபவம் சந்தோசின் எழுத்து.
-
-9%
ஓய்வு பெற்ற ஒற்றன்.
0Original price was: ₨ 1,375.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.சொந்த நிலம் திரும்ப முடியாத ஒருவன் தான் தரித்து நிற்கும் நிலமும், புது முகங்களும்.ஆச்சரியம் மிக்க அனுபவங்களும் குளிர் நிலத்தில் காற்றில் அசைந்து பறக்கும் இலைகள் நிலைத்தை வந்தடைவது போல் தமிழுக்கு வந்திருக்கிறது.
-
-10%
கங்கணம்.
0Original price was: ₨ 2,340.0.₨ 2,106.0Current price is: ₨ 2,106.0.வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள் இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்னிகள்’ எனப் பெயர்சூட்டி நவீன இலக்கியம் பேசியதும் ஒருகாலத்து வரலாறு. இன்று திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களை ‘முதிர்கண்ணன்கள்’ எனலாமா? அப்படி ஒரு முதிர் கண்ணனின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் ‘கங்கணம். பெருமாள்முருகனின் நான்காவது நாவல் இது. 2008இல் வெளியாகிக் கவனம் பெற்ற இந்நாவலைக் காலம் இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியிருக்கிறது. இதன் கதாநாயகன் மாரிமுத்துவைத் தாங்களாக இனம் காணுவோர் பலர். ஒற்றை மாரிமுத்துவைப் பல்கிப் பெருக்கியிருக்கிறது காலம்.
-
-10%
கடைசிக் கட்டில்.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0.என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை.ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது. -
-10%
கதை கேட்கும் சுவர்கள்.
0Original price was: ₨ 2,400.0.₨ 2,160.0Current price is: ₨ 2,160.0.வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.உமா ப்ரேமன் என்கிற இம்மனுசியை இது தன் சகல அகங்காரத்தோடும் அலைக்கழித்தது.இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய் பூத்து நிக்கிறள், அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகம்மாகிறது. -
-10%
கல்மேல் நடந்த காலம்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம்.
-
-9%
கல்வியில் வெற்றிகரமான கற்றல்-கற்பித்தல்.
0Original price was: ₨ 440.0.₨ 400.0Current price is: ₨ 400.0.சிறந்ததொரு ஆரம்பக்கல்வி ஆசிரியர் வெறுமனே பயிற்சி நூல்களை மட்டும் நம்பியிருக்கமாட்டார்.தனது கற்பித்தலினூடாக மாணவருக்கு விடயங்களை விளக்குவார். மாணவர்களின் சுயசிந்தனையை விருத்தி செய்யத்தக்க முறையில் மாணவர்களுக்கு கற்பிப்பார்.