• -9%

    குறுந்தொகை.

    0
    எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. . ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.
    உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
    பாடியோர் இத்தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.
    இந்நூலில் அமைந்துள்ள பல் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். ‘அனிலாடு முன்றிலார்’, ‘செம்புலப்பெயல் நீரார்’, ‘குப்பைக் கோழியார்’, ‘காக்கைப்பாடினியார்’ என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
    Original price was: ₨ 2,010.0.Current price is: ₨ 1,825.0.
    Add to cart
  • -10%

    குற்றமும் கருணையும்.

    0

    உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இள வயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் இது. நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஒரு அதிகாரி, சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் எவ்வளவு சாதனைகள் படைக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இந்தக் கதைகள். சரியான அணுகுமுறை இருந்தால், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்ற முடியும் என்பதற்கும் திருத்தவே முடியாது என்று கருதப்படுவோரிடத்திலும் மனமாற்றம் நிகழும் என்பதற்கும் இந்தப் புத்தகம் சிறந்த சான்றாவணம். காவல் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி எழுப்பும் ஆற்றல் கொண்ட நிகழ்வுகள் இவை.

    Original price was: ₨ 1,525.0.Current price is: ₨ 1,375.0.
    Add to cart
  • -9%

    கூட்டு குஞ்சுகள்.

    0

    1979ம் ஆண்டு உலகச் சிறுவர் ஆண்டாகக் கொண்டாடப் பெற்றது. இந்த ஓராண்டுக் காலத்தில் உலகு தழுவிய வகையில் சிறுவர் நலன், கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பல அமைப்புக்கள் உருவாயின. நம் நாட்டிலும் அரசைச் சார்ந்ததும், தனிப்பட்ட முறையிலும் சிறுவர் நல வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவது பற்றியும், சமுதாயத்தின் பின் தங்கிய பகுதிகளின் பிரச்சினைக்குரிய சிறுவர் நிலை பற்றியும் ஆராய்வதற்கான பல குழுக்கள் அமைந்தன. அத்தகைய குழுக்களில் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இந்த வாய்ப்பு எனக்கு உழைக்கும் சிறுவர் தொடர்பான உண்மை நிலைகளைப் பரிச்சயம் செய்து கொள்ள உதவியது.

    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart
  • -9%

    கூன் விழுந்த காலம்.

    0

    பழக்கப்பட்ட பறவையின் குரல் கேட்டது சட்டைப்பைக்குள் அடங்கியிருக்கும் அலைபேசியை தொட்டுப் பார்த்தேன். அது அதிர்வில் இல்லை கணத்தின் கிளையிலிருந்து கால் நழுவி பதறியது மனம். நிஜத்தில் எழுந்த அந்தக் குரல் எங்கே என்று தேடினேன். காண்பாரற்ற கதியில் விடைப்பெற்றிருந்தது பறவை.

    Original price was: ₨ 550.0.Current price is: ₨ 500.0.
    Add to cart
  • -9%

    கொரோனாவுடன் வாழுதல்.

    0
    இவர் கொரோனா கால கட்டுரைகளில் தனது அரசியல் பார்வையையும் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார். நேய்க்கிருமியை வைத்து வல்லரசுகள் ஆடிய சதுரங்க விளையாட்டைத் தமது கட்டுரைகள் மூலமாக தெளிவாக படம் பிடித்துள்ளார்.
    ஒரு குறித்த காலத்தின் உலகப் பெரும் அவலத்தை பேசும் இக்கட்டுரைகள் தொகுப்பாக வெளிவருவது பதிவு மட்டுமில்ல, வரலாற்று ஆவணமுமாகும்.
    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -7%

    கொலுஷா.

    0

    உலக கதைகளின் ஒரு வெட்டுமுகத்தை இத்தொகுப்பில் காண்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கதைகளிலிருந்து மிக அண்மைக்கால கதைகள் வரை , நீண்ட காலப்பகுதியை தரிசிக்க இதொகுப்பு உதவுகிறது.

    Original price was: ₨ 805.0.Current price is: ₨ 750.0.
    Add to cart
  • -10%

    கொன்றைவேந்தன். ஒளவையார்.

    0
    நம்மை சற்று முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டில்கூட “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு”? என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றியிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
    அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார்.
    Original price was: ₨ 200.0.Current price is: ₨ 180.0.
    Add to cart
  • -9%

    சங்கேத செலாவணி.

    0

    இந்த ஒரு இலக்கணம் crypto currency என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு இன்றைய வர்த்தகத்தில் முக்கிய இடத்தை மெளனமாக பிடித்து வரும் ஒரு பொருண்மைக்கும் பொருந்தும் மின் எண்ணியியல் யுக மாற்றத்தின் அடுத்த அடையாளமாகும். இந்த மின் எண்ணியியல் செலாவணிகள் பல கா ரணங்களுக்காக மறைக்குறியீடுகளால் அடையாளப் படுத்தப்படுகின்றன. ஒரு நாணயத்தின் மதிப்பை இரும சங்கேத எண்களாக் காட்டுவதைத்தான் இங்கே மறைக்குறியீட்டாக்கம் என்று சொல்கின்றோம். இவற்றைப் பற்றிய புரிதல் பொது மக்களுக்குத் தேவை. ஏனெனில் நாளைய பொருளாதார உலகு இந்த எண்ணியியல் செலாவணிகளைச் சார்ந்ததாக இருக்கக் கூடும். மின் எண்ணியியல் செலாவணியின் ஒரு பிரிவே இந்த மறைக்குறியீட்டாக்க சங்கேத செலாவணி.

    Original price was: ₨ 770.0.Current price is: ₨ 700.0.
    Add to cart
  • -2%

    சமகால கல்வித் திரட்டு.

    0

    மார்க்கண்டு கருணாநிதி என்பவர் கல்வியியலாளர். இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வியியல் தொடர்பான ஆய்வுகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்வியியல் துறை தொடர்பாகவும் கலைத்துறை தொடர்பாகவும் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டுள்ளார்.

    Original price was: ₨ 615.0.Current price is: ₨ 600.0.
    Add to cart
  • -9%

    சமகாலக் கல்விமுறைகள்: ஒரு விரிநிலை நோக்கு.

    0
    சமகாலக் கல்விச் செல்நெறிகளை விளங்கிக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட அந்த செய்நெறிகளுக்குப் பின்னால் மறைந்துள்ள அரசியலையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
    அப்பொழுதுதான் “ நமக்கான கல்வி” மரபுக்கான உள்ளீடுகள் வளமாக இருப்பதை உத்தரவாதப்படுத்த முடியும்.
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart
  • -9%

    சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடுகளும்.

    0

    கவிதை உருவாக்கம், கவிதை முறைப்பாடு, கவிதைச் செல்நெறிகள், சக கவிஞர்களின் கவிதைகள் மீதான விமர்சனங்கள் எனத் தமிழ்க் கவிதையியல் குறித்த பதிவுகளில் தவிர்க்க இயலாததாக உருப்பெற்றுள்ளது இந்நூல்.

    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,500.0.
    Add to cart
  • -9%

    சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி – 01

    0
    கடந்த காலத்தினை கறாராக மீள்மதிப்பிடுவது மட்டுமல்ல, இன்றைய காலத்தினதும் அரசியல், சமூகத்தளங்களை செப்பனிட்டு முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையும் அவசியமும் நம்முன் உள்ளது.
    அதற்கான அடிப்படைகளையும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்குமான மனிதத்தின் அடியாழத்தையும் இந்த எழுத்துக்கள் நம் முன் வைக்கின்றன, வலியுறுத்துகின்றன.
    Original price was: ₨ 1,430.0.Current price is: ₨ 1,300.0.
    Add to cart