• -9%

    காட்டாறு.

    0

    ஆர்ப்பாட்டம் இல்லாத அடங்கிய மெல்லிய குரலில் சொல்லப்பட்டுள்ள இக்கதைகள் வாசக மனதில் நேரடியாக வலுவான தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன.

    Original price was: ₨ 440.0.Current price is: ₨ 400.0.
    Add to cart
  • -9%

    காட்டில் ஒரு மான்.

    0

    அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்துவருகிறது. ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித் திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலையும் (Face Behind the Mask, 1984) எழுதியிருக்கிறார்.

    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart
  • -9%

    காட்டின் குரல் கேட்கிறதா?

    0

    மோப்பம் பிடிக்கும் யானைகள், கொத்தாத பாம்பு, கிளையுள்ள பனைமரம், ஆண் பப்பாளி மரம்-பெண் பப்பாளி மரம், தேளைப் போல் கொட்டும் புல், மனிதர்களைக் கண்டு அஞ்சாத பறவைகள் என பல அம்சங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

    Original price was: ₨ 1,460.0.Current price is: ₨ 1,330.0.
    Add to cart
  • -9%

    காட்டுப்பன்றி புராணம்.

    0
    சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன்,அரச கால்நடை வைத்தியர்.2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தமிழ் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் விலங்குகள்,கால்நடை மருத்துவம்,கால்நடை உற்பத்தி தொடர்பாக எழுதி வருபவர்.’காட்டுப் பன்றி புராணம்’இவரது முதல் அச்சு நூல்.
    2013ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பத்திரிகைகளில் வெளிவந்த 18கட்டுரைகளின் தொகுப்பு இது.
    விலங்குகளின் நடத்தைகள்,மனித விலங்கு மோதல்,அவற்றுக்குரிய தீர்வுகள்,அன்றாடம் விலங்குகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒவ்வொரு கட்டுரைகளும் ஆராய்கின்றன.பல கட்டுரைகளில் ஆசிரியரின் கால்நடை வைத்திய அனுபவங்கள் வெளிப்பட்டு நிற்கிறது.
    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -10%

    காணாமல் போன சில ஆண்டுகள்.

    0

    ஒரு சாதாரண விசயத்தையும் நல்ல கவிதையாக்கும் ரசவாதம் பறூக்குக்கு கைவந்த கலை என்பதற்கு இத்தொகுப்பு நல்லதொரு சாட்சி.

    Original price was: ₨ 410.0.Current price is: ₨ 370.0.
    Add to cart
  • -16%

    காதலின் நாற்பது விதிகள்

    0

    தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.

    Original price was: ₨ 3,500.0.Current price is: ₨ 2,950.0.
    Add to cart
  • -9%

    காந்தப்புலம். மனப் பயணக் குறிப்புகள்.

    0

    காந்தப்புலம் (Magnetic field) ஞானவெளியை ஈர்க்கப் பார்க்கிறது. இடையில் காதல் மலர்கிறது, பிரிவு ஏற்படுகிறது, போரினால் தொடர் இடப்பெயர்வு. ஆழ்மனம் தொடர்ந்து பயணம் செய்யும் போது தூல உடல் நிலைகொள்ளாது காட்டிலும் மேட்டிலும் நடந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. காண்பன மறைகின்றன. மறைந்தவை தோன்றுகின்றன. இறந்தகாலமும் எதிர்காலமும் பாதைமாறி ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. மொழிநடை பலநேரங்களில் வாய்மொழிக்கதை வடிவத்தைப் பின்பற்றுகிறது. சமீபத்தில் ஒரு இளைஞர் கன்னிமுயற்சியாக இதே போன்ற நாவலுக்கு முயன்றார். அவருக்குக் கூடிவரவில்லை, இவருக்குச் சித்தித்திருக்கிறது. தீவிர இலக்கியத்தில் பயிற்சிபெற்ற வாசகர்கள் ரசித்துப் படிக்கக்கூடிய படைப்பு.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -9%

    காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். காலரா காலத்தில் காதல்.

    0
    காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் அலாதியானது.
    காலராப் பெருந்தொற்றை வரலாற்றுப் பின்புலமாகவும் காதலின் குறியீடாகவும் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கொலொம்பிய நாட்டின் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது.
    Original price was: ₨ 3,250.0.Current price is: ₨ 2,950.0.
    Add to cart
  • -9%

    காலத்தால் அழியாத கலைஞர்கள்.

    0

    தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களின் மறக்க முடியாத பங்களிப்பினை விளக்கும் கட்டுரைகள் அடங்கிய முக்கியமான தொகுப்பு. சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் அவர்கள் எப்படியெல்லாம் சோபித் திருக்கிறார்கள், எங்ஙனமெல்லாம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு எப்படிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை உரையாடல் மற்றும் காட்சி ரூபமாய் விளக்கும் சுவையான, ரசனை மிக்க, சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய முக்கியமான கட்டுரை நூல். தலைமுறை தாண்டி காலத்துக்கும் அறிய, பாதுகாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நூல்.

    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,500.0.
    Add to cart
  • -9%

    காலமும் கலையும்.

    0

    பல சிற்றிதழ்களிலும், அவற்றின் ஆண்டு மலர்களிலும், பல்வேறு நூல்களில் முன்னுரையாகவும் தோழர் அமரந்த்தா அவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய அரிய தொகுப்பு இது. வரலாற்று நீரோட்டப் போக்கிலேயே செல்லாமல் அமரந்த்தா அதனை எதிர் நின்று பார்ப்பதால், பலருக்கும் புலப்படாத ஏகாதிபத்திய செயல்பாடுகளை – கார்ப்பரேட் உலகின் புதிய திருவிளையாடல்களை – மக்கள் முன் அவர் வைத்துள்ளார். அமரந்த்தா தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியாக இருந்து தனது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்திருப்பது, மக்களின் மேல் அவருக்குள்ள அன்பைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும்.

    Original price was: ₨ 2,200.0.Current price is: ₨ 2,000.0.
    Add to cart
  • -9%

    கிகோர்.

    0

    கிகோர் என்னும் இந்த காவிய நூல் உலகம் முழுவதிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு ஆர்மோனிய திரைப்பட இயக்குனர் Amasi martirosyan ஆல் 1934 ஆம் ஆண்டிலும், அஸர்பைஜான் திரைப்பட இயக்குனர் Sergey Israelyan ஆல் 1982 ஆம் ஆண்டிலும் திரப்படங்களாக வெளிவந்து பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்ற கதையாகும்.

    Original price was: ₨ 330.0.Current price is: ₨ 300.0.
    Add to cart
  • -6%

    குழந்தை உளவியலும் கல்வியும்.

    0

    குழந்தை உளவியல்,குழந்தை கல்வி, குழந்தை வளர்ப்புமுறை முதலாம் துறைகளிலே பரவலான ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. வளர்ந்த நிலையில் ஏற்படும் விலகல் நடத்தைகளுக்கும் இடர்களுக்கும்குழந்தை நிலை வளர்ப்பில் நிகழ்ந்த தவறான அணுகுமுறைகளும்,ஆதரவு இன்மையுமே முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

    Original price was: ₨ 705.0.Current price is: ₨ 660.0.
    Add to cart