-
-9%
இன்பத்தமிழ்-2 செயல்நூல். தமிழ் மொழியும் இலக்கியமும்.
0Original price was: ₨ 430.0.₨ 390.0Current price is: ₨ 390.0.மாணவர்கள் பாடத்தை செவ்வனே விளங்கிக் கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சி வினாக்கள் உள்ளன. நேரடியாகப் பதில் எழுதக் கூடிய வினாக்களுடன் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலான வினாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடநூலிலுள்ள பாடத்தை வாசித்து நன்கு விளங்கியபின் வினாக்களுக்கு விடைகளை எழுத தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
-
-9%
இன்பத்தமிழ்-3 செயல்நூல். தமிழ் மொழியும் இலக்கியமும்.
0Original price was: ₨ 540.0.₨ 490.0Current price is: ₨ 490.0.மாணவர்கள் பாடத்தை செவ்வனே விளங்கிக் கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சி வினாக்கள் உள்ளன. நேரடியாகப் பதில் எழுதக் கூடிய வினாக்களுடன் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலான வினாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடநூலிலுள்ள பாடத்தை வாசித்து நன்கு விளங்கியபின் வினாக்களுக்கு விடைகளை எழுத தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
-
-10%
இஸ்லாத்தில் சமூக நீதி.
0Original price was: ₨ 2,580.0.₨ 2,322.0Current price is: ₨ 2,322.0.உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார்.
-
-10%
-
-10%
ஈழத்தில் தமிழ் இலக்கியம்.
0Original price was: ₨ 1,440.0.₨ 1,296.0Current price is: ₨ 1,296.0.பண்டைக்காலம் முதலே ஈழத் தமிழிலக்கியத்திற்கு என்று தனித்த வரலாறு உண்டு என்பதை வரலாற்றியல் பார்வையில் விளக்குவதுடன், உரை நடை இலக்கியத்தின் வளர்ச்சியானது இலங் கையின் பூர்வீகக் குடிகளான இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமியத் தமிழர், வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து குடியிறக்கம் செய்யப்பட்ட மலையகத் தமிழர் என்ற வேறுபாடுகள் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. தனித்தன்மை களுடன் அவரவர் வாழ்நிலைமைகளை உள்ளடக்கியதாக ‘மண் வாசனை’ இலக்கியங்களாக அவை அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது.இலங்கைத்தமிழ் மக்கள் மலையகம், மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் என்ற மையப் புள்ளிகளில் புவியியல் பொருளாதார நடவடிக்கைகள்,சமூக கட்டிறுக்கம் ஆகியவற்றின் ஒருமித்த கண்ணோட்டத்தைப் பெற்றிருக்காத நிலையில் அவற்றை ஒருங்கிணைக்கும் முகமாக “ஈழத் தமிழிலக்கியத்தில் மண்வாசனை” கோஷம் முன் வைக்கக்ப் பட்டிருக்கிறது, -
-10%
உலக நாடோடிக் கதைகள்.
0Original price was: ₨ 750.0.₨ 675.0Current price is: ₨ 675.0.மனித நம்பிக்கைகள், மன உறுதி, நல்லதே நடக்கும் என்ற மனப்பாங்கு, சிக்கலில் இருந்து மீள்வதற்கான அறிவார்ந்த வழிமுறை, பிரச்சினைகளைத் தீர்க்கும் விதம் போன்றவை இக்கதைகளில் மிளிருகின்றன. சுயநலமும், கொடூரமனமும் கொண்ட மனிதர்கள் முடிவில் நாசமாய் போகிறார்கள். அநீதிகள் அழிந்து நீதிநிலைக்கும் என்பதையும் இக்கதைகள் எடுத்துக்கூறுகின்றன.
-
-9%
உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் –
0Original price was: ₨ 1,570.0.₨ 1,425.0Current price is: ₨ 1,425.0.தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த உரைநடை வடிவம், ஒருவர் தாம் நினைத்ததை நினைத்தவாறு எழுத உதவியது. ஆனால், உலகளவில் கட்டுரைகளின் வளர்ச்சி என்னவாக இருக்கிறது, அவை உண்டாக்கிய தாக்கத்தால் என்னென்ன பயன்கள் விளைந்தன என்பது குறித்து தமிழில் குறைந்த அளவே பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், உலக வரலாற்றில் மறுக்கவும், மறக்கவும் முடியாத இடத்தைப் பிடித்த தலை சிறந்த 24 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதில் கி.பி.1597 கால கட்டத்தில் எழுதப்பட்ட பிரான்சிஸ் பேக்கன் கட்டுரைகள் முதல் 1965-இல் எழுதிய மால்கம் எக்ஸ் வரையிலான எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக அக்காலச் சமுதாயத்தின் முற்போக்குவாதிகளை பெண் கல்வி வாயிலாக அடையாளம் காட்டும் டானியல் டீஃபா, அடிமைகளுக்கு மத்தியில் ஒரு கலப்பின பெண்ணின் அடையாள போராட்டத்தை விளக்கும் ஜோரா நீல் ஹர்ஸ்டன், விஞ்ஞானப் பார்வையில் உலகின் அழிவை கண் முன் நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை கோரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், காதல் பிடிக்காத தத்துவ அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகளின் ஆழமான கருத்துகளை இந்த கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.பழங்குடியினர் உரிமை, அறிவியல், அரசியல், எழுத்து, வாசிப்பு, தத்துவம், உணவு எனப் பல்வேறு பொருள்களை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு காலத்தில் தோன்றிய எழுத்துகளை அறிய இந்நூல் வழிகாட்டும். அறிவுத் தேடல் கொண்டவர்களும், மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். -
-10%
உள்ளொளிப் பயணம்.
0Original price was: ₨ 1,980.0.₨ 1,782.0Current price is: ₨ 1,782.0.குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதான காதலாகவும் ஜீவன்கள் மீதான நேசமாகவும் இப்படி எண்ணற்ற உயர்பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதை தெளிந்த நடையில் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.முடிவின்றித் தொடரும் உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப் படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது. -
-10%
-
எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம்
0₨ 600.0இலக்கியப் படைப்பாக்கத்தின் வீரியமான காலமாக இருந்த எண்பதுகள் காலகட்டத்து கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்களையும் படைப்புத் தரம், விமர்சனப் பார்வை, இலக்கியச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விளக்கிச்செல்லும் இந்நூல் வாசக எளிமையோடு அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பூமணி, டானியல், பாவண்ணன் ஆகிய படைப்பாளிகளின் படைப்புக்கள் பற்றிய மதிப்பீடுகளும், ‘பாரதீயம்’ நூல் பற்றிய மதிப்பீடும் தவிர பிற கட்டுரைகள் தமிழகப் பண்பாட்டுத் தளங்களைப் பற்றிய பொது அணுகுமுறைகளாக உள்ளன.
-
-9%
எதிர்ப்புக் குரல்கள்.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த எதிர்ப்புக் குரல்களை எடுத்துக்கொண்டு, இந்தக் குரல்கள் இந்து சமயம் என்று இன்று பெயரிட்டு அழைக்கப்படும் சமயத்திலும் இந்தியச் சமூகத்திலும் ஏற்படுத்திய சலனங்களை ஆராய்கிறார். இந்தப் ‘பிறன்’களுக்கும் நிலைபெற்றுவிட்ட ‘தானு’க்கும் உள்ள உறவாடலையும் இந்த உறவாடல் பரஸ்பரம் உருவாக்கிய மாற்றங்களையும் சீரமைப்புகளையும் அறியத்தருகிறார். காந்தியின் சத்தியாகிரகத்தின் வெற்றியின் பின்னால் இந்த எதிர்ப்பு மரபு நுட்பமாகப் பிரதிபலித்ததையும் காட்டுகிறார். ஒவ்வொரு நவீன சமூகத்திலும் பேச்சுரிமையின் ஒரு பகுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமையும் குடிமகனுக்கு நிச்சயம் இருந்தாக வேண்டும். எதிர்ப்புக் கருத்துகளை விவாதத்திற்குட்படுத்த வேண்டும். எதிர்ப்பு என்றாலே வன்முறைப் புரட்சி என்று கொள்ளக் கூடாது; விடைகள் வேண்டி நிற்கும் தர்மசங்கடமான கேள்விகளைப் பண்பட்ட முறையில் விவாதிப்பதுதான் அதன் பொருள்.
-
-10%
எழுதித் தீராப் பக்கங்கள்.
0Original price was: ₨ 1,650.0.₨ 1,485.0Current price is: ₨ 1,485.0.மூன்று நூற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள் தம்மை பதித்துக்கொண்டார்கள். அவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிய ஈழத் தமிழர்களில் முதல் தலைமுறையின் பிரதிநிதிகளில் செல்வம் அருளானந்தமும் ஒருவர்.ஈழத்திலிருந்து அகதியாக வெளியேறிய செல்வம் பாரீஸில் புகலிடம் தேடியவர். பின்னர் கனடாவில் புலம்பெயர்ந்தவரானார். இந்த மூன்று காலநிலைகளிலான தனது அனுபவங்களை மீள நினைவுகூர்வதே இந்த நூல். தன்னையும் தன்னைப் போன்ற வேர்பறிக்கப்பட்டவர்களின் பாடுகளையும் இந்த சுவிசேஷத்தில் வெளிப்படுத்துகிறார் செல்வம். நேற்றைய துயரங்களை இன்றைய வேடிக்கைகளாகப் பகிர்ந்துகொள்கிறார். நினைவுகளின் கசப்பையும் கண்ணீரின் உப்பையும் நகையுணர்வின் இனிப்போடு முன்வைக்கிறார். கூடவே யார் மீதும் பழிபோடாத செல்வத்தின் பேரிதயம் வேதனையைக் கடந்து மானுடத் தோழமையின் அமுதத்தைத் திரட்டி அளிக்கிறது.