நூலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜான் பெர்க்கின்ஸுக்கு சொற்பொழிவாற்றுவதற்கு உலகெங்கிலுமிருந்து அழைப்புகள் வந்து குவிந்தன. அப்போக்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சவப் பொருளாதாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஜீவப் பொருளாதாரத்தை அரியணையேற்ற வேண்டியதற்கான அவசியம் குறித்தத் தன்னுடைய செய்தியை அவர் உலகெங்கும் எடுத்துச் சென்று, பெருநிறுவனங்களின் உச்சி மாநாடுகள், அந்நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகளின் கூட்டங்கள், தொழிலதிபர்களின் கூட்டங்கள், நுகர்வோர் மாநாடுகள், இசைத் திருவிழாக்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் சொற்பொழிவாற்றினார்.
ஏபிசி, என்பிசி, சிஎன்என், சின்பிசி, என்பிஆர், ஏ&இ, ஹிஸ்டரி சேனல் ஆகியவற்றில் அவர் தோன்றியுள்ளார். டைம், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், காஸ்மோபாலிட்டன், எல்லே, டெர் ஸ்பீகல் மற்றும் பல பத்திரிகைகள் அவரைப் பேட்டி கண்டுள்ளன. ‘லெனன் ஓனோ கிரான்ட் ஃபார் பீஸ்’ மற்றும் ‘த ரெயின்ஃபாரஸ்ட் ஆக்ஷன் நெட்வொர்க் சேலஞ்சிங் பிசினஸ் அஸ் யூசுவல்’ ஆகிய விருதுகளை ஜான் பெற்றுள்ளார்.