கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன.
இத்துறையில் நிகழ்ந்துவரும் அண்மைக்காலத்தைய ஆய்வுகளை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வறுமையாலும் சமூக நிராகரிப்புக்களாலும் இடர் தழுவிய கற்போர் அல்லது ஆபத்து விளிம்பிலுள்ள கற்போரின் எண்ணிக்கையும் பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
அவர்களை வளமான கல்விச் செயல்முறையில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் எழுகோலம் கொண்டுள்ள சமகாலச் சூழலிற் பயன்கருதி இந்நூலாக்கம் முன்வைக்கப்படுகிறது.