சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன்,அரச கால்நடை வைத்தியர்.2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தமிழ் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் விலங்குகள்,கால்நடை மருத்துவம்,கால்நடை உற்பத்தி தொடர்பாக எழுதி வருபவர்.’காட்டுப் பன்றி புராணம்’இவரது முதல் அச்சு நூல்.
2013ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பத்திரிகைகளில் வெளிவந்த 18கட்டுரைகளின் தொகுப்பு இது.
விலங்குகளின் நடத்தைகள்,மனித விலங்கு மோதல்,அவற்றுக்குரிய தீர்வுகள்,அன்றாடம் விலங்குகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒவ்வொரு கட்டுரைகளும் ஆராய்கின்றன.பல கட்டுரைகளில் ஆசிரியரின் கால்நடை வைத்திய அனுபவங்கள் வெளிப்பட்டு நிற்கிறது.