ஒரு வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்? மறைக்கப்பட்ட நிகழ்வுகளை நிலைநிறுத்தி, மறக்கப்பட்ட மனிதர்கள் மீது ஒளி பாய்ச்சி, திணிக்கப்பட்ட பொய்களைத் தோலுரித்து, தீர்க்கமான உண்மைகளை முன்வைத்து, ஆதிக்கவாதிகளின் ஆலாபனை களை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல், குரலற்றவர்களின் இருள் பக்கங்களையும் எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். மூன்றரை நூற்றாண்டு காலனி ஆதிக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை, பேசப்படாத கோணங்களில் அணுகுகிறது இந்தப் புத்தகம்.
இந்திய மண்ணில் இப்படியும்கூட நிகழ்ந்திருக்கிறதா என்று வியப்பையும் வலியையும் ஒருசேரத் தருகின்றன இந்தச் சரித்திரத்தின் பக்கங்கள். அதிகாரத்திலிருந்த வெள்ளையனின் ஆணவத்தையும், அடிமையாக உழன்ற இந்தியனின் விசும்பலையும் மிக நெருக்கமாக உணரச் செய்கிறது ஆசிரியரின் எழுத்து. காலனி ஆதிக்க இந்தியாவின் வெளிப்படாத தரிசனம்.