-
-9%
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்.
0சங்ககாலம் தொடக்கம் தேசிய எழுச்சிக் காலம் வரையான காலப்பகுதியில் வாழ்ந்த ஈழத்துப் பூதன்தேவனார் முதல் இலக்கிய கலாநிதி சு. நடேசபிள்ளை வரையான, புலவர்கள் இந்நூலில் உள்ளடங்குகின்றனர். ஒவ்வொரு புலவர் குறித்துமான அறிமுகத்தையும் அவரால் இயற்றப் பெற்ற சிறந்த பாடல்கள் சிலவற்றையும் தொகுப்பானது உள்ளடக்கியுள்ளது.
-
-9%
உசேன் போல்டின் கால்கள்.
0இந்நூலில் உள்ள பன்னிரெண்டு சிறுகதைகளும் யாரோ ஒருவரின் அல்லது பலரின் மறந்து போன குளிர்கண்ணாடிகள்தாம். அவர்கள் மறந்து நடந்து போவதை அவர்கள் கண்களின் வழியேயும் அல்லது கண்ணாடியின் கண்களின் வழியேயும் பார்வையாகியுள்ளன.
-
-9%
உணவு சரித்திரம் 2.
0உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன.பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால்புதிய புதிய.புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது. -
-9%
உண்மை சார்ந்த உரையாடல்.
0-1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்பு. படைப்பாளி, அரசியல் கட்டுரையாளர், துறவி, நாடகாசிரியர்… …. அல்லது பகுத்தறிவாளர், ஆன்மீகவாதி, மனித உரிமைப் போராளி, பின்நவீனத்துவக் கலைஞர், தத்துவ அறிஞர், புதிய முறை கதைசொல்லி… எனப் பல முறைகளில் வகைப்படக்கூடிய – அதே நேரத்தில் எந்த வரையறையையும் மீறி நிற்கக்கூடிய – பன்முக ஆளுமைகளின் மனம் திறந்த பதிவுகள் இவை. காலச்சுவடு 50 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.
-
-9%
உமா மகேஸ்வரி கவிதைகள் பகுதி 1.
0பொதுவாகவே படைப்பாளியின் இந்த உணருகையில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப் படுகின்றார்கள்.ரணம் குதறத் தொடர்ந்துவாழ்ந்துகாலங்கள் உதிர்ந்த பிறகும்நினைக்க எதுவுமற்றுதேய்மானமுற்ற பதிவுகளைப்பொறுக்கித் திறந்துமுதலில் கண்டேன்உன் புதிய முகமொன்றை.பூரித்த தசைகள்புன்னகையில் மினுங்க,அரண்களின் உடைவில்நுழைந்து கசிந்துபெருகினாய் மறுபடி நீ.சுறாக்கள் அசையும்ஆழ் கடலாகஉவர்க்கத் தொடங்கியதுஎன் உலகம். -
-9%
உமா மகேஸ்வரி கவிதைகள். பகுதி-2.
0உணர்தலின் நிகழ்கின்ற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள்.ஆனால் அது அதிசயம் அல்ல யதார்த்தம்…..பொய்களும், நிஜங்களும்கலந்து குழம்பும்உறவுகளின் குடுவைநிரம்பி வழிய,உதாசீனமாய் ஆடுகின்றனபிரபஞ்சத்தின் மாபெரும் பாதங்கள்.கைதவறி உடைந்தகண்ணாடிக் கிண்ணத்தின்சில்லுகள்சிதறிப் பறக்கின்றனநான்துடைத்துத் தூய்மைப் படுத்த முடியாதசிக்கலின் வெளி நோக்கி. -
-9%
உயிரோடு நானாக.
0கிழக்கு மாகாணத்தை பிரதிபலித்த படைப்புகள் மிக அரிதாகவே வெளி வந்துள்ளன். அதுவும் திருகோணமலை அதன் இதயமாகக் கருதப்படும் கிராமங்கள் யுத்த காலத்தில் ஏற்பட்ட வலிகளை சொல்லி மாளாது. இந்த நாவலில் சொல்லப்படும் கிராமங்களின் காலத் துயர் கதைகளாய் எம்முள் புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. -
-25%
உருவமற்ற என் முதல் ஆண்.
0சொல்லில் விவரிக்க முடியாத சோகமும் வாழ்வின் குரூரங்களும் இந்தத் தொகுப்பெங்கும் விரவி இருந்தாலும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய தில்லை, இந்த வாழ்க்கை வாழத்தக்கதுதான் என்றும் அத்தனை அவலங்களையும் தாண்டி வாழ்வதற்குத் தேவையான, இனிமையும் மனிதநேயமும் நிரம்பியது என்ற நம்பிக்கையை விதைக்கும் ஏராளமான பெருந்தருணங்களையும் கொண்டிருக்கும் தொகுப்பா அமைந்திருந்திருக்கிறது.
-
-9%
உலக நாடோடிக் கதைகள்.
0மனித நம்பிக்கைகள், மன உறுதி, நல்லதே நடக்கும் என்ற மனப்பாங்கு, சிக்கலில் இருந்து மீள்வதற்கான அறிவார்ந்த வழிமுறை, பிரச்சினைகளைத் தீர்க்கும் விதம் போன்றவை இக்கதைகளில் மிளிருகின்றன. சுயநலமும், கொடூரமனமும் கொண்ட மனிதர்கள் முடிவில் நாசமாய் போகிறார்கள். அநீதிகள் அழிந்து நீதிநிலைக்கும் என்பதையும் இக்கதைகள் எடுத்துக்கூறுகின்றன.
-
-9%
உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் –
0தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த உரைநடை வடிவம், ஒருவர் தாம் நினைத்ததை நினைத்தவாறு எழுத உதவியது. ஆனால், உலகளவில் கட்டுரைகளின் வளர்ச்சி என்னவாக இருக்கிறது, அவை உண்டாக்கிய தாக்கத்தால் என்னென்ன பயன்கள் விளைந்தன என்பது குறித்து தமிழில் குறைந்த அளவே பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், உலக வரலாற்றில் மறுக்கவும், மறக்கவும் முடியாத இடத்தைப் பிடித்த தலை சிறந்த 24 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதில் கி.பி.1597 கால கட்டத்தில் எழுதப்பட்ட பிரான்சிஸ் பேக்கன் கட்டுரைகள் முதல் 1965-இல் எழுதிய மால்கம் எக்ஸ் வரையிலான எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக அக்காலச் சமுதாயத்தின் முற்போக்குவாதிகளை பெண் கல்வி வாயிலாக அடையாளம் காட்டும் டானியல் டீஃபா, அடிமைகளுக்கு மத்தியில் ஒரு கலப்பின பெண்ணின் அடையாள போராட்டத்தை விளக்கும் ஜோரா நீல் ஹர்ஸ்டன், விஞ்ஞானப் பார்வையில் உலகின் அழிவை கண் முன் நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை கோரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், காதல் பிடிக்காத தத்துவ அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் எனப் பல துறைகளில் சிறந்து விளங்கிய ஆளுமைகளின் ஆழமான கருத்துகளை இந்த கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.பழங்குடியினர் உரிமை, அறிவியல், அரசியல், எழுத்து, வாசிப்பு, தத்துவம், உணவு எனப் பல்வேறு பொருள்களை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு காலத்தில் தோன்றிய எழுத்துகளை அறிய இந்நூல் வழிகாட்டும். அறிவுத் தேடல் கொண்டவர்களும், மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். -
-13%
உள்ளொளிப் பயணம்.
0குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதான காதலாகவும் ஜீவன்கள் மீதான நேசமாகவும் இப்படி எண்ணற்ற உயர்பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதை தெளிந்த நடையில் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.முடிவின்றித் தொடரும் உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப் படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது. -
-9%
உனக்கு நான் எனக்கு நீ.
0மாலை ஐந்து மணிக்கு அவளுக்கு வேலையிலிருந்து விடுதலை.ஆனால் நான்கு மணியிலிருந்து ஐந்து மணி அவகாசத்திற்குள் இரவு நேர ரிஸப்ஷனிஸ்ட் வந்து வேலையை ஒப்புக்கொள்ளுமுன் மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போன்றதொரு எரிச்சலில் அவள் தவித்துப் போனாள்.