ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர்யானை என ஆப்ரிக்க உயிரினங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். நம் நாட்டு உயிரினங்களைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?
சென்னை மாநகரில் வெளிமான் குட்டி ஒன்றை வளர்க்க முயன்ற அனுபவம் முதல் சட்டைப்பையில் தஞ்சமடைந்த சின்னஞ்சிறு வௌவால் வரை காட்டுயிர்களின் உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது இந்த வண்ணப் புத்தகம்.
நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்புள்ள சிட்டுக்குருவி, மயிலைப் பற்றி மட்டுமல்லாமல் சோளக்குருவி, செண்பகம், சங்குவளை நாரைகளின் வாழ்க்கையையும் திறந்துகாட்டுகின்றன பறவைகள் குறித்த கட்டுரைகள்.
நம்மிடையே வாழும் அணில், உணவு தேடிவரும் கீரிப்பிள்ளை, ஆர்வக் குறுகுறுப்பு மிகுந்த நீர்நாய், மாட்டினங்களிலேயே மிகப் பெரிதான காட்டு மாடு போன்ற தமிழக உயிரினங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம்.
இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும்.