• -9%

    சாயங்கால மேகங்கள்.

    0

    சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறி விட்டது. இனி அவற்றைத் துணித்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும், மனத்தாலும் முடியாதபோது-உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே ‘பூமி’ இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழமுடியாது. தீரர்களே வாழமுடியும்.

    Original price was: ₨ 605.0.Current price is: ₨ 550.0.
    Add to cart
  • -23%

    சாயத்திரை.

    0

    விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத – அல்ல, மறக்கக் கூடாத – புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.

    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,150.0.
    Add to cart
  • -20%

    சார்த்தர்: விடுதலையின் பாதைகள்.

    0
    சார்த்தரின் நூறாண்டு நிறைவின் போது, கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ கிராண்மா’ எழுதியது:
    மார்க்ஸ் திட்டமிட்ட சோசிலசத்தை, அதன் தூய்மையான வடிவத்தில் சார்த்தர் எடுத்துக் கொண்டார், அந்த சோசிலசம் மே 1968 போராட்டத்தின் தோல்வியாலும் சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை. இந்தத் தனிநபர்களும் அந்தக் கனவுகளும் கடந்த காலத்துக்கல்ல, எதிர்காலத்துக்குரியவை.”
    மாபெரும் சிந்தனையாளராக, படைப்பிலக்கியவாதியாக, நாடகாசிரியராக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக, காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளராக , 1968 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் ஆதர்சங்களிலொருவராகத் திகழ்ந்த ழான் பால் சார்த்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்நூல். அவற்றை பின்னணியாகக் கொண்டு அவரது தத்துவம், இலக்கியப் படைப்புகள், அரசியல், சமூகச் செயல்பாடுகள் ஆகியன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart
  • -9%

    சிக்கந்தாபுரம்.

    0

    சிக்கந்தாபுரம் எனும் இந்த நாவல் இஸ்லாமியர்களைப்பற்றிப்பேசுகிறது. ஆனால் இஸ்லாமிய நாவல் அல்ல. அனைத்து தரப்பு வாசகர்களும் சிக்கலின்றி வாசிக்கும் வகையில் நாவலின் களம் இயங்குகிறது.

    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -9%

    சிதம்பர நினைவுகள். மலையாள மூலம்

    0

    மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -9%

    சிலப்பதிகாரம். மூலமும் உரையும்.

    0

    சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களிலொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபிலுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை யுரைப்பது; முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறலும் வாய்ந்த சேரமுனியாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது; கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற்சுவை பொருட்சுவை சான்றது.

    Original price was: ₨ 3,300.0.Current price is: ₨ 3,000.0.
    Add to cart
  • -9%

    சிறகை விரித்துப் பறப்போம்.

    0
    நம் முன்னோர்கள் மனிதரின் குணாம்சங்கள் விலங்கினங்களுக்கும் இருப்பதாக உருவகித்து காலாதிகாலமாக நமது சிறார்களின் மனதுக்குள் அவற்றை பதியம்வைத்து அதையே உண்மையென நம்பும் வகையில் கதைகளை சிருஷ்டித்துத் தந்திருக்கிறார்கள். குள்ளப்புத்தி நரிக்குள் புகுத்தப்படும். காட்டின் ராஜாவாக சிங்கத்திற்கு முடிசூடியும், பறவைகளில் அசிங்கமானது காகமெறும் பிள்ளைகளை நம்பவிக்கப்படுகின்றனர்.
    சிங்கம் அறியுமா காட்டின் தலைவன் என்று? நரி எந்த அடிப்படையில் குள்ள நரியாகியதென்பது அதற்கு தெரியுமா? உண்மையில் காகம் தான் ஆசியாவில் உள்ள பறவையினத்தில் மக்களுடன் ஒன்றிணைந்து நெருங்கி பழகும் பறவை என்பது இன்றைய அறிவியல்.
    Original price was: ₨ 550.0.Current price is: ₨ 500.0.
    Add to cart
  • -7%

    சிறுவர் பாடல்.

    0
    பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம் கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் பல வருடங்களாகத் தமிழ்ப் பாடநூற் பகுதி எழுத்தாளராக, பிரதான பதிப்பாசிரியராக, தலைவராக கடமையாற்றி பல பாடநூல்களை வெளியிட்ட இவரின் நூல்கள் இலங்கை சாகித்திய மண்டலம், இலங்கை அபிவிருத்தி சபை, இலங்கை அரச கருமமொழித் திணைக்களம் ஆகியவற்றின் பரிசிகளையும் பாராட்டுகளையும் பெற்றவை.
    ஜாதகக் கதைகள், தாய்லாந்து சிறுவர்களின் நாட்டார் கதைகள் ஆகியவை இவரது ஏனைய சிறுவருக்கான ஆக்கங்களாகும்.
    Original price was: ₨ 405.0.Current price is: ₨ 375.0.
    Add to cart
  • -9%

    சுமித்ரா.

    0

    நாவல் என்ற கலை வடிவம் அதன் அளவில் அல்ல அமைப்பில்தான் உள்ளது.என்று நிறுவிய புகழ்பெற்ற மலையாள நாவல் இது.

    Original price was: ₨ 825.0.Current price is: ₨ 750.0.
    Add to cart
  • -18%

    சுயராஜ்யம் யாருக்கு?

    0
    Original price was: ₨ 1,600.0.Current price is: ₨ 1,320.0.
    Add to cart
  • -9%

    சூஃபி கதைகள்.

    0
    மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான்.
    ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக்கொணர்ந்து சூஃபிகள் ஆகி விடுகின்றனர். மற்றவர்கள் மூடப்பட்ட விதைகளாக, முளைக்காமலேயே இருந்து விடுகின்றனர். மனித வாழ்வின் முழுமைக்கு சூஃபிகள் ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை. எனினும் கடலின் அடியில் கிடக்கும் முத்துக்கள் போல் அவை மக்களால் உணரப்படாமலேயே உள்ளன.சூஃபிகளின் வாழ்க்கை.
    சூஃபிகளின் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்தச் சமயங்களிலும் இல்லை. நீதிக் கதைகளில் சொல்லப்படுவதுபோல் இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்பது போன்ற நேரிடையான விளக்கங்கள் எதுவும் அதில் சொல்லப்பட்டிருக்காது. ‘பொல்லாத உலகம் இது. இதில் அறிவாளிக்கும் அபராதம்தான். முட்டாளுக்கும் அபராதம்தான்’ என்கிறார்.
    சூஃபி ஞானி சா அதி. ‘உலக வாழ்க்கை துன்பமயமானது’ என்கிறார் புத்தர்.சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் தொடர்ந்து பயணித்தால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. யார் எந்த வழியில் பயணித்தாலும் முடிவில் அங்குதான் சென்று சேருவார்கள் என்கிறது அது.
    Original price was: ₨ 1,830.0.Current price is: ₨ 1,665.0.
    Add to cart
  • -9%

    சூஃபியிசம் என்றால் என்ன?

    0

    இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. மேற்குலகில் அந்தக் கேள்விக்கு அண்மைக் காலத்தில் ஒருவித போலித்தனமான, சந்தேகத்திற்குரிய சில பதில்கள் தரப்பட்டுள்ளன. மட்டுமின்றி, சூஃபியிசம் குறித்த ஆர்வமும் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு நம்பத்தகுந்த அறிமுக நூலின் தேவை மென்மேலும் அதிகரித்துள்ளது. அத்தகு அறிமுக நூலின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது. அறிமுக நூல் எனும்போது, அதனை வாசிப்பதற்குச் சிறப்பு அறிவுப் பின்னணி எதுவும் தேவையாக இருப்பதில்லை. அதுபோலவே, நம்பத்தகுந்த நூல் எனும் போது, அது உண்மையின் ஆழத்தைச் சமரசப்படுத்தும் அளவுக்கு எளிமைப்படுத்தப்படுவதும் இல்லை.

    Original price was: ₨ 605.0.Current price is: ₨ 550.0.
    Add to cart