-
-9%
தரூக்.
0ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இங்கிலாந்துக் குடிமக்களையும் இன்று வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஆசிய நாடுகளின் குடிமக்களையும் இணைகோடுகளாகச் சித்திரிக்கிறது நாவலின் கதை.இடப்பெயர்வு ஏற்படுத்தும் சலனங்களினூடே மாறிவரும் மனித உறவுகளையும் உணர்வுகளையும் நுண்ணுணர்வுடன் சித்திரிக்கிறது. நேரடியான காட்சிகளையும் குறியீடுகளையும் கொண்ட கதையாடல் பல்வேறு நுட்பங்களையும் அடுக்குகளையும் கொண்டு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.‘நட்சத்திரவாசிகள்’ என்னும் தனது முதல் நாவலுக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது நாவல் இது. -
-9%
தாயுமானவன்.
0சென்னையும் அதன் சுற்றுப்புறமும் பத்து மணிக்கு அடங்கிவிடுகின்றன. பதினொன்றுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிடுகின்றன. பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்கு ஊர் சின்ன பரபரப்புக் காட்டும் புரண்டு படுத்துத் தோளைச் சொறிந்து எழுந்து ஒரு முடக்கு தண்ணீர் குடிக்கிற மாதிரி இரவுக் காட்சி சினிமா முடிந்த பிறகு கொஞ்சம் முனகும். இரண்டு மணிக்கு உலுக்கினாலும் எழுப்பாத தூக்கம்.பம்பாய் இரண்டு மணிக்குத்தான் தூங்கவே போகுமாம். பத்து மணிக்கு ஜே ஜே என்று இருக்குமாம். பன்னிரண்டு மணிக்கு ஒரே சிரிப்பும் கும்மாளமும் தானாம். -
-9%
தியானம்.
0தியானம்’ என்ற இந்நூலில், உலகப் புகழ் பெற்ற ஆன்மிக ஆசானான ஸ்ரீ எம், தியானம் குறித்தும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதன் பலன்கள் குறித்தும் உங்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கிறார். தியானம் என்பது உலகம் நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றுகின்ற ஒரு பண்டைய வழக்கமாகும். ஸ்ரீ எம் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் பல்வேறு பண்டைய உரைகளிலிருந்தும் தான் கைவசப்படுத்தியுள்ள அறிவைக் கொண்டு, வயது வித்தியாசமின்றி எவரொருவரும் தங்களுடைய அன்றாட வாழ்வில் தியானத்தை எளிதாகக் கடைபிடிக்கக்கூடிய விதத்தில் அதன் பல சிக்கலான அம்சங்களை எளிமையான மற்றும் சுலபமான வழிமுறைகளாகக் கூறுபோட்டுக் கொடுத்திருக்கிறார்.
-
-9%
திராவிட இயக்க வரலாறு.
0திராவிட இயக்கம் என்பது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச்சமூகத்தில் தோன்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இந்த திராவிட இயக்கம் மூலம் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த சமூக நீதிகளும், கல்வி வாய்ப்புகளும் அளப்பரியது. இதன்மூலம் தமிழ்ப்பண்பாட்டு உணர்ச்சிகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் தட்டி எழுப்பியது. இந்த உணர்வும், எழுச்சியும், மங்கிப்போகாமல் காப்பது நம் கடமை.இந்தி எதிர்ப்பு, சமூக நீதி, தமிழ்நாட்டிற்க்கான சுயாட்சி, போன்ற அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்வதிலும் திராவிட அரசியல் மிகக்கவனம் பெறுகிறது.இந்நிலையில் திராவிட இயக்கம் குறித்த வரலாறை நாம் வாசிக்கவும், அதன் சிந்தனைகளைத்தக்கவைப்பதிலும் நமக்கு மிகவும் கடமையாகிறது.தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திராவிடத்தத்துவத்தை மேடைகள் தோறும் பரப்புரை செய்தவரும், கட்சி அரசியலில் மாற்றம் கண்டாலும் அடிப்படை திராவிடச்சிந்தனையில் மாற்றம் காணாமல் வாழ்ந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் “திராவிட இயக்க வரலாறு” என்னும் நூலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு எமது நன்னூல் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். -
-9%
திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1) அல்ஃபாத்திஹா, அல்பகறா: 1-188
0இது ‘வழமையான மற்றுமொரு’ திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல.
மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி!
1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது.
-
-9%
திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 2)
0இது ‘வழமையான மற்றுமொரு’ திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல. மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி! 1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது.
-
-9%
திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 3)
0இது ‘வழமையான மற்றுமொரு’ திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல.
மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி!
1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது.
-
-9%
திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 4)
0இது ‘வழமையான மற்றுமொரு’ திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல. மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி! 1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது.
-
-9%
திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 5)
0இது ‘வழமையான மற்றுமொரு’ திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல.
மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓர் முயற்சி இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த, அதேயளவு குழம்பியும் போயுள்ள இன்றைய சமூகத்தின் விடிவுக்கான வழிகாட்டலை குர்ஆனிலிருந்து அகழ்ந்தெடுத்து முன்வைப்பதற்கான ஓர் முயற்சி!
1950-60களில் எகிப்தின் சிறைக் கொட்டடிகளின் இருளில் எழுதப்பட்ட இந்நூல், உண்மையைத் தேடும் உள்ளங்களில் ஒளியைப் பாய்ச்சும் வல்லமை மிக்கது.
-
-9%
திருக்குறள் பரிமேலழகர்… (கருத்துரையுடன்)
0உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் பொதிந்து கிடக்கிறது அழகும், எளிமையும் திருக்குறளின் மற்றொரு சிறப்பு. அப்படிப்பட்ட திருக்குறள் நூலுக்கு எத்தனையோ சான்றோர் புலவர் பெருமக்கள், தமிழறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஒவ்வொருவர் உரையும் சிற்சில மாறுபாடுகளுடன் விளங்கினாலும் குறளின் பன்முகப் பொருண்மையையே இது காட்டுகிறது.
-
-9%
திருத்தி எழுதிய தீர்ப்புகள்.
0கவிதை என்பது ஒரு மொழியின் புடைப்பு சிற்பம் நூற்றாண்டுகள் கடந்தும் காலத்தின் தடமாய் நிற்பது எனவே தன் சமூகத்தை தன் மக்களை தன் சிறப்பை மட்டுமின்றி சிதிலத்தையும் பிரதிபலிக்க வேண்டியது அதன் கட்டுப்பாடுவைரமுத்து நம் காலத்தில் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக் கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டனதனி நபர்களையல்ல ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள் இந்ததொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களை தம் பயணப் பாதைகளாக்கி கொள்கின்றன.ஆயினும் இப்போது பிறந்தது போன்ற தோற்றத்தையும் அனுபவத்தையும் எப்போதும் தருகின்றன.மனித குலம் முழுமைக்குமான மகிழ்ச்சி என்பதே வைரமுத்து கவிதைகளின் சாரம் இந்த தொகுப்பும் அவருடைய எல்லாத்தொகுப்புகளும் இதைத்தான் தம் மெளன முன்னுரையாக எப்போதும் சொல்கின்றன. -
-9%
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908.
01908 மார்ச் 13. வெள்ளிக்கிழமை.கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல்.ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.