ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு ‘வாழும் மாமலை’. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள அவரது ஆழ்ந்த புலமை, அக்கறை ஆகியவற்றின் வெளிப்பாடு இப்படைப்பு. இயற்கையுடன் மேற்கொள்ள வேண்டிய உறவைப் பற்றிய அறிதல் குறைபாட்டினாலும் பேராசையினாலும் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம், அதன் விளைவாக ஏற்பட்டுவரும் பேரழிவுகள் ஆகியவற்றின் பின்னணியில் நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் படைப்பு.