-
-9%
மம்பிள் மம்பிள். மழலையர் நாவல் (5+)
0அதென்ன மழலையர் நாவல்? பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளால் நாவல் படிக்க முடியுமா என்றெல்லாம் சிலருக்கு தோன்றலாம். இப்போதைய தலைமுறைக் குழந்தைகள் பாரமாக சிந்திக்கிறார்கள். படைப்பாற்றலுடன் இருக்கும் அவர்களின் எண்ணங்களுக்கு உரிய தீனி போட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
-
-9%
மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்.
0மலையகத்தின் அரசியல் தளத்தில் இயங்கிய 26 ஆளுமைகள் பற்றிய சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் பதிவு ஆறு தசாப்தங்கள் கழித்து நூல் வடிவம் பெறுகிறது. இது ஈழத்து அரசியல் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் பொக்கிசமாகும்.மலையக அரசியல் வரலாற்றை அறிய விரும்பும் யாரும் சி.வி. எழுதிய இந்த வரலாற்றுப் புதையலைக் கடந்துபோக முடியாது. -
-9%
மலையகச் சுடர்மணிகள்.
0உடல் உழைப்பைத் தவிர வேறெதனையுமே அறிந்திராத மக்கள் கூட்டமாக, இரு நூற்றாண்டுகாலமாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையக சமூகத்திலிருந்து கல்வித் தீபமேந்தி, அறியாமை இருளை அகற்ற மூன்னின்று உழைத்த பெருமக்களின் வரலாற்றை தொகுத்துக் கூறும் நூல் இது.
-
-9%
மலையகத்தின் எழுச்சித் தலைவர். பெ. சந்திரசேகரன்.
0மலையகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஓர் அரசியல் தலைவரின் உயர்ந்த குணாம்சங்களைச் சித்திரிக்கும் மலையகத்தின் எழுச்சித் தலைவர் என்ற இந்தநூல் ஒரு தீபஸ்தம்பமாக விளங்கும் என்று நம்புகிறேன்.
-
-9%
மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்.
0கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு அரசியல் நகர்வுகளைக் குறித்த இந்தத் தொகுப்பு ஒவ்வொரு அரசியல் கட்சியின் உள்ளார்ந்த நிலைப்பாடுகளை விமர்சிக்கிறது. அதன் உள் நோக்கங்களை ஆராய்கிறது. இதன் மூலம் அந்தக் கட்சிகளின் நிறத்தை வாசகர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறது.
-
-9%
மனமும் இடம்பெயரும்.
0தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம் பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராக அறியப்படுபவர்.சிறு வயது முதலே எழுத்துலகில் பிரவேசித்த அவர் தொடர்ந்து எழுதுவதைத் தவமாக மேற்கொண்டு வருபவர். அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக “மனமும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளி வருகின்றது -
-19%
மனித சமுதாயம்
0தொடக்ககாலத்திலிருந்து மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை வளர்ச்சிகள் இந்நூலில் வரையறை செய்யப்பட்டுள்ளன. மொழி, அரசியலமைப்பு, விஞ்ஞானம், இனக்குழு சமுதாயம், தாய்வழிச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் போன்ற சமூகப்படிநிலை குறித்து விரிவாக ஆராயந்தெழுதப்பட்ட நூல். வழிபாடு, மத உருவாக்கம், சோசலிச மனித சமுதாயம், போர்கள், தத்துவங்களின் தோற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்ககால மார்க்சிய சோசலிசம், விஞ்ஞான மார்க்ஸியம் மற்றும் பெண்களின் வாழ்நிலை, ஆணாதிக்கச் சமூகம் விதித்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட மனித சமுதாய வளர்ச்சிநிலையின் முழுமையான வரலாற்றுப் பதிவுகளை இந்நூலில் காணலாம்.
-
-9%
மாயக்குதிரை.
0கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன் சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்வாகின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திருந்த, எழுத்தின் வலிமையையும் சாத்தியங்களையும் பற்றிய வியப்பையும் மதிப்பையும் மீண்டும் ஒரு முறை உசுப்பி மலர்த்தியிருக்கின்றன. அந்தளவில் தமிழ்நதிக்கு என் நன்றி. இவை, மொழிகளிடையே கூடுபாய்ந்து மனங்களிலெல்லாம் கூடுகட்ட விழைவதாக உணர்கிறேன்.
-
-9%
மாற்றமுறும் கல்வி முறைமைகள்.
0சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் குடியேற்ற ஆட்சிக்காலக் கல்வி முறையை எதிர்த்த பல பெரியார்களும் கல்விச் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் தமது தாய் நாட்டில் சமூக, பொருளாதார, கலாசார தேவைகளைக் கருத்திற் கொண்டு பல புதிய கல்விக் கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் முன்வைத்தனர்.காந்தி அடிகளின் ஆதாரக் கல்வி, தாகூர் அவர்களின் கலாசார மையக் கல்வி, கன்னங்கராவின் கிராமியக் கல்வித்திட்டம், தான்சானியாவில் நியரரேயின் தற்சர்பு கல்வித் திட்டம் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.வி -
-20%
மானுடம் வெல்லும்
0மானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்-கொண்ட பிரெஞ்ச்-தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச் தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்.
-
-9%
மின்னுவதெல்லாம்.
0தங்கக்கட்டுப்பாடு சட்டம் எப்படி பொற்கொல்லர்கள் வாழ்வைப் புரட்டிப் போட்டது என்பதில் தொடங்கி இன்று மின்னுவதெல்லம் பொன்னல்ல என்ற நிலையை சமூக பொருளாதார அவலத்தை, அந்த சமூகத்தில் ஒருவனாக இருந்து ஊடாடியதை வடித்துள்ளேன்.
-
-9%
மெர்குரிப் பூக்கள் (Mercury Pookkal)
0எழுத்தாளர் பாலகுமாரனால் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். சாவி இதழில் 34 வாரங்கள் தொடராக வெளிவந்தது. பின்னர் இந்நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டது.ஒரு பெரிய உழவு இயந்திரத் தயாரிப்பு நிறுவன வேலைநிறுத்தத்தின் போது நடந்த ஒரு படுகொலையைப் பற்றி விவரிக்கிறது.