-
-9%
விற்பனை நிர்வாகம்.
0ஒரு விற்பனை மேலாளரின் வேலையில், விற்பனையாளர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களை நிர்வகித்தல், அவர்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். அதை எப்படிச் செய்வது என்பதை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். இந்நூலைப் படிக்கும் விற்பனை மேலாளர்களால், தங்களுடைய விற்பனைப் படையின் செயல்திறனை அதிகரிக்க முடியும், தங்கள் வேலையில் முன்னேற முடியும், அதன் ஊடாகத் தங்கள் வேலையில் திருப்தியை அனுபவிக்க முடியும். உலகப் புகழ் பெற்ற விற்பனை வல்லுநரான பிரையன் டிரேசி, வெற்றிகரமான விற்பனை மேலாளர்களை எது தனித்துவப்படுத்திக் காட்டுகிறது என்பது குறித்துப் பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். அந்தப் பல்லாண்டுகால அனுபவங்களை அவர் இந்தக் குட்டி நூலில் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார்.
-
-9%
வீர மருது பாண்டியர்.
0தேசியம் என்பதே இதுபோன்ற ஒத்த உணர்வுடையவர்கள் ஒன்று சேர்ந்தபோது உருவானதுதான், இருந்தாலும் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு தொடர்ந்து அரசியல் காரணங்களுக்காக சுதந்திர இந்தியாவில் இருட்டடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சளைக்காமல் திரிபுகளுக்கெதிராக முழங்கிக்கொண்டே இருக்கும் நமது வரலாற்று ஆசிரியர்களின் குரலைப் பதிவு செய்யும் நோக்கில் பிறந்ததே இந்தப் புத்தகம். -
-91%
வெளிச்சத்தின் நிறம். கறுப்பு 2.
0நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல; அமானுஷ்யங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத, மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மர்மங்கள் ஏராளம். ‘இப்படிக்கூட நடக்குமா?‘ என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாற்றிலும் சமகாலத்திலும் நிறைந்து கிடைக்கின்றன. ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத் தேடித்தேடி அறிவியலின் வளர்ச்சி நிகழ்கிறது. இன்னொருபுறம் அறிவியலுக்குள்ளும் பகுத்தறிவுக்குள்ளும் அடங்காத மர்மங்கள், சாகாவரத்துடன் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்த மர்மங்களின் மாயத்தன்மையை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம். பேய் – பிசாசு – ஆவி – பில்லி – சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடங்காமல், தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும் கருப்புப் பக்கங்களின் மீது நெருப்பின் ஒளி பாய்ச்சுகிறது இந்தப் புத்தகம்.
-
-9%
வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை.
0உங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.அதற்கு நிறையத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அதற்காக வெறுமனே காதால் கேட்கும் உபதேசமாகவே தன்னம்பிக்கை பற்றிக் கூறிக் கொண்டிருந்தால் உங்களுக்குச் சலிப்புதான் ஏற்படும். அதனால் நீங்கள் பின்பற்றிப் பார்க்கக்கூடிய பல வழிகளை இங்கே சொல்லி இருக்கிறோம்.நீங்களே ஒரு புதுக் கருவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது என்றால் அதற்கு உங்களுக்கு நீண்டகால அவகாசம் தேவை. அதற்கு உழைப்பும் மிகுதியாகத் தேவைப்படும்.அதுவே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் ஒன்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் வெகு எளிதில் அதன் பலன்களை அடைவீர்கள். இந்தப் புத்தகம் தயார் நிலையில் கிடைக்கும் அந்தச் சாதனம் போன்றது. நீங்கள் உழைத்துப் புதிதாக இதைக் கண்டுபிடிக்கத் தேவையில்லை.சுருக்கமாகச் சொல்வதானால் சமைத்து மேசை மேல் வைக்கப்பட்டிருக்கும் உணவு இது. அதை எடுத்துச் சாப்பிட வேண்டியது உங்கள் பொறுப்பு. இதைப் படிக்க ஆரம்பித்த உடனேயே உங்கள் சாதனைப் பயணம் தொடரும். -
-9%
வெற்றியை நோக்கி.
0அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறிக்கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கணினியில் திறமையுள்ளவர்களாக உள்ளனர். வேலை சிறுவயதிலேயே கிடைத்துவிடுகிறது. கைநிறைய சம்பளம், இளமையிலேயே மணம்முடித்துக்கொள்கின்றனர். இருந்தும மணமுறிவுகள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. போதை, குடிப்பழக்கத்திற்கு ஆண், பெண் இருவரும் அடிமைகளாகின்றனர். நிறைய தற்கொலைகள், கொலைகள், ஒழுக்கச் சீர்கேடு, வன்முறைகள் பெருகிவருகின்றன. இதற்குக் காரணம் இளைஞர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் நாம் அறத்தை கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோம்.