கேற் மில்லற் தனது பாலியல் அரசியல் (1970)நூலில் பால்களுக்கு இடையிலுள்ள உறவு முறைகள் பற்றி முன்னணியான, மகத்தான அறிவு சான்ற புரச்சிகரமான பகுப்பாய்வினைச் செய்தார். அந்த ஆய்வு நம்முடைய வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் எவ்வாறு ஒரு தந்தைவழியாட்சியின் ஓரவஞ்சனை செயல் பட்டு வந்தது என்பதை வெளிப்படுத்தியது.
அது நம்முடைய புராணங்களிலும் மதத்திலும் சமூக முறைமைகளிலும், மிக முக்கியமாக நம் இலக்கியத்திலும் செயல்பட்டு வந்ததென்பதைப் புலப்படுத்தியது.
இந்த நூல் வெளிவந்து இருபதாண்டுகள் சென்றும் (1990) ஒரு பெண்ணின் பிரகடனம் என்ற அளவில், அதன் வல்லமையை இன்னமும் தக்கவைத்துள்ளது.
மட்டுமின்றி அது மிக நேர்த்தியாக சிந்தித்து அருமையாக எழுதப்பட்ட கலாச்சார ஆய்வு வரலாற்று படப்பு என்ற தகுதிகளைத் தக்கவைத்து கொண்டுள்ளது.