கூழாங்கல் பொறுக்கப் போனவன் தென்னாப்பிரிக்காவின் வரலாற்றை மாற்றியமைத்த கதை, பல நூற்றாண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் போட்ட புத்தரின் உருவம் – உலகின் மதிப்புமிக்க சிலையான கதை, தாஜ்மஹாலைவிட மதிப்புமிக்க மயிலாசனத்தின் கதை, மெட்டல் டிடெக்டரின் பீப் பீப்பில் வெளிவந்த புதையலின் கதை, காணாமல் போன ஒரு முகத்தின் கதை, பொக்கிஷங்களைப் புதைத்துவைத்து உலகத்துக்கே சவால்விட்ட மனிதரின் கதை, யாராலும் வாசிக்கவே முடியாத ஒரு புத்தகத்தின் கதை, எவராலும் நெருங்கவே முடியாத சில புதையல்களின் கதை, ஐயாயிரம் வருடப் பழைமையான ஆடையின் கதை, இந்தியாவில் இருந்து காணாமல் போன அரிய பொக்கிஷங்களின் கதை..