-
-10%
-
-9%
திருத்தி எழுதிய தீர்ப்புகள்.
0Original price was: ₨ 825.0.₨ 750.0Current price is: ₨ 750.0.கவிதை என்பது ஒரு மொழியின் புடைப்பு சிற்பம் நூற்றாண்டுகள் கடந்தும் காலத்தின் தடமாய் நிற்பது எனவே தன் சமூகத்தை தன் மக்களை தன் சிறப்பை மட்டுமின்றி சிதிலத்தையும் பிரதிபலிக்க வேண்டியது அதன் கட்டுப்பாடுவைரமுத்து நம் காலத்தில் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக் கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டனதனி நபர்களையல்ல ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள் இந்ததொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களை தம் பயணப் பாதைகளாக்கி கொள்கின்றன.ஆயினும் இப்போது பிறந்தது போன்ற தோற்றத்தையும் அனுபவத்தையும் எப்போதும் தருகின்றன.மனித குலம் முழுமைக்குமான மகிழ்ச்சி என்பதே வைரமுத்து கவிதைகளின் சாரம் இந்த தொகுப்பும் அவருடைய எல்லாத்தொகுப்புகளும் இதைத்தான் தம் மெளன முன்னுரையாக எப்போதும் சொல்கின்றன. -
-10%
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908.
0Original price was: ₨ 1,920.0.₨ 1,728.0Current price is: ₨ 1,728.0.1908 மார்ச் 13. வெள்ளிக்கிழமை.கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல்.ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி. -
-10%
-
-10%
திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்
0Original price was: ₨ 1,360.0.₨ 1,224.0Current price is: ₨ 1,224.0. -
-10%
-
-10%
-
-9%
தீரா நினைவுகள்.
0Original price was: ₨ 770.0.₨ 700.0Current price is: ₨ 700.0.அவருடைய பதிவுகள் எல்லாம் அவருடைய சொந்த அனுபவங்கள்தான். அரசியலில் இருந்து தனிப்பட்ட ஆளுமைகள் வரை பலரகமானவை. ஹனீபாவின் ஆளுமை சுடர்விட்டுப் பிரகாசிக்கும் அனுபவங்கள் இவற்றுட் பல. இதில் எதுவும் புனைவு அல்ல. உண்மைதான். உண்மையைப் புனைவுபோல் ஈர்ப்புடன் வார்க்கும் எழுத்தாற்றல் அவருக்குரியது.-பேராசிரியர் எம். ஏ. நுஃமான். -
-10%
தென்னம்படல் மறைப்பு
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்துவிடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி உருவாக்கித் தருகிறது. அனுபவங்களை நறுக்குத் தெறித்தாற்போலான வாக்கிய அமைப்புகளுக்குள் பிசிறின்றி, வார்த்தை வீணடிப்பின்றி எழுதிச் செல்கிறார் ஆசிரியர். அந்தக் காலம் பற்றிய விதந்தோதலையும் நினைவேக்கத்தையும் பெருமிதத்தையும் கூருணர்வுடன் தவிர்த்திருக்கிறார். இவ்வனுபவப் பிரதியில் அங்கங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார வழக்கில் சுவையையும் இனிமையையும் உணரலாம். இலங்கையின் பல்வேறு மக்கள் குழுக்களிடையிலான பேச்சுவழக்குகளின் இன்னொரு தரப்பையும் தமிழ்ச் சூழலுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஈரமும் மென்மையும் கொண்ட மனிதர்களை இந்நூலில் மீட்டெடுத்திருக்கிறார் நபீல். அழுத்தும் சமகால வாழ்விலிருந்து சற்று வெளியேறிக் காலப்பயணம் செய்த அனுபவத்தை இந்நூல் தருகிறது.
-
-10%
தொடுவானம் வரையில்.
0Original price was: ₨ 810.0.₨ 729.0Current price is: ₨ 729.0.வேறு பக்கம் பார்ப்பது போல அவள் நின்று கொண்டிருந்தாள். ஆனாலும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாது மெள்ள திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதனும் அவளை அதிசயமாக மீண்டும் பார்ப்பதைக் கண்டாள். இனம்விளங்கா ஒரு அச்சம் மறுபடியும் அவளை ஆட்கொள்ள, நெஞ்சு வேகமாகத் துடிக்க உடம்பு மெல்ல நடுங்கியது. பட்டப் பகலில் என்னத்துக்கு பயப்படணும்? யார் இவன்? பார்வையால் முழுங்கிவிடுவானா? தன்னையே கடிந்து கொண்டு கீழ் உதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டு அசையாமல் பிடிவாதமாக மேலே நடக்காமல் அங்கேயே நின்றாள்.சுள்ளென்று வெயில் முகத்தில் எரிச்சலுடன் வீசியது.வட்ட வடிவமான அகலப்படிகள் மீது டக்டக் என்று பாதணிகள் ஒலிக்க அவர் வேகமாக ஏறி வந்தார். சற்று பருமனான சரீரம்.
-
-10%
தோட்டியின் மகன்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0.நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல்.இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல் -
-10%