-
-9%
பொய்த்தேகம்.
0மூன்றாம் பாலின் மக்கள் எதிகொள்ளும் இன்னல்களையும் இடர்பாடுகளையும் மேற்கோடிட்டு அவர்களுக்கான ஒரு சிறந்த வாழ்வை இந்த நாவல் வழி ஆசிரியர் காட்டியுள்ளார்.
-
-4%
பொற்குகை ரகசியம்.
0இந்தத் தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலையம்சமும் வாசகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக சிந்திக்க வைக்கிறது.
-
-9%
போராடும் பெண்மணிகள் ( குறுநாவல்)
0பல்வேறு சூழலில், பலவிதங்களில் இம்சிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், யாரிடமும் சொல்லாமல் ஊமையாய் உள்ளக்குள்ளேயே அழுது, சோர்ந்து போகிறவர்களையும், நாணல் போல வளைந்து, நெளிந்து தான் கொண்ட லட்சியத்தை அடையும் பெண்மணிகளையும் – தனக்கேயுரிய சமூக பார்வையோடு, சமூகப் பார்வையோடு, சமூக அவலத்தை நெஞ்சு குமுறும் வண்ணம் எண்ணத்தால், எழுத்தால் சித்தரித்துள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன்.இது தவிர 3 குறுநாவல்கள், பேட்டிக் கட்டுரை என இத் தொகுதி பல்சுவைகளுடன் கூடிய பயனுள்ள நூலாக வாசகர்களுக்கு அமைந்துள்ளது. -
-9%
போராட்டத்தில் எனது பதிவுகள்.
0ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பதிவுகள் வெளிவந்துள்ள போதிலும் அவை அனைத்தும் ஏதாவது ஒரு அரசியல் பின் புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன.நான் இங்கே சொல்கின்றவை எல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புகளும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்றைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும், உண்மைச் சம்பவங்களையும் முவைத்து, நினைவுகளைக் கிளறி எழுத்தா வணமாக்குவதை கடமையாக எண்ணுகிறேன். -
-19%
போர்த்தொழில் பழகு.
0போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்கள், புத்திக்கூர்மையால் புதிய அரசுக்கு வித்திட்ட தளபதிகள் போன்று அரசாட்சிக்கு அடிகோலிய அத்தனை சாதுர்யங்களும், சரிவுக்குக் காரணமாய் அமைந்த மலிவான சூழ்ச்சிகளும் விரிந்து விரிந்து சொல்லப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கண்டடையும் வியூகங்கள் ஒவ்வொன்றாய் வாசகர் கண்முன் சித்திரங்களாய் விரிகின்றன.
-
-9%
பௌத்தத் தத்துவ இயல்
0பௌத்தத் தத்துவ இயல்’ என்னும் இந்நூலில் புத்தரின் வாழ்க்கை, அவரது அடிப்படைத் தத்துவங்கள், பௌத்த மதப் பிரிவுகள், பௌத்த மதத்தின் உயர்மட்ட வளர்ச்சி ஆகியவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இவற்றோடு பின்னிணைப்பாக ராகுல்ஜியின் தேர்வுக் கட்டுரைகளான, புத்தர் காலத்திற்கு முற்காலத் தத்துவ மேதைகள் மற்றும் பிற்கால தத்துவ ஞானிகளைப் பற்றியும் ராகுல்ஜி எழுதிய தனித்தனியான கட்டுரைகளுடன் ‘வஜ்ராயனத்தின் தோற்றமும் எண்பத்தி நான்கு சித்தர் கணமும்’ என்ற விரிவான கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளன. -
-9%
ப்ளிங்க். சிந்திக்காமலேயே. சிந்திக்கும் ஆற்றல்
0மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். -
-9%
மகாபாரதம்.
0மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.
-
-9%
மகான்களின் அற்புத சக்திகள்.
0மகான்கள், யோகிகள், ஞானிகள் நமது நாட்டில் அவ்வப்போது அவதரித்து மக்களின் துயர் துடைத்து வருகிறார்கள். இறைவனால் அனுப்பப்பட்ட புண்னியநதிகள் இவர்கள். இந்த நதிகளைத் தேடிச்சென்று ஆறுதல் பெற முடியாதவர்களுக்காகஅவர்களே வீடு தேடி வந்து ஆசீர்வதிப்பதைப்போல இந்த புத்தகம் உங்களைத் தேடிவருகிறது. -
-9%
மக்களும் மரபுகளும்.
0இந்நூல் மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் இரு வகைக் கட்டுரைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் தமிழக மலைப் பிரதேசங்களிலும் வாழும் பழங்குடி – இனக்குழு மக்களது வாழ்க்கை, மொழி, கலை, பழக்க வழக்கங்களை ஆராய்கிற கட்டுரைகள் ஒரு வகை; தமிழகத்திலும் கேரளத்திலும் வழங்கி வரும் வேலன் வழிபாடு, பகவதி வழிபாடு பற்றிய வரலாற்று மானிடவியல் கட்டுரைகள் மற்றொரு வகை.
-
-9%
மணல் சமாதி.
0-எண்பதை நெருங்கிக்கொண்டிருந்த பாட்டி விதவையானதும் படுத்த படுக்கையாகிவிட்டார்.குடும்பத்தினர் அவரைத் தங்களுக்குள் இழுக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். பாட்டிக்கோ ‘இனி நான்எழுந்திருக்கமாட்டேன்’ என்கிற பிடிவாதம்.பின்னர், இந்தச் சொற்கள் இப்படி மாறின: ‘இனி புதிதாய் மட்டுமே எழுந்திருப்பேன்’.பாட்டி எழுந்திருக்கிறார். முற்றிலும் புத்தம் புதிதாக. புதிய குழந்தைப் பருவம். புதிய இளமை. சமூகத்தின் தடைகளிலிருந்தும் மறுப்புகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுப் புதிய உறவுகளிலும் புதியஉணர்வுகளிலும் முழுவதும் சுதந்திரமாய், தன்னிச்சையாய் . . .கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது.இந்த நாவலின் கரு, காலகட்டம், ஒழுங்கமைதி, செய்தி அனைத்தும் தமக்கே உரித்தான தனித்துவம்நிறைந்த பாணியில் செல்கின்றன. நமக்குப் பழக்கமான எல்லைகளையும், எல்லை களுக்குஅப்பாலும், அனைத்தையும் நிராகரித்தும் தாண்டியும் செல்கின்றன. கூட்டுக் குடும்பம்தனிக்குடித்தனம், ஆண் – பெண், இளமை – முதுமை, உறக்கம் – விழிப்பு, அன்பு – வெறுப்பு, இந்தியா –பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லை களினூடே நாவல் பயணிக்கிறது.இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாயஜாலம்போலவும், இரண்டிற்குமிடையேயான வேறுபாட்டை அழித்தபடி துலங்கு கிறது. காலம் நிலையில்லாத் தன்மையில்புலப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் இறந்த காலத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. ஒவ்வொருகணமும் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது. -
-9%
மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்?
0இன்றைய சூழலில் அதிகரித்துவரும் மதவாத அரசியலின் ஆபத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் விரித்துக்கூறி மதச்சார்பின்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொடக்க காலம் அதன் வளர்ச்சி, அந்த இயக்கத் தலைவர்களின் ஆபத்தான சொல்லாடல்கள், அதனால் நாட்டில் விளைந்த கேடுகள் இவற்றுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணி போன்ற வரலாற்றுத் தகவல்கள் இடம் பெற்றுள்ள இந்நூலில், இந்தியாவில் சாதி, மதம், மொழி குறித்த கருத்துகள் பற்றிய தெளிவான விளக்கங்களும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.