-
-9%
‘யாழ்ப்பாணத்தை தீயிடுதல்.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் ‘யாழ்ப்பாணத்தை தீயிடுதல்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.1981ம் ஆண்டு யாழ் நூலகம் மற்றும் நகரம் ஏரியூட்டப்பட்டமை, ஜே: ஆர் ஜெயவர்த்தவினால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது ? திட்டத்தை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் யார்? அந்நபர்களின் பங்களிப்பு, செயற்பாடுகள் எவ்வாறமைந்திருந்தது? அதன் விளைவுகள் எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தின என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் ஆதாரங்களை கொண்டு விடயங்கள் குறித்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன.சம்பவம் இடம்பெற்று 40 வருடங்களின் பின்னர் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இப்புத்தகமானது, மூத்த ஊடகவியலாளர் செல்லையா மனோரஞ்சன் அவர்களால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. -
-10%
‘ஒப்பியல் இலக்கியம்’
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0.என்னும் செறிவான தொடரைத் தமிழுக்குத் தந்தவர் க. கைலாசபதி. அதன் தருக்கரீதியான பொருத்தத்தை இந்நூல் நிறுவுகிறது. ஒப்பியலின் அறிவியல் அடிப்படைகளைத் தெளிவுறுத்தித் தமிழில் இந்த முறையானது போதிய அளவு வளராமைக்கான காரணங்களை முதல் கட்டுரை விவரிக்கிறது.இதை வாயிலாகக் கொண்டு நுழையும் வாசகர் சங்கச் சான்றோர் செய்யுள் தொடங்கிச் சமகாலத் தமிழிலக்கியம் வரை & பரணர் முதல் பாரதி வரை & ஒப்பியலின் ஒளியில் கண்டு தெளிய முடியும். 1960களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அறிவுக்கு விருந்தாகத் திகழ்கின்றன. -
-17%
100 பேர் புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை.
0Original price was: ₨ 3,000.0.₨ 2,500.0Current price is: ₨ 2,500.0.இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் ஏற்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது.
-
-9%
101 காக்க தகுந்த வாக்குறுதிகள் –
0Original price was: ₨ 1,375.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.இந்தப் பக்கங்களில் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான சில முடிவுகளை எடுக்க உங்களுக்கு சவால் விடுக்கப்படுமா? உங்கள் உறவுகளைப் பாதுகாக்கும் மற்றும் உங்கள் எதிர்காலத்தை நங்கூரமிடும் நடைமுறைக் கடமைகள்.இந்த மிகுந்த ஊக்கமளிக்கும் ஞான வார்த்தைகள், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நிரந்தரமான உறுதிமொழிகள், உங்கள் கூட்டாளிகளிடம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத அறிவிப்புகள், உங்களுக்கான வாழ்க்கையை மாற்றும் தீர்மானங்கள், உங்கள் உலகிற்கு முக்கியமான வாக்குறுதிகள், உங்கள் தயாரிப்பாளருக்கு நித்திய உறுதிமொழிகள் ஆகியவற்றைச் செய்ய உதவும். -
-10%
6174.
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0.தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமுறியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்த தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல்.
-
-9%
From 19 DM saron.
0Original price was: ₨ 825.0.₨ 750.0Current price is: ₨ 750.0.Bavachelladurai is a well known Tamil Writer. In his early age he lived with the people in the villages who were on the edges of their life. He holds higher place for the content of these people’s life. He with pleasure often recollects all his early life experiences. His literary writings are momentous contribution to the Tamil literary world.His works are already translated into English Hindi and Malayalam and are in the process of getting translated into Spanish, German and French. -
-9%
Journey to Jaffna
0Original price was: ₨ 3,300.0.₨ 3,000.0Current price is: ₨ 3,000.0.This moving and unforgettable novel, ‘Journey to Jaffna’, is a powerful exploration of the conflicting ties of family and of the heart. Set in London, Russia and Sri Lanka, this book will find its way into your own heart.Param grew up in a strict Tamil family in Sri Lanka, but broke away from them to study in London. Even the violence facing Tamils back home could not affect the new life he built for himself with his English wife, Mary and their daughter. Now though, it is 1979, his father is dying and it is Param’s duty to make the journey back to Jaffna.As Param learns of the horrors his family and his ex-girlfriend Karthiga have endured, he faces his own struggle. Does he owe it to them to come back to Sri Lanka, or should his loyalties now lie with his English family? Or does Liz, the English/American woman he met on his long, disrupted journey, offer a way out? -
-9%
SUMERIAN A DRAVIDIAN LANGUAGE.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.The Sumerian language has a remote relationship with the Dravidian languages like spoken by Tamils in south India. Sumerians were responsible for the first monumental temples and founding of the first city state and for the invention of writing.
-
-9%
அகதியின் துயரம்.
0Original price was: ₨ 880.0.₨ 800.0Current price is: ₨ 800.0.இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த திருப்பங்களின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அகதியின் துயரங்களை இந்நூல் விவரிக்கின்றது.உலக அகதிகள் நிலவரம், இந்தியா எதிர்கொண்ட அகதி அனுபவங்கள், இனப் பிரச்சினையால் உலகெங்கும் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள், இனங்களின் நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்கின்ற சிங்களவர்களின் போட்டி அரசியல் எனப் பல விடயங்கள் இந்நூலில் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட அனைத்து தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமைத் தேவைகளையும் இந்தியாவின் பாதுகாப்புக் கவனத்தையும் ஒருசேர உறுதிசெய்கின்ற ஒரு தேசிய அகதிகள் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் நூலாசிரியர் இந்நூலில் வலியுறுத்துகிறார். -
-9%
அகாலத்தில் கரைந்த நிழல்.
0Original price was: ₨ 990.0.₨ 900.0Current price is: ₨ 900.0.அவளைப் பொறுத்தளவில் நிறைவேறாத ஆசையாக அரைகுறையாகக் கட்டப்பட்டுள்ள வீட்டுடன் நிறைவு பெறுகிறது. பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தான் ஒருமுறை வெளிநாடு சென்று விட்டால், போதும் பின் அதுவே இரண்டாம், மூன்றாம் முறை எனத் தொடர்கிறது. பழக்கமும் பரீட்சயமும் பெற்று விடுகிறது. அதுவே சாகும் வரையான வாழ்வாகி விடுகிறதுவெளிநாட்டு வாழ்வின் சுகமும் குதூகலமும் வரையறுக்கப்பட்ட ஒரு சிலருக்கே வரமாக வாய்க்கிறது.’ -
-10%
-
-10%
அடித்தள மக்கள் வரலாறு.
0Original price was: ₨ 1,980.0.₨ 1,782.0Current price is: ₨ 1,782.0.ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்துநிலையாளர்; செயல்பாட்டாளர்; ஆய்வாளர், தமிழகத்தின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், சிக்கலான கோட்பாட்டு முட்டுச் சந்துகளில் நின்றுவிடாமல், தமிழகத்தின் மக்கள் இயக்கங்கள் முகம்கொடுக்கும் சிக்கல்களை மனதில்கொண்டு அவரது ஆய்வுப் பயணம் தொடர்ந்து செல்கின்றது. இப்படிப்பட்ட அவர் இந்நூல் மூலம் அடித்தள மக்கள் வரலாற்று ஆய்வுமுறையியலைத் தமிழக வரலாற்று எழுதியலுக்குக் கையாள்வதன் வழி புதிய வெளிச்சங்களைக் காட்டுகின்றார். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதிய சிந்தனை ஊற்றுகள் பொங்கும் தளங்களாகத் தரிசிக்க வைக்கின்றார். பிழைகளைக் களைந்து புதிய செம்மையான பதிப்பாக வரும் இந்நூல் தமிழக வரலாற்றைக் கற்க விரும்புவோர்க்கான அரிய பெட்டகம்..