-
-14%
ஒட்டிச உலகில் நானும்…
0ஒட்டிசம் பற்றி , தமிழில் வந்துள்ள முக்கியமான நூல்! பாதிக்கப்பட்ட தன்மகனை வளர்த்த ஒரு தாயின் சொந்த அனுபவத்தை முன்வைத்து இந்த நூல் எழுதப்பட்டதானது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது
-
-9%
ஒரு நாத்திகனின் பிரார்த்தனை.
0பல்வேறு பிரிவினைகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும் உண்மையில் இம்மனித இனம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் சார்ந்தும் உதவியும் தான் தன்னை முன்னெடுத்துச் செல்ல விதிக்கப்பட்டது என்பது நிருபணம். அப்படித்தான் இந்த மனித விலங்கினம் பரிணாமம் பெற்று வந்திருக்கிறது. மனித எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன.
-
-11%
ஒரு நொடிப் பொறிகள்.
0உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்பெரும்பாலனவர்கள் தங்கள் மனதில் தோன்ரும் கருத்துகளை அசைபோட மறந்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணப்போவதெல்லாம் ஒரு நொடிச் சிந்தனை காரணமாக இந்த உலகம் எப்படி மாற்றப்பட்டிருக்கிறது. என்பது பற்றிதான்.அந்த நொடிப் பொழுதில் அவர்கள் அவற்றை இவ்வளவு அலட்சியம் செய்திருந்தால் நமக்குக் கிடைத்திருக்கும் இத்தனை வசதிகளும் இல்லாமலே போயிருக்கலாம்.இதைப் படிக்கும் போது இவ்வளவு சின்ன விசயம் இவ்வளவு சாதித்திருக்கிறதா என்று விழிகளை விரிப்பீர்கள். நமக்குகூட இப்படி ஒரு நேரம் தோன்றியதே என்று எண்ணுவீர்கள்.உலகம் உருண்டையானது என்று முதலில் சொன்னவனையும் இந்த உலகம் அப்படித்தான் பார்க்கிறது.ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கலாம். பெரிதாக்குங்கள் அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும். -
-25%
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
0நூலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜான் பெர்க்கின்ஸுக்கு சொற்பொழிவாற்றுவதற்கு உலகெங்கிலுமிருந்து அழைப்புகள் வந்து குவிந்தன. அப்போக்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.சவப் பொருளாதாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஜீவப் பொருளாதாரத்தை அரியணையேற்ற வேண்டியதற்கான அவசியம் குறித்தத் தன்னுடைய செய்தியை அவர் உலகெங்கும் எடுத்துச் சென்று, பெருநிறுவனங்களின் உச்சி மாநாடுகள், அந்நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகளின் கூட்டங்கள், தொழிலதிபர்களின் கூட்டங்கள், நுகர்வோர் மாநாடுகள், இசைத் திருவிழாக்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் சொற்பொழிவாற்றினார்.ஏபிசி, என்பிசி, சிஎன்என், சின்பிசி, என்பிஆர், ஏ&இ, ஹிஸ்டரி சேனல் ஆகியவற்றில் அவர் தோன்றியுள்ளார். டைம், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், காஸ்மோபாலிட்டன், எல்லே, டெர் ஸ்பீகல் மற்றும் பல பத்திரிகைகள் அவரைப் பேட்டி கண்டுள்ளன. ‘லெனன் ஓனோ கிரான்ட் ஃபார் பீஸ்’ மற்றும் ‘த ரெயின்ஃபாரஸ்ட் ஆக்ஷன் நெட்வொர்க் சேலஞ்சிங் பிசினஸ் அஸ் யூசுவல்’ ஆகிய விருதுகளை ஜான் பெற்றுள்ளார். -
-9%
ஒரு யோகியின் சுயசரிதம்.
0இந்தப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகின்ற அதேநேரம், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்கும் வாழ்க்கை வரலாற்றையும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர்.ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம். -
-12%
-
-9%
ஒற்றுமை.
0அவரிடம் அதிக செல்வம் இருப்பதாக பிறர் கூரினர்.இவ்வாறு பிறர் சொல்லுவதை அவர் மறுத்துக் கூறவில்லை.ஒருமுறை அவர் நோயுற்றார். அவரது செல்வம் எங்கே இருக்கிறது என அவரது பிள்ளைகள் அவரிடம் கேட்டனர். தனது செல்வம் தனது வயலுள் இருப்பதாக அவர் கூரினார். அவர் சொல்லியதை உண்மை என அவரது பிள்ளைகள் நம்பினர். -
-9%
ஒற்றைக் கதவு.
0கவித்துவமான வரிகள் ஆனால் கவிதை உறுஞ்சப்பட்ட வாழ்வு, தத்துவங்களின் பெருமழை, என அபூர்வமான அனுபவம் சந்தோசின் எழுத்து.
-
-9%
ஒன்றே வேறே.
0பெண்கள் உடலும் உளமும் சார்ந்த வன்முறைகளை ஏனையோரிடமிருந்து பெறுவதை விட தமது இல்லறத்துணையிடமிருந்தே அதிகம் பெறும் மனநிலை புலம் பெயர்ந்தாலும் தொடர்ந்து கொண்டிருப்பது சாபம். இல்லறத்தில் இணைந்து இருக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இத்தொகுப்பை வாசிக்க வேண்டும். எங்கு பிழை விடுகிறோம் என்பதை அடுத்தவர்கள் பக்கமிருந்து சிந்தித்து உணர வேண்டும். இல்லற வன்முறைகளால் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனப் பாதிப்பு பற்றியும் மனங்கொள்ள வேண்டும்.
-
-9%
ஓய்வு பெற்ற ஒற்றன்.
0சொந்த நிலம் திரும்ப முடியாத ஒருவன் தான் தரித்து நிற்கும் நிலமும், புது முகங்களும்.ஆச்சரியம் மிக்க அனுபவங்களும் குளிர் நிலத்தில் காற்றில் அசைந்து பறக்கும் இலைகள் நிலைத்தை வந்தடைவது போல் தமிழுக்கு வந்திருக்கிறது.
-
-9%
ஓர்மைகள் மறக்குமோ! மாஞ்சோலை: வாழ்வியலும் வரலாறும்.
0மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின் வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும் பேசுகிறார்.மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை குறித்த முதல் பதிவு இந்த நூல். -
-11%
கங்கணம்.
0வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள் இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்னிகள்’ எனப் பெயர்சூட்டி நவீன இலக்கியம் பேசியதும் ஒருகாலத்து வரலாறு. இன்று திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களை ‘முதிர்கண்ணன்கள்’ எனலாமா? அப்படி ஒரு முதிர் கண்ணனின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் ‘கங்கணம். பெருமாள்முருகனின் நான்காவது நாவல் இது. 2008இல் வெளியாகிக் கவனம் பெற்ற இந்நாவலைக் காலம் இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியிருக்கிறது. இதன் கதாநாயகன் மாரிமுத்துவைத் தாங்களாக இனம் காணுவோர் பலர். ஒற்றை மாரிமுத்துவைப் பல்கிப் பெருக்கியிருக்கிறது காலம்.