-
-9%
அயல் பெண்களின் கதைகள்.
0கனவில் மிக அலங்காரமான பளபளக்கும் உடையணிந்து வரும் வாழ்வு சட்டென் கையில் விலங்குகளையும் அணிவிப்பதாக கத்தியானா தன் கதைகளில் சொல்வதுபோல தான் பலரின் வாழ்வும் இங்கு அமைந்திருக்கிறது.
-
-9%
அயல் மகரந்தச் சேர்க்கை (அறிமுகங்கள் – படைப்புகள் – நேர்காணல்கள்)
0வழக்கமான தமிழ் புத்தகங்களிலிருந்து இத்தொகுப்பு மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் நான் தேடித்தேடி வாங்க நினைக்கும் ஒரு புத்தகமாக இந்த தமிழ் புத்தகம் அமைந்திருக்கிறது. உண்மையின் சக்தியை, உண்மையின் புரிதலை, உண்மையான பார்வைகளை இந்தப் புத்தகம் நமது கவனத்துக்கு கொண்டு வருகிறது. இத்தொகுப்பில் உள்ள நேர்காணல்கள் படைப்புக்கள் அனைத்துமே அந்த இலக்கியவாதிகளின் சத்திய பிரமாண வாக்குமூலங்கள்.-இந்திரன் -
-18%
-
-9%
அரசியலும் சிவில் சமூகமும்.
0அரசியலும் சிவில் சமூகமும் என்கின்ற இந்நூலானது சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு பார்வை, அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை என்கின்ற ஐந்து தலைப்புக்களில் கட்டுரைகளினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரைகள் அனைத்தும் அரசறிவியலினை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கு பயன்மிக்கதாகத் துலங்கும் என்பது எனது எதிர்பார்க்கை. இந்நூலினை வடிப்பதில் என்னை உந்திய புறச்சூழ்நிலைகளாக எனது பட்டப்படிப்பின்போது வரிவுரையாற்றிய பெறுமதிமிக்க விரிவுரையாளர்களது விரிவுரைகள், இறுதி ஆண்டின் எனது ஆய்வுக் கட்டுரையும் அது தொடர்பான வாசிப்புக்களும், அரசறிவியல் பாடப்பரப்பு தொடர்பான எனது ஈர்ப்பு போன்றன செல்வாக்கு செலுத்தியுள்ளன.அரசறிவியல் பாடப்பரப்பானது மிகவும் விசாலமானதும் ஆழமானதுமான ஒன்று. இவற்றில் சில தலைப்புக்களினை தெரிவு செய்து அவற்றின்பால் நூலாக வடிவமைத்துள்ளேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க எனது சிறுதுளியான இம் முயற்சி எனது அரசறிவியல் துறைக்கும், அரசறிவியல் பாடப் பரப்புக்கும் வலுச்சேர்க்கும் என்பதனை இட்டு மனநிறைவடை கின்றேன். -
-8%
அரசியல் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும்.
0சமூகமே கோட்பாடுக்கான அடித்தளம் சமூகத்திலிருந்தே தோற்றம் பெறுகின்றன. கோட்பாடுகள் ஒருபோதும் வெறுமையிலிருந்து தோன்றுவதில்லை. சமூகத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண முயலும்போது முன்வைக்கப்படும் சிந்தனைகளே கோட்பாடுகள் ஆகின்றன.
-
-9%
அரசியல் விஞ்ஞானம். அரசு பற்றிய கற்கையும், அரசை இனம்காணுதலும்.
0அரசியல் என்பது பொதுவிவகாரங்களை இனங்காண்பது, அரசியல் கொள்கைகளை விருத்தி செய்வது போன்ற செயற்பாடுகளை விபரித்து நிற்கின்றது.அல்லது பொது விவகாரங்களுடன் தொடர்புடைய உண்மையான நிர்வாகத்தைச் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு பற்றிய இயற் காட்சியுடன் தொடர்புடய அறிவுத் தொகுதியாகும். இன்னோர்வகையில் கூறின், அரடியல் என்ற பதமானது ஆட்சிக்கலை, ராஜதந்திரம் போன்றவற்றுடன் தொடர்புபட அரசியல் விஞ்ஞானம் என்ற பதமானது அரசு, அரசாங்கம் என்பவற்றின் அடிப்படைத் தத்துவங்களுடன் தொடர்புபடுகின்றது. -
-10%
அரிச்சந்திரன் கதை.
0உன்னுடன் சுக்கிரன் என்பவனை அனுப்புகிறேன். இந்த நாட்டு எல்லைக்குள் நீ நிதி சேகரிக்கக்கூடாது. நாற்பத்தெட்டு நாட்களுக்குள் பொன்னைக் கொடுத்தனுப்ப வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார் விஸ்வாமித்திரர். நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார் அரிச்சந்திரன்.செய்தி அறிந்த நாட்டு மக்கள் அழுது புலம்பினர்.“ அரிச்சந்திரா ! நீ எனக்கு இந்த நாடு நகரங்களைத் தரவில்லை என்று ஒரு தடவை கூறு உடனே உனது நாடு நகரங்களையெல்லாம் திருப்பி தந்து விடுகின்றேன்” என்றார் முனிவர்.ஆனால் அரிச்சந்திரன் பொய் சொல்ல மறுத்து விட்டு, அவரிடம் விடை பெற்றுச் சென்றான். -
-9%
அருளப்பட்ட மீன்.
0தத்தளிப்பு, அமைதியின்மை, நினைவுகளின் அலைமோதல், சவால், போதாமையின் முன்னே நிற்கும் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக அணுகவும் ஆக்கவும் முயல்கின்றன இந்தக் கவிதைகள். கடினமாகிக் கொண்டே செல்லும் வாழ்க்கையை எப்படி எழுமைப்படுத்துவது என்ற மாபெரும் கேள்வியின் எதிரில் நிறுத்தப்பட்டுள்ளோம். இந்தக்க கேள்வியை பதிகளால் நிரப்ப முடியாதபோது கடந்து சென்றுவிட முயற்சிக்கிறோம். அதற்கான எத்தனங்களாக இவற்றை கொள்ளலாம். நீங்களும் இந்த கவிதைகள் ஆடும் வித்தைக களமாக இவை உண்டு. இவற்றில் நீங்களும் உள்ளீர்கள் என்பது இன்னொரு சுவாரசியம்.
-
-9%
அலுவலகத்தில் உடல்மொழி.
0ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளைஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது.
-
-35%
அல்அதபுல் முஃப்ரத் (மூலமும் தமிழாக்கமும்)
0Original price was: ₨ 2,000.0.₨ 1,300.0Current price is: ₨ 1,300.0. -
-9%
அவள் ஒரு பூங்கொத்து.
0சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு படைப்பாளியின் மனது எவ்விதம் உள்வாங்குகிறதோ அதன் வெளிப்பாடாகவே அப்படைப்பாளியின் எழுத்துக்களும் அமைகிறது.எந்த மொழி எந்த இனம் என்றில்லாமல் மனிதர்களாய் பிறந்த அத்தனை பேருக்கும் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டு எழுகிறார்கள் என்பதையே படைப்பாளிகள் தமது பார்வையில் பதிவு செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் தேவகி கருணாகரனின் ‘அவள் ஒரு பூங்கொத்து` எனும் இச்சிறுகதைத் தொகுப்பு புதிய அனுபவங்களை உணரச்செய்யும் விதமாக பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.இலங்கை, நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய களங்களும் அங்கு வாழும் மனிதர்களின் உணர்வுகளும் இதில் பேசு பொருளாகியிருக்கிறது. -
-9%
அவனைக் கண்டீர்களா?
0பா. அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்கள் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆளமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார். காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமாக நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக்காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தை இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார். புலம்பெயர் சூழலில் சமகால கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா. அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்