• -9%

    புற நானூறு மூலமும் தெளிவுரையும்.

    0

    மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்பது அரிதே! ஆயினும் முன்னே விளங்கிய புலவர் பெருமக்களின் அடியொற்றி, ஒவ்வொரு பாடலுக்கும் அதன் பொருளுக்கு ஏற்றவாறு தலைப்புக் கொடுத்து தெளிவுரை எழுதியுள்ளேன். சிலவற்றைச் சிறப்புரையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு அரும்பத உரையும் தரப்பட்டுள்ளது.

    Original price was: ₨ 2,530.0.Current price is: ₨ 2,300.0.
    Add to cart
  • -9%

    பூனைகள் நகரம்.

    0
    வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை மேற்பூச்சின்றி முன்வைப்பவை இவரது ஆக்கங்கள். முரகாமி கதைகளின் முதல் தொகுப்பைத் தமிழ்ச்சூழலுக்கு வம்சி பதிப்பகம் கையளித்தது. அதன் தொடர்ச்சியாக, ஜி. குப்புசாமியின் மொழியாக்கத்தில் வெளிவரும் தொகுப்பு இது. யதார்த்தத்துடன் மாய யதார்த்தங்கள் இணையும் இக்கதைகள் தமிழ்ச் சூழலுக்கு நெருக்கமானவை.
    – கிருஷ்ண பிரபு
    Original price was: ₨ 1,925.0.Current price is: ₨ 1,750.0.
    Add to cart
  • -9%

    பெண்நிலைச் சிந்தனைகள்.

    0

    இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள், தமிழில் அதுவும் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் பெண்கள் தங்களைப் பற்றி புரிந்துகொள்ளவும், தங்களை இந்தச் சமூகமும் கலாச்சாரமும் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறது. அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு ரீதியான வரையறைகள் எல்லாம் எப்படி பெண்ணை இரண்டாம் பட்சமான ஒன்றாக வைத்திருக்கிறது என்பதை அறிவதற்கு உதவும் என்று நம்புகிறேன்.

    Original price was: ₨ 745.0.Current price is: ₨ 680.0.
    Add to cart
  • -9%

    பெளதிகப் புவியியல். செயன் முறையும் நிலவுருவங்களும்.

    0

    உயர்தர மாணவர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்யுமுகமாக இந்நூல் அமைந்துள்ளது. மாணவரின் ஒவ்வொறு அசைவயும் கணக்கிட்டு தேவையறிந்து வெளிவருகின்றது. ஆற்றின் அரித்தல், காற்றின் செயற்பாடு, நிலவுருவங்கள், தரை நீர் செயன்முறை, போன்றவிடயங்களை தன்னகத்தே கொண்டு இலகுவாக விளங்கக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart
  • -9%

    பேரரசர் அசோகர்.

    0
    போரில் வெற்றிகண்ட மன்னர்கள், ரத்தம் குடித்த புலிகளாக, அடுத்தடுத்த தேசங்களுக்கு அலைவார்கள். ஆனால், மக்களின் துயரம் கண்டு நெஞ்சுடைந்து, இனி யுத்தமே வேண்டாமென்று சத்தியம் செய்த இன்னொரு மன்னரை இந்த உலகம் கண்டதில்லை.
    மதம் மாறுகிற ஒரு மன்னர் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி, தன் கொள்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மக்கள் மேல் திணிப்பார். தான் பெளத்தமதத்துக்கு மாறியபோதும், எம்மதமும் சம்மதம் என மனிதநேயத்தை முன்னிறுத்தும் மாமனிதர்கள் வரலாற்று அதிசயம்.
    மண்ணை வெல்பவர்கள் மன்னர்கள். மக்களின் மனங்களை வெல்பவர்கள் மகாத்மாக்கள். உலக வரலாற்றில் மகாத்மாவான மன்னர் ஒரே ஒருவர்தான். அவர் – பேரரசர் அசோகர்.
    Original price was: ₨ 2,805.0.Current price is: ₨ 2,555.0.
    Add to cart
  • -9%

    பொசிஸனிங்.

    0
    தொழில் தொடகுபவர்களுக்கன வழிகாட்டி.
    ———————————
    உங்களை…
    உங்கள் தொழிலை…
    உங்கள் திறமையை…
    உங்கள் தயாரிப்பை…
    அடுத்தவர்கள்
    ரசிக்க…
    விரும்ப…
    வரவேற்க…
    அங்கீகரிக்க…
    நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
    உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான்.
    நிர்வாகவியலில் இந்த உத்திக்கு ‘பொசிஷனிங்’ என்று பெயர்.
    இதன்மூலம் உங்களைப் பற்றி உயர்வான, சாதகமான பிம்பத்தை அடுத்தவர் மனங்களில் உருவாக்க முடியும்.
    ரஸ்னா நடத்திய நாடகம், உஜாலா பயன்படுத்திய உத்தி, காட்பரீஸ் காட்டிய வழி என்று மெய்யான அனுபவங்களின் வழியாக பொசிஷனிங் உத்தியை கற்று தருகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.
    Original price was: ₨ 1,525.0.Current price is: ₨ 1,385.0.
    Add to cart
  • -9%

    பொய்த்தேகம்.

    0

    மூன்றாம் பாலின் மக்கள் எதிகொள்ளும் இன்னல்களையும் இடர்பாடுகளையும் மேற்கோடிட்டு அவர்களுக்கான ஒரு சிறந்த வாழ்வை இந்த நாவல் வழி ஆசிரியர் காட்டியுள்ளார்.

    Original price was: ₨ 660.0.Current price is: ₨ 600.0.
    Add to cart
  • -4%

    பொற்குகை ரகசியம்.

    0

    இந்தத் தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலையம்சமும் வாசகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக சிந்திக்க வைக்கிறது.

    Original price was: ₨ 1,825.0.Current price is: ₨ 1,750.0.
    Add to cart
  • -9%

    போராடும் பெண்மணிகள் ( குறுநாவல்)

    0
    பல்வேறு சூழலில், பலவிதங்களில் இம்சிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், யாரிடமும் சொல்லாமல் ஊமையாய் உள்ளக்குள்ளேயே அழுது, சோர்ந்து போகிறவர்களையும், நாணல் போல வளைந்து, நெளிந்து தான் கொண்ட லட்சியத்தை அடையும் பெண்மணிகளையும் – தனக்கேயுரிய சமூக பார்வையோடு, சமூகப் பார்வையோடு, சமூக அவலத்தை நெஞ்சு குமுறும் வண்ணம் எண்ணத்தால், எழுத்தால் சித்தரித்துள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன்.
    இது தவிர 3 குறுநாவல்கள், பேட்டிக் கட்டுரை என இத் தொகுதி பல்சுவைகளுடன் கூடிய பயனுள்ள நூலாக வாசகர்களுக்கு அமைந்துள்ளது.
    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -9%

    போராட்டத்தில் எனது பதிவுகள்.

    0
    ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பதிவுகள் வெளிவந்துள்ள போதிலும் அவை அனைத்தும் ஏதாவது ஒரு அரசியல் பின் புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன.
    நான் இங்கே சொல்கின்றவை எல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புகளும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்றைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
    என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும், உண்மைச் சம்பவங்களையும் முவைத்து, நினைவுகளைக் கிளறி எழுத்தா வணமாக்குவதை கடமையாக எண்ணுகிறேன்.
    Original price was: ₨ 1,760.0.Current price is: ₨ 1,600.0.
    Add to cart
  • -19%

    போர்த்தொழில் பழகு.

    0

    போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்கள், புத்திக்கூர்மையால் புதிய அரசுக்கு வித்திட்ட தளபதிகள் போன்று அரசாட்சிக்கு அடிகோலிய அத்தனை சாதுர்யங்களும், சரிவுக்குக் காரணமாய் அமைந்த மலிவான சூழ்ச்சிகளும் விரிந்து விரிந்து சொல்லப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கண்டடையும் வியூகங்கள் ஒவ்வொன்றாய் வாசகர் கண்முன் சித்திரங்களாய் விரிகின்றன.

    Original price was: ₨ 2,000.0.Current price is: ₨ 1,625.0.
    Add to cart
  • -7%

    பௌத்த வேட்கை

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,399.0.
    Add to cart