-
-15%
நம்மை நாமே செதுக்குவோம்.
0நம்மை நாமே காலத்திற்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டு, வெற்றி வாகை சூடத் தேவைப்படும் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களை எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.பாஸ்டர், சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போன்றிருப்பர். ஆனால் பிரச்னைப் புயல் வீசினால் வேரோடு சாய்வர். சிலர் நாணல் போல் எந்தப் பிரச்னைப் புயல் வீசினாலும் வளைந்து நெளிந்து கொடுத்துப் பின்னர் நிமிர்ந்து விடுவர் என்கிறார்.தோற்று விட்டேனென்று நீ கருதுவாயானால் நிச்சயமாக நீ தோற்றவனே என்கிறார் ஆங்கில அறிஞர் ஒருவர். தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்குப் பதிலாகத் தலையால் நடப்பதைப் போன்றது என்கிறார் எமர்சன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை உடையவனோ அவன் அந்தப் பொருளாகத்தான் ஆகிறான் என்பது கீதை வாக்கு. -
-12%
-
-9%
நளவெண்பா. (மூலமும் விளக்கவுரையும்)
0நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா’ என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள் உணரத்தக்க நிலையில் பிரித்தும், பாடலுக்குத் திரண்ட பொழிப்புரை எழுதி சிறப்பித்துள்ளார்.
-
-12%
நாடு விட்டு நாடு (யாவரும் பதிப்பகம்)
0Original price was: ₨ 1,890.0.₨ 1,670.0Current price is: ₨ 1,670.0. -
-9%
நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புகள்.
0இந்த வரலாறாய்வு புதிய கோணத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து தருகின்ற முதன்மையான ஆய்வாகும்.ஆய்வாளர் சட்டத்துரையில் பயின்றவர் என்பதல் இவ்வாய்வில் மிக நேர்த்தியாக சரித்திர நிகழ்வுகளைக் கோர்க்கின்ற விதம் அதற்குள் தொழிற்படுகின்ற தர்க்க ஒழுங்கு போன்ற அம்சங்கள் இவ்வாய்வுக்கு அழகு சேர்க்கின்றன. -
-20%
நாவலும் வாழ்க்கையும்.
0ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர். -
-9%
நித்திலவல்லி.
0மதுரையில் பாண்டியர்கள் ஆட்சியை மழுங்கடித்து சில காலங்கள் களப்பிரர்கள் ஆட்சிசெய்தனர். பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம், இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. கலை, மொழி நாகரிகம், பண்பாடு, எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே ‘இருண்ட காலம்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர்கள் ஆட்சி மற்றும் தமிழ் சங்கங்களின் அழிவு பாண்டியர்களின் எழுச்சியென அன்றைய சங்ககாலத்திற்கு முற்பட்ட மதுரையை படம் பிடித்துகாட்டுகிறது நித்திலவல்லி.மதுராதிபதிவித்தகரின் அரசியல் சூழ்ச்சிகள், ஐந்தில் நான்கு களப்பிரர்களால் கொள்ளப்பட்ட பாண்டிய வம்சத்து இளவரசர்கள், எஞ்சிய ஒரே இளவரசன் இளையநம்பி, அவனை காதலிக்கும் செல்வபூங்கோதை, ரத்தினமாலை, தமிழ்சங்கமற்ற மதுரை என கண்முன்னே இழிவுற்ற பாண்டியநாடு விஸ்தரிக்கின்றது.இளையநம்பியின் அரசியல் நோக்கமும் வீரமும், அதனை காட்டியும் சகுனியை விட நுட்பமான மதித்திறன் கொண்ட மதுராதிபதி வித்தகரின் அரசியலும் பாண்டிய மகுடத்தின் வைரங்கள்பாண்டிய கொடியேற்றமும் செல்வபூங்கோதையின் தியாகமும், அரசியல் திருமணங்களும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் ரத்தினமாலையே நெஞ்சில் நிலைத்து நிற்கிறாள். பெரும்பாலும் வீரமும் முற்போக்கு சிந்தனையும் கலந்த பெண்களை ஒதுக்கி பத்தாம்பசலிகளையே நோக்கி செல்லும் ஆண்மனங்களை பற்றிய தெளிவான ஆய்வையே செய்துள்ளார். -
-7%
நிறுத்தக் குறிகளும் பயிற்சியும்.
0உயிரி எதுவாயினும் இயக்கம் உடையதே. ஆனால் உயிரியின் இயக்கம், குறித்த இடத்தில் குறித்த காலத்தில் குறித்த காரணத்தில் குறித்த தேவையில் நின்றே ஆக வேண்டும்.ஊரும் உயிரி, நடக்கும் உயிரி, பறக்கும் உயிரி, ஆகியவை எல்லாம் நிற்பதையும், நின்று மீளவும் இயங்குவதையும் காண்கின்றோம். நிற்கும் இடத்திற்கு “நிறுத்தம்” என்பது பெயர்.நிறுத்தம் உயிர்களுக்கு உண்டு என்பது போல், மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கும் நிறுத்தம் உண்டு. -
-9%
-
-9%
நிஜத்தைத் தேடி.
0இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் சுஜாதாவின் ஆரம்பகால கதைகள். 1960-70களில் ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன், எஸ்.ஆர்.ராஜன், எஸ்.ரங்கராஜன் என்கிற பெயர்களில் சுஜாதா குமுதம், கணையாழி பத்திரிகை களில் எழுதியவை. தவிர 70-80களில் எழுதிய கதைகள் சிலவற்றின் கூட, 1984-ல் கல்கியில் வெளியான ஒரு குறுநாவலும் இதில் இருக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான விறுவிறுப்பு மற்றும் ட்விஸ்ட்டுகள் 100 சதவிகிதம் உத்தரவாதமாகக் கொண்ட கதைகள்.
-
-8%
நூறு புராணங்களின் வாசல்.
0இந்தக் கதைகள் அழகியச் சித்திரங்கள். நம்மை ஓர் அதிசய உலகுக்கு, நிஜமும் அதிசயமும் உள்ள உலகுக்கு அழைத்துச் செல்பவை. அறிவியல் தத்துவத்தையும் ஒரு குழந்தையின் ஆர்வப் பார்வையையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து நம்மைக் கிரகிக்கவைப்பவை.
-
-11%
நோம் சோம்ஸ்கி.
0நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம் , உளவியல் , சமூகவியல் , மொழியியல் , கணினியியல் , அரசியல் , விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர் அவரைப் பற்றியும் ஒரு மாமனிதரான உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது.