அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறிக்கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கணினியில் திறமையுள்ளவர்களாக உள்ளனர். வேலை சிறுவயதிலேயே கிடைத்துவிடுகிறது. கைநிறைய சம்பளம், இளமையிலேயே மணம்முடித்துக்கொள்கின்றனர். இருந்தும மணமுறிவுகள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. போதை, குடிப்பழக்கத்திற்கு ஆண், பெண் இருவரும் அடிமைகளாகின்றனர். நிறைய தற்கொலைகள், கொலைகள், ஒழுக்கச் சீர்கேடு, வன்முறைகள் பெருகிவருகின்றன. இதற்குக் காரணம் இளைஞர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் நாம் அறத்தை கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோம்.