• -9%

    ஆறாம் விரல்.

    0

    இந்த கதைகள் எல்லாம் மானுடத்தைப் புரிந்துகொள்ள மனிதத்தைப் பலப்படுத்த உறுதுணை புரிபவை. அந்த வகயில் ஜவ்வாது முஸ்தபா கதைகள் தமிழ்ச் சமூகத்தில் அவசியமான பிரதி எனலாம்.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -7%

    ஆன்மீகத்தின் அற்புத ஆற்றல்.

    0

    ஆன்மீகத்தை ஒரு விஞ்ஞானி ஆரய்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்நுல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    Original price was: ₨ 405.0.Current price is: ₨ 375.0.
    Add to cart
  • -9%

    ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள்.

    0
    இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக சமூக அசைவியக்கத்தை புலப்படுத்தும் நவீன நடைச்சித்திரங்கள் இவை. முற்றிலும் புதிய செய்திகள், அப்படியே தெரிந்த தகவல்களை சுட்ட நேர்ந்தாலும் அவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை இவை. தீராத ஆய்வின் நுட்பம், வாளினும் கூரிய சொற்கள், மிகையோ வெற்றுச்சொல்லோ பயிலாத் தொடர்கள், இவற்றுக்கும் மேலாக உலகளாவிய பார்வை போன்ற ஆ. இரா. வெங்கடாசலபதியின் தனித்துவங்கள் பல மிளிரும் சித்திரங்கள் இந்நூல்.
    இந்த ஆளுமைகளைப் பற்றி முன்பின் அறியாதவர்களை இந்நூல் ஆச்சரியப்படுத்தும்; அறிந்தவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும்.
    Original price was: ₨ 1,925.0.Current price is: ₨ 1,750.0.
    Add to cart
  • -9%

    இடைவெளிகளின் எதிரொலி.

    0

    அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை.

    Original price was: ₨ 1,210.0.Current price is: ₨ 1,100.0.
    Add to cart
  • -9%

    இத்தா.

    0
    நாவலின் மையமான புள்ளியாக இருப்பது இத்தா’ என்கிற சடங்கு. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் எல்லாப் பெண்களும் ஆண்களும் தனித்திருத்தல் என்பதை அறிந்து கொண்டுவிட்டோம். ஆனால் இந்த இத்தா என்பது கணவனை இழந்த அல்லது கணவனால் தலாக் செய்யப்பட்ட அல்லது காணாமல்போன பெண்கள் தங்கள் தூய்மையை உலகுக்குக் காட்ட மூன்று மாதவிலக்குக் காலம் தனித்திருக்க வேண்டும். என்கிற சடங்கு. கணவனின் கணவன் உடல் முகத்தைக் கூடப் பார்க்காத கணவனின் கைவிரல் நகம் கூடத் தன் மீது படாத மரியம் ஏன் இத்தா என்னும் தனிமைச் சிறைக்குள் அடைபட வேண்டும் என்கிற கேள்வியை நாவல் அழுத்தமாக எழுப்புகிறது. இஸ்லாத்தில் மட்டுமல்ல. எல்லா மதங்களிலுமே இதுபோலப் பெண்ணுக்கு மட்டுமான சடங்குகள் இருக்கின்றன.
    ச.தமிழ்ச்செல்வன்.
    Original price was: ₨ 1,540.0.Current price is: ₨ 1,400.0.
    Add to cart
  • -9%

    இந்த விநாடி

    0
    யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்து கொண்டிருந்த போது ,ஒரு நண்பர் என்னை மதிப்பீடு செய்ய சில கேள்விகள் கேட்டார்.ஒரு பூ – அரளி என்றேன். ஒரு பறவை – வல்லூறு என்றேன். இப்படியே பதில் தொடர, சிந்தனையை மாற்றுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றார். சிந்தனையை மட்டுமல்ல. தலைகீழாய் போட்டுக் கொண்டிருந்த கையெழுத்தையும் மாற்ற வாழ்க்கை மாறியது. எண்ணங்கள் தான் வாழ்க்கை. நான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து கொள்ள உங்களுக்கு இந்தப் புத்தகம்.- அகத்தியன், திரைப்பட இயக்குனர்,**நல்லவன் வாழ்வான் – என்பது உலக நியதி.நல்ல நூல்கள் படித்தவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் – என்பது பொது நியதி.நாகூர் ரூமியின் “இந்த வினாடி” – இன்றைய வேகமாக, ‘டென்ஷன்’ போட்டி நிறைந்த சூழலுக்கு ஏற்ற நல்ல மருத்துவ நூல்.
    -நடிகர் சிவக்குமார்.
    Original price was: ₨ 1,580.0.Current price is: ₨ 1,440.0.
    Add to cart
  • -9%

    இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல.

    0

    பூரணத்திலிருந்து பூரணம் உருவான பின்பும் எஞ்சி நிற்பது பூரணமே என்ற வேத உண்மையின் விளக்கமாகவே இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கவிதையும் முழுமைச் சிந்தனையோடு போகின்றது.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -9%

    இமைக்கும் கருவிழிக்குமிடையே.

    0
    ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே போக முடியாதவர்களுக்கு, போகலாம்தான் ஆனா அதுக்கான நேரமே சரியா அமையல என்பவர்களுக்கு, போகணும்ன்னு நினைக்கிறேன்,
    ஆனா வேலையே சரியா இருக்கு என்பவர்களுக்கு, உள்ளூர்லயே திருமணம் முடித்துக் கொண்டு பேரூந்துப் பயணமே கனவாகிப்போனவர்களுக்கு, இன்னும் நான் ரயிலே ஏறினதில்ல ஏங்கும் மனதை எப்போதாவது வெளிப்படுத்துபவர்களுக்கு, மழை வரப் போவதை முன்னறிவித்து பறக்கும் தும்பி அளவில் ஆகாய விமானம் பார்க்க ஒவ்வொரு முறையும் தன் குடிசையை விட்டு வெளியே ஓடி வருபவர்களுக்கு இந்த புத்தகத்தைவாசிக்கக் கொடுக்கிறேன்.
    Original price was: ₨ 3,300.0.Current price is: ₨ 3,000.0.
    Add to cart
  • -10%

    இயற்கையைத் தேடும் கண்கள்.

    0
    ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர்யானை என ஆப்ரிக்க உயிரினங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். நம் நாட்டு உயிரினங்களைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?
    சென்னை மாநகரில் வெளிமான் குட்டி ஒன்றை வளர்க்க முயன்ற அனுபவம் முதல் சட்டைப்பையில் தஞ்சமடைந்த சின்னஞ்சிறு வௌவால் வரை காட்டுயிர்களின் உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது இந்த வண்ணப் புத்தகம்.
    நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்புள்ள சிட்டுக்குருவி, மயிலைப் பற்றி மட்டுமல்லாமல் சோளக்குருவி, செண்பகம், சங்குவளை நாரைகளின் வாழ்க்கையையும் திறந்துகாட்டுகின்றன பறவைகள் குறித்த கட்டுரைகள்.
    நம்மிடையே வாழும் அணில், உணவு தேடிவரும் கீரிப்பிள்ளை, ஆர்வக் குறுகுறுப்பு மிகுந்த நீர்நாய், மாட்டினங்களிலேயே மிகப் பெரிதான காட்டு மாடு போன்ற தமிழக உயிரினங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம்.
    இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும்.
    Original price was: ₨ 1,595.0.Current price is: ₨ 1,440.0.
    Add to cart
  • -9%

    இரட்டை ஆத்துமாக்கள்

    0

    மூன்றாம் பாலினம் கொண்டுள்ள இரட்டை ஆத்துமாகள், உண்மையா பொய்யா என்பதல்ல இந்த புத்தகத்தின் வாதம். மாறாய் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காக, இரட்டை ஆத்துமாக்கள் என்று போற்றப்பட்ட இந்த மூன்றாம் பாலினத்தின், இன்றைய நிலை என்ன என்பதை ஆரய்வதே, இந்த புத்தகத்தின் நோக்கமாகும்

    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -9%

    இரண்டு புத்தகங்கள்.

    0

    அசோகன் சாருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. அனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழ்க்குகளை முற்றிலுமாக தவித்து நம் ஆழ்மனத்திற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை.

    Original price was: ₨ 825.0.Current price is: ₨ 750.0.
    Add to cart
  • -9%

    இராவணேசன் அரங்காடியோர் அனுபவங்கள்.

    0

    பேராசிரியர் சி. மௌனகுரு கூத்தை கலையாகவும், அந்தக் கலையோடு உணர்வுபூர்வமாகவும் ஊடுருவி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு இருப்பவர். கலையோடு ஆழமாக பிணைந்த மனிதர்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டே இல்லை. அதற்கு சரியான உதாரணம் அரை நூற்றண்டுக்கு மேலாக இராவணேசன் நாடகத்தை சி. மௌனகுரு அவர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப செதுக்கி செதுக்கி மெருகேற்றி நவீனப்படுத்திக் கொண்டிருப்பதைச் சொல்லலாம்.

    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart