-
-29%
பசுமை பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் – 5)
0Original price was: ₨ 1,400.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0. -
-9%
பச்சையும் சிவப்புமாய் ஒரு பாதாம் மரம். (வாழ்வனுபவங்கள்)
0எங்கோ திடமற்று வாழும் ஒரு பெண் மனதை, அன்பின் ஒற்றை வார்த்தைக்கு பரிதவிக்கும் ஒரு குழந்தையின் பாதையை, அடையாளங்களற்ற ஒரு ஆசிரியரின் வாழ்வை, நிறைமனதோடு பயணிக்கும் ஒரு மனித மனத்தை தீண்டும் வரை இந்த பயணம் தொடரட்டும்…
-
-17%
படிப்பது சுகமே!
0படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்களுக்கு இந்நூல் விளக்கித் தருகிறது.மாணவர்களின் படிப்புக்கும் தேர்வுக்கும் இந்நூல் ஒரு சிறந்த திறவுகோலாக இருக்கும். இந்நூல் ஊன்றிப் படிப்பவர்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பது உறுதி. -
-9%
பண்டைய நாகரிகம்.
0உயிரினங்கள் வாழமுடியும்.அவை ஒருகாலத்தில் சுருங்கத் தொடங்கும். அவை சுருங்கத்தொடங்கிய பின் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்காது என அறிவியல் அறிஞர் இசுடிபன் ஆக்கிங் கூறியுள்ளார். பூமியில் உயிரினங்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகள் ஆகிறது எனினும். மனித நாகரிகத்தின் காலம் 10.000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் முதல் நாகரிகமான சுமேரிய நகர அரசுகளின் நாகரிகம் யூப்ரடிசு. டைகிரிசு ஆறுகள் ஓடும் மெசபடோமியா பகுதியில் தோன்றியது. இப்பகுதியில் அதன்பின் அக்கேடியன். பாபிலோனியா. அசீரிய. பாரசீக. மிட்டணி, பார்த்திய. சசானிய நாகரிகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. அதேபோன்று எகிப்திலும், சிந்து சமவெளியிலும், சீனாவிலும், கிரீட் தீவிலும் நாகரிகங்கள் தோன்றின. -
-9%
பதிப்பும் படைப்பும்.
01990களின் நடுப்பகுதியில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ்ப் பதிப்புலகம் குறித்துத் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறையுடன் காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவரும் கண்ணனின் இந்த நூல், தமிழ்ப் பதிப்புலகின் தன்மைகளையும் தேவைகளையும் சர்வதேசப் பின்புலத்தில் வைத்து அலசுகிறது. தமிழ்ப் பதிப்புலகின் இன்றைய நிலை குறித்தும் அதன் அடுத்த கட்டப் பயணம் குறித்தும் தீர்க்கமான பார்வைகளை முன்வைக்கிறது. இந்திய அளவிலும் உலக அளவிலும் தன் செயல்பாடுகளை விரித்துக்கொண்டு செல்லும் காலச்சுவடு பதிப்பகத்தின் பயணம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதைக் காட்டும் தடங்களும் இந்நூலில் இருக்கின்றன. தமிழ்ப் பதிப்புலகம் குறித்து கண்ணன் தொடர்ந்து முன்வைத்துவரும் பல்வேறு கனவுகள் நனவாகத் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்த நூல் வெளியாவது மிகவும் பொருத்தமானது.
-
-9%
பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணியும்.
0கார்மேகம் அவர்களுடைய வாழ்க்கை, கார்மேகம் அவ்ர்களுடைய பத்திரிக்கை உலகப் பணி, இலங்கையிலும் இந்தியாவிலும் அவர் ஆற்றிய சமூகப் பணி, கார்மேகம் அவர்களைப் பற்றி பிரபலமானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பன போன்ற கட்டுரைகள் அடங்கிய ஒரு காத்திரமான தொகுப்புத்தான் இந்நூல்.
-
-9%
பயமா எனக்கா?
0குழந்தைகளை கை நீட்டி அடிக்க விரும்பாத பெற்றோரில் சிலர் கூட மறமுகமாக பயமுருத்தி, அதன்வழியே நினைத்த பணியை நிறைவேற்றிக்கொள்வது என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடங்கியது. குழந்தை சரியாகச் “சப்பிடவில்லையா? கூப்பிடு பூச்சாண்டியை “என்பதில் ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களில் பயமுறுத்துவது தொடர்கிறது.தேவையற்ற பய உணர்வு, குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. -
-13%
பரலோக வசிப்பிடங்கள் (மலையாள நாவல்.
0ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன…அவற்றிற்கிடையே பலநிற ரயில்களின்இடையறாத போக்குவரத்து….இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்….காதலின் மாதுயர் அழுந்தஅற்றலைகிறார் கடவுள்…தன் நாவலைமறு உலகில் பிரசுரிக்கப் பாடுபடுகிறான்ஒரு எழுத்தாளன்…நவீன கதை சொல்லல் முறையின்பெருவசீகர மாயம்.அசாதாரண படைப்புச் சிறப்பால்தனித்தொளிரும் நாவல். -
-9%
பருவநிலை மாற்றம்.
0சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது. பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.
-
-9%
பலவிதமான வீடுகள் (மலையாளச் சிறுகதைகள்)
0பலவிதமான வீடுகள்(மலையாளச் சிறுகதைகள்)-தொகுப்பும் மொழிபெயர்ப்பும் டி.எம். ரகுராம்.டி. எம். ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிறில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்த தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பசீர், எம்.டி. வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன்,,சந்தோஸ், ஏச்சிக்கானம், சித்திரா… என்பதாக கால வரிசைப்படுத்திப் பார்க்கிறேன்.கேரளத்திற்கு வெளியே இருப்பவர்கள் இப்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பது என்பது முடியுமா என்பது சந்தேகம்தான். மலையாளச் சிறுகதைகளின் கருத்தோட்டமும் நடைப்போக்கும் பதின்ம ஆண்டுகளில் எப்படி எல்லாம் மாறியிருக்கின்றன என்பதை இத்தொகுப்பு புலப்படுத்துகிறது -
-9%
பழந்தமிழர் வணிகம்
0நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று, அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திர மாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக் காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப்புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
-3%
பாசிசமும் சர்வாதிகாரமும் .
0இளமையும் ஆற்றலும் கொண்ட பிரெஞ்சு மார்க்சிய சிந்தனையாளர் நிகோஸ் புலண்ட்ஸஸ் 1970களில் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அல்தூசரிய அமைப்பியல் மார்க்சியராக இருந்தவர். பின்னாட்களில் ஜனநாயக சோசலிசவாதியாகப் பாராட்டப்பட்டார். சட்டவியல் ஆய்வாளராகப் பயின்று. அரசு குறித்த சிந்தனையில் புதிய எல்லைகளை எட்டினார். குறிப்பாக, பாசிச அரசு குறித்த அவரது ஆய்வுகள் பாசிச சமூக அமைப்பினுள் வர்க்கங்களில் தொழில்பாடு, தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல். கிரீஸ் ஆகிய நாடுகளில் பாசிசம் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் கவனம் கொண்டவர்.மொழிபெயர்ப்பாளர் அமரர் வேட்டை எஸ். கண்ணன்.