• -9%

    ‘யாழ்ப்பாணத்தை தீயிடுதல்.

    0
    இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் ‘யாழ்ப்பாணத்தை தீயிடுதல்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
    1981ம் ஆண்டு யாழ் நூலகம் மற்றும் நகரம் ஏரியூட்டப்பட்டமை, ஜே: ஆர் ஜெயவர்த்தவினால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது ? திட்டத்தை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் யார்? அந்நபர்களின் பங்களிப்பு, செயற்பாடுகள் எவ்வாறமைந்திருந்தது? அதன் விளைவுகள் எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தின என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் ஆதாரங்களை கொண்டு விடயங்கள் குறித்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கின்றன.
    சம்பவம் இடம்பெற்று 40 வருடங்களின் பின்னர் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள இப்புத்தகமானது, மூத்த ஊடகவியலாளர் செல்லையா மனோரஞ்சன் அவர்களால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -9%

    ‘ஒப்பியல் இலக்கியம்’

    0
    என்னும் செறிவான தொடரைத் தமிழுக்குத் தந்தவர் க. கைலாசபதி. அதன் தருக்கரீதியான பொருத்தத்தை இந்நூல் நிறுவுகிறது. ஒப்பியலின் அறிவியல் அடிப்படைகளைத் தெளிவுறுத்தித் தமிழில் இந்த முறையானது போதிய அளவு வளராமைக்கான காரணங்களை முதல் கட்டுரை விவரிக்கிறது.
    இதை வாயிலாகக் கொண்டு நுழையும் வாசகர் சங்கச் சான்றோர் செய்யுள் தொடங்கிச் சமகாலத் தமிழிலக்கியம் வரை & பரணர் முதல் பாரதி வரை & ஒப்பியலின் ஒளியில் கண்டு தெளிய முடியும். 1960களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அறிவுக்கு விருந்தாகத் திகழ்கின்றன.
    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,500.0.
    Add to cart
  • -9%

    ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்.

    0
    நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014 மே மாதத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, அல்லது அப்படிக் கூறப்பட்டதா? உள்ளபடியாக, நெருக்கடியைத்தான் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நம்முடைய ஆட்சியமைப்பு, சமூகம், பொருளாதாரம் என அனைத்தும் நொறுங்கிப்போய்விட்டன. அதற்கான அறிகுறிகளெல்லாம் நம்மைச் சுற்றியே இருக்கின்றன.’
    24/7 வேலைபார்த்துவந்த டிஜிட்டல் ராணுவமும் சமரசத்துக்கு ஆட்பட்ட ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூச்சல்களால் பொதுத் தளங்களை மூழ்கடித்துக்கொண்டிருந்த வேளையில், துணிவுமிக்க விமர்சனக் குரலால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் உறுதியோடு இருந்தார் பரக்கலா பிரபாகர். 2020 முதல் 2023 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எழுதிவந்த இந்தக் கட்டுரைகளில், அவர் உண்மைகளையும் தரவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிகழ்வுகளையும் பொது அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நம்முடைய ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொருளாதாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் ஏன் அச்சப்படுகிறார் என்பதை எடுத்துவைக்கிறார்.
    Original price was: ₨ 2,190.0.Current price is: ₨ 1,995.0.
    Add to cart
  • -17%

    ’மலரும் சருகும்’

    0
    தமிழ் நாவல் உலகில் தலித் மக்களின் வாழ்வியலை முதன் முதலாகச் சித்தரித்த படைப்பு.
    டேனியல் செல்வராஜ் சோசலிச யதார்த்தவாதத்தை தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். சிறந்த எழுத்தாளரான இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அடித்தட்டு மக்களுக்கான வழக்கறிஞராகக் கழித்தவர். 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தைத் (தமுஎகச) தோற்றுவித்த 32 எழுத்தாளர்களில் ஒருவர். மலரும் சருகும், தேநீர், அக்னிகுண்டம், தோல், மூலதனம், பொய்க்கால் குதிரை, அடுக்கம் ஆகிய நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்களை எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -17%

    100 பேர் புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை.

    0

    இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் ஏற்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது.

    Original price was: ₨ 3,000.0.Current price is: ₨ 2,500.0.
    Add to cart
  • -9%

    101 காக்க தகுந்த வாக்குறுதிகள் –

    0
    இந்தப் பக்கங்களில் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான சில முடிவுகளை எடுக்க உங்களுக்கு சவால் விடுக்கப்படுமா? உங்கள் உறவுகளைப் பாதுகாக்கும் மற்றும் உங்கள் எதிர்காலத்தை நங்கூரமிடும் நடைமுறைக் கடமைகள்.
    இந்த மிகுந்த ஊக்கமளிக்கும் ஞான வார்த்தைகள், உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நிரந்தரமான உறுதிமொழிகள், உங்கள் கூட்டாளிகளிடம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத அறிவிப்புகள், உங்களுக்கான வாழ்க்கையை மாற்றும் தீர்மானங்கள், உங்கள் உலகிற்கு முக்கியமான வாக்குறுதிகள், உங்கள் தயாரிப்பாளருக்கு நித்திய உறுதிமொழிகள் ஆகியவற்றைச் செய்ய உதவும்.
    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -9%

    6174.

    0

    தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமுறியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்த தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல்.

    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,500.0.
    Add to cart
  • -9%

    From 19 DM saron.

    0
    Bavachelladurai is a well known Tamil Writer. In his early age he lived with the people in the villages who were on the edges of their life. He holds higher place for the content of these people’s life. He with pleasure often recollects all his early life experiences. His literary writings are momentous contribution to the Tamil literary world.
    His works are already translated into English Hindi and Malayalam and are in the process of getting translated into Spanish, German and French.
    Original price was: ₨ 825.0.Current price is: ₨ 750.0.
    Add to cart
  • -9%

    Journey to Jaffna

    0
    This moving and unforgettable novel, ‘Journey to Jaffna’, is a powerful exploration of the conflicting ties of family and of the heart. Set in London, Russia and Sri Lanka, this book will find its way into your own heart.
    Param grew up in a strict Tamil family in Sri Lanka, but broke away from them to study in London. Even the violence facing Tamils back home could not affect the new life he built for himself with his English wife, Mary and their daughter. Now though, it is 1979, his father is dying and it is Param’s duty to make the journey back to Jaffna.
    As Param learns of the horrors his family and his ex-girlfriend Karthiga have endured, he faces his own struggle. Does he owe it to them to come back to Sri Lanka, or should his loyalties now lie with his English family? Or does Liz, the English/American woman he met on his long, disrupted journey, offer a way out?
    Original price was: ₨ 3,300.0.Current price is: ₨ 3,000.0.
    Add to cart
  • -9%

    SUMERIAN A DRAVIDIAN LANGUAGE.

    0

    The Sumerian language has a remote relationship with the Dravidian languages like spoken by Tamils in south India. Sumerians were responsible for the first monumental temples and founding of the first city state and for the invention of writing.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -9%

    The Sri Lankan Tamil literary landscape.

    0

    I have been the first reader of most of Canagaratna’s translations and felt that he had internalized the aesthetic, and the artistic requirements for an effective translation more than any other contemporary Sri Lankan bi-lingual scholars.

    Original price was: ₨ 2,860.0.Current price is: ₨ 2,600.0.
    Add to cart
  • -9%

    அகதியின் துயரம்.

    0
    இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த திருப்பங்களின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அகதியின் துயரங்களை இந்நூல் விவரிக்கின்றது.
    உலக அகதிகள் நிலவரம், இந்தியா எதிர்கொண்ட அகதி அனுபவங்கள், இனப் பிரச்சினையால் உலகெங்கும் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள், இனங்களின் நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்கின்ற சிங்களவர்களின் போட்டி அரசியல் எனப் பல விடயங்கள் இந்நூலில் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.
    இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட அனைத்து தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமைத் தேவைகளையும் இந்தியாவின் பாதுகாப்புக் கவனத்தையும் ஒருசேர உறுதிசெய்கின்ற ஒரு தேசிய அகதிகள் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் நூலாசிரியர் இந்நூலில் வலியுறுத்துகிறார்.
    Original price was: ₨ 880.0.Current price is: ₨ 800.0.
    Add to cart