-
-10%
-
-10%
ஏதேனும் ஒரு வரிசையில் நின்றவனின் கதைகள்
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0. -
-10%
ஏவாளின் இரண்டாம் ஆப்பிள்.
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.கதாபாத்திரங்களினூடாக ஆசிரியர் தனக்கே இயல்பான சமூகம், அரசியல், அடையாளம் முதலான விவாதங்களை துவக்கி வைத்திருப்பது இக்கதையை ஒரு காதல் கதைக்கப்பால் சமூக, அரசியல்கதையாகப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் தூண்டியிருக்கிறது. மொத்தத்தில் இக்கதைகள் நமக்கு புதிய அனுபவத்தை தருவன.
-
-10%
-
-10%
ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்)
0Original price was: ₨ 4,200.0.₨ 3,780.0Current price is: ₨ 3,780.0.மனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல். ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல்.
-
-10%
ஏழாவது ஊழி (சுற்றுச்சூழல் கட்டுரைகள்.)
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.சூழலியல் வெறுமனே கல்வி அல்ல, அது வாழ்க்கை. ரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஓர் அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல்,’ என்று பேசுகிற ‘ஏழாவது ஊழி’ நூல் பசுமை இலக்கியத்தையும் தாண்டித் தமிழிலும் தீவிரக் கவனம் கொள்ள வேண்டிய நூல்.சூழலியல் குறித்துப் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் இன்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அதன் அத்தனை கூறுகள் குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கும் பொ.ஐங்கரநேசன், ஈழத்தைச் சேர்ந்த சூழல் இதழியலாளர். தற்போது அங்கு வடக்கு மாகாண அமைச்சராக அவர் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. நாற்பத்தோரு கட்டுரைகள் அடங்கிய இந்நூலின் பேசுபொருள் புழு, பூச்சியில் தொடங்கிப் புவிவெப்பமாதல் வரைக்கும் விரிவானது. -
-10%
-
-10%
ஏழு போராளிகள் !
0Original price was: ₨ 4,140.0.₨ 3,726.0Current price is: ₨ 3,726.0.இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல் சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்கப் போராடியவர்கள்.லட்சியங்களால் உந்தப்பட்ட இவர்கள் அனைவருமே காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர். சிலர் அவரைத் துதித்தனர். சிலர் அவரிடம் கருத்து வேறுபாடு கொண்டாலும் அவர் பாதையை ஏற்றார்கள்.உலகின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா கூறும் இந்தக் கதைகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பல புதிய புரிதல்களைத் தருகின்றன. பிரமிக்கவைக்கும் இந்தப் பதிவுகள் பல இடங்களில் நெகிழவும் வைக்கின்றன.இந்தியாவைத் தமது சொந்த நாடாக வரித்துக்கொண்ட இந்த ஆளுமைகளோடும் அவர்களின் வாழ்வோடும் நாம் நெருக்கம் கொள்ளும் வகையில் தியடோர் பாஸ்கரன் இதைத் தமிழில் தந்திருக்கிறார். -
-10%
ஏறுவெயில்.
0Original price was: ₨ 1,680.0.₨ 1,512.0Current price is: ₨ 1,512.0.1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.
-
-10%
-
-10%
-
-10%
ஐரோப்பியத் தத்துவ இயல் –
0Original price was: ₨ 690.0.₨ 621.0Current price is: ₨ 621.0.ஐரோப்பியத் தத்துவ இயல்’ என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்துச் சிந்தனையாளர்களின் கோட்பாடுகளையும் அக்காலக்கட்ட சூழலையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஐரோப்பியத் தத்துவத் தாக்கங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இந்நூல் வகை செய்கிறது.