-
-9%
மனமும் இடம்பெயரும்.
0தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம் பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராக அறியப்படுபவர்.சிறு வயது முதலே எழுத்துலகில் பிரவேசித்த அவர் தொடர்ந்து எழுதுவதைத் தவமாக மேற்கொண்டு வருபவர். அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக “மனமும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளி வருகின்றது -
-19%
மனித சமுதாயம்
0தொடக்ககாலத்திலிருந்து மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை வளர்ச்சிகள் இந்நூலில் வரையறை செய்யப்பட்டுள்ளன. மொழி, அரசியலமைப்பு, விஞ்ஞானம், இனக்குழு சமுதாயம், தாய்வழிச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் போன்ற சமூகப்படிநிலை குறித்து விரிவாக ஆராயந்தெழுதப்பட்ட நூல். வழிபாடு, மத உருவாக்கம், சோசலிச மனித சமுதாயம், போர்கள், தத்துவங்களின் தோற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்ககால மார்க்சிய சோசலிசம், விஞ்ஞான மார்க்ஸியம் மற்றும் பெண்களின் வாழ்நிலை, ஆணாதிக்கச் சமூகம் விதித்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட மனித சமுதாய வளர்ச்சிநிலையின் முழுமையான வரலாற்றுப் பதிவுகளை இந்நூலில் காணலாம்.
-
-9%
மாயக்குதிரை.
0கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன் சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்வாகின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திருந்த, எழுத்தின் வலிமையையும் சாத்தியங்களையும் பற்றிய வியப்பையும் மதிப்பையும் மீண்டும் ஒரு முறை உசுப்பி மலர்த்தியிருக்கின்றன. அந்தளவில் தமிழ்நதிக்கு என் நன்றி. இவை, மொழிகளிடையே கூடுபாய்ந்து மனங்களிலெல்லாம் கூடுகட்ட விழைவதாக உணர்கிறேன்.
-
-9%
மாற்றமுறும் கல்வி முறைமைகள்.
0சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் குடியேற்ற ஆட்சிக்காலக் கல்வி முறையை எதிர்த்த பல பெரியார்களும் கல்விச் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் தமது தாய் நாட்டில் சமூக, பொருளாதார, கலாசார தேவைகளைக் கருத்திற் கொண்டு பல புதிய கல்விக் கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் முன்வைத்தனர்.காந்தி அடிகளின் ஆதாரக் கல்வி, தாகூர் அவர்களின் கலாசார மையக் கல்வி, கன்னங்கராவின் கிராமியக் கல்வித்திட்டம், தான்சானியாவில் நியரரேயின் தற்சர்பு கல்வித் திட்டம் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.வி -
-20%
மானுடம் வெல்லும்
0மானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்-கொண்ட பிரெஞ்ச்-தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச் தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்.
-
-9%
மின்னுவதெல்லாம்.
0தங்கக்கட்டுப்பாடு சட்டம் எப்படி பொற்கொல்லர்கள் வாழ்வைப் புரட்டிப் போட்டது என்பதில் தொடங்கி இன்று மின்னுவதெல்லம் பொன்னல்ல என்ற நிலையை சமூக பொருளாதார அவலத்தை, அந்த சமூகத்தில் ஒருவனாக இருந்து ஊடாடியதை வடித்துள்ளேன்.
-
-18%
மிஷ்காத்துல் மஸாபீஹ் – புனித நபியின் பொன்மொழிகள் – பாகம் ஒன்று
0Original price was: ₨ 2,200.0.₨ 1,800.0Current price is: ₨ 1,800.0. -
-9%
மெர்குரிப் பூக்கள் (Mercury Pookkal)
0எழுத்தாளர் பாலகுமாரனால் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். சாவி இதழில் 34 வாரங்கள் தொடராக வெளிவந்தது. பின்னர் இந்நாவல் புத்தகமாக வெளியிடப்பட்டது.ஒரு பெரிய உழவு இயந்திரத் தயாரிப்பு நிறுவன வேலைநிறுத்தத்தின் போது நடந்த ஒரு படுகொலையைப் பற்றி விவரிக்கிறது. -
-9%
மேனேஜ்மெண்ட் உங்கள் உள்ளங்கையில்.
0நீங்கள் ஒரு தனிமனிதரல்ல ,மேனேஜ்மெண்டே மனிதனாக உருவெடுத்து வந்த ஒரு மாபெரும் சகாப்தம்.உங்களது ஓயாத உழைப்பினால்தான் மேனேஜ்மெண்ட் இன்று எல்லாச்சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்து விட்டது.அத்துடன் அது அவர்கள் வாழ்க்கையையும் துலங்கவைத்துக் கொண்டிருக்கிறது. -
-6%
மோகமுள்.
0ஒன்பது நாவல்களை எழுதியவர் என்றாலும், தி.ஜானகிராமன் என்றதும் ‘மோக முள்’தான் முன்னால் வந்து நிற்கிறது. முதிரா இளைஞன் ஒருவன் தன்னைவிட வயதில் மூத்தவளின் மீது கொள்ளும் மோகமே நாவலின் மையம். ‘மோக முள்’ வெளிவந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கருப்பொருளில் மலையாளத்தில் ‘ரதிநிர்வேதம்’ என்றொரு குறுநாவலை எழுதினார் பி.பத்மராஜன். ‘மோக முள்’ மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பே ‘ரதிநிர்வேதம்’ வெளியாகிவிட்டது. பத்மராஜனின் நண்பர் பரதன் அதைத் திரைப்படமாக இயக்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அது புதிய திரைவடிவம் கண்டது. ‘ரதிநிர்வேதம்’ காட்சிக்காவது விருந்தாயிருந்தது. ‘மோக முள்’ திரைவடிவம் அந்த அனுபவத்தையும் அளிக்கவில்லை.‘மோக முள்’ளை வாசித்தவர்கள் அதன் உயிர்ப்பான தருணங்களைத் திரைப்படத்திலும் எதிர்பார்த்து ஏமாந்தார்கள் என்றால், திரையில் மட்டுமே பார்த்தவர்களுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது. -
-9%
யாதுமாகி.
0கல்வியும் விவேகமும் ஒருவருடைய வாழ்க்கையின் தரத்தையும் தகுதியையும் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மாற்றி வைத்துவிடும் தன்மை கொண்டவை. சிக்கலான சூழல்களில் அவற்றை அவர் அடைந்த விதத்தில் பெருங்கதை விரிகிறது.
-
-9%
யாழ்ப்பாண வைபவமாலை.
0யாழ்ப்பான வரலாற்றைக் கூறும் இந்நூல் மாதகல் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்டது. இவ்வரிய நூல் 18ஆம் ஆண்டி லேயே சென்னையில் முதன்முதலாக அச்சிடப்பட்டது.முதலியார் குல.சபாநாதன் அவர்கள் இந்நூலிற்கு எழுதிய பாடபேதங்களுடனும் ஆராய்ச்சிக் குறிப்புரைகளுடனும் வெளிவந்தது.யாழ்ப்பானத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் சரித்திரத்தை ஆராய்ந்து தமிழில் வித்துவக் குடும்பத்தில் தோன்றிய ஒருவரின் தெளிவான வசனநடையில் சரிந்திரமுறையில் எழுதப்பட்டதால் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்நூல் முக்கிய இடம்பெறுதற்குரியது.