• -9%

    பௌத்தத் தத்துவ இயல்

    0
    பௌத்தத் தத்துவ இயல்’ என்னும் இந்நூலில் புத்தரின் வாழ்க்கை, அவரது அடிப்படைத் தத்துவங்கள், பௌத்த மதப் பிரிவுகள், பௌத்த மதத்தின் உயர்மட்ட வளர்ச்சி ஆகியவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இவற்றோடு பின்னிணைப்பாக ராகுல்ஜியின் தேர்வுக் கட்டுரைகளான, புத்தர் காலத்திற்கு முற்காலத் தத்துவ மேதைகள் மற்றும் பிற்கால தத்துவ ஞானிகளைப் பற்றியும் ராகுல்ஜி எழுதிய தனித்தனியான கட்டுரைகளுடன் ‘வஜ்ராயனத்தின் தோற்றமும் எண்பத்தி நான்கு சித்தர் கணமும்’ என்ற விரிவான கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளன.
    Original price was: ₨ 960.0.Current price is: ₨ 875.0.
    Add to cart
  • -9%

    ப்ளிங்க். சிந்திக்காமலேயே. சிந்திக்கும் ஆற்றல்

    0
    மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல்.
    ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.
    Original price was: ₨ 3,660.0.Current price is: ₨ 3,330.0.
    Add to cart
  • -9%

    மகாபாரதம்.

    0

    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.

    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -9%

    மகான்களின் அற்புத சக்திகள்.

    0
    மகான்கள், யோகிகள், ஞானிகள் நமது நாட்டில் அவ்வப்போது அவதரித்து மக்களின் துயர் துடைத்து வருகிறார்கள். இறைவனால் அனுப்பப்பட்ட புண்னியநதிகள் இவர்கள். இந்த நதிகளைத் தேடிச்சென்று ஆறுதல் பெற முடியாதவர்களுக்காக
    அவர்களே வீடு தேடி வந்து ஆசீர்வதிப்பதைப்போல இந்த புத்தகம் உங்களைத் தேடிவருகிறது.
    Original price was: ₨ 550.0.Current price is: ₨ 500.0.
    Add to cart
  • -9%

    மக்களும் மரபுகளும்.

    0

    இந்நூல் மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் இரு வகைக் கட்டுரைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் தமிழக மலைப் பிரதேசங்களிலும் வாழும் பழங்குடி – இனக்குழு மக்களது வாழ்க்கை, மொழி, கலை, பழக்க வழக்கங்களை ஆராய்கிற கட்டுரைகள் ஒரு வகை; தமிழகத்திலும் கேரளத்திலும் வழங்கி வரும் வேலன் வழிபாடு, பகவதி வழிபாடு பற்றிய வரலாற்று மானிடவியல் கட்டுரைகள் மற்றொரு வகை.

    Original price was: ₨ 825.0.Current price is: ₨ 750.0.
    Add to cart
  • -9%

    மணல் சமாதி.

    0
    -எண்பதை நெருங்கிக்கொண்டிருந்த பாட்டி விதவையானதும் படுத்த படுக்கையாகிவிட்டார்.
    குடும்பத்தினர் அவரைத் தங்களுக்குள் இழுக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். பாட்டிக்கோ ‘இனி நான்
    எழுந்திருக்கமாட்டேன்’ என்கிற பிடிவாதம்.
    பின்னர், இந்தச் சொற்கள் இப்படி மாறின: ‘இனி புதிதாய் மட்டுமே எழுந்திருப்பேன்’.
    பாட்டி எழுந்திருக்கிறார். முற்றிலும் புத்தம் புதிதாக. புதிய குழந்தைப் பருவம். புதிய இளமை. சமூகத்
    தின் தடைகளிலிருந்தும் மறுப்புகளிலிருந்தும் முற்றிலும் விடுபட்டுப் புதிய உறவுகளிலும் புதிய
    உணர்வுகளிலும் முழுவதும் சுதந்திரமாய், தன்னிச்சையாய் . . .
    கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய இந்தி நாவலான ‘ரேத் சமாதி’யின் கதை சொல்லும் பாணி மிகப் புதியது.
    இந்த நாவலின் கரு, காலகட்டம், ஒழுங்கமைதி, செய்தி அனைத்தும் தமக்கே உரித்தான தனித்துவம்
    நிறைந்த பாணியில் செல்கின்றன. நமக்குப் பழக்கமான எல்லைகளையும், எல்லை களுக்கு
    அப்பாலும், அனைத்தையும் நிராகரித்தும் தாண்டியும் செல்கின்றன. கூட்டுக் குடும்பம்
    தனிக்குடித்தனம், ஆண் – பெண், இளமை – முதுமை, உறக்கம் – விழிப்பு, அன்பு – வெறுப்பு, இந்தியா –
    பாகிஸ்தான் எனப் பல்வேறு எல்லை களினூடே நாவல் பயணிக்கிறது.
    இந்த நாவலின் உலகம் நன்கு அறிமுகமானது போலவும் மாயஜாலம்போலவும், இரண்டிற்கு
    மிடையேயான வேறுபாட்டை அழித்தபடி துலங்கு கிறது. காலம் நிலையில்லாத் தன்மையில்
    புலப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் இறந்த காலத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு
    கணமும் வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது.
    Original price was: ₨ 4,125.0.Current price is: ₨ 3,750.0.
    Add to cart
  • -9%

    மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்?

    0

    இன்றைய சூழலில் அதிகரித்துவரும் மதவாத அரசியலின் ஆபத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் விரித்துக்கூறி மதச்சார்பின்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொடக்க காலம் அதன் வளர்ச்சி, அந்த இயக்கத் தலைவர்களின் ஆபத்தான சொல்லாடல்கள், அதனால் நாட்டில் விளைந்த கேடுகள் இவற்றுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணி போன்ற வரலாற்றுத் தகவல்கள் இடம் பெற்றுள்ள இந்நூலில், இந்தியாவில் சாதி, மதம், மொழி குறித்த கருத்துகள் பற்றிய தெளிவான விளக்கங்களும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    Original price was: ₨ 440.0.Current price is: ₨ 400.0.
    Add to cart
  • -9%

    மம்பிள் மம்பிள். மழலையர் நாவல் (5+)

    0

    அதென்ன மழலையர் நாவல்? பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளால் நாவல் படிக்க முடியுமா என்றெல்லாம் சிலருக்கு தோன்றலாம். இப்போதைய தலைமுறைக் குழந்தைகள் பாரமாக சிந்திக்கிறார்கள். படைப்பாற்றலுடன் இருக்கும் அவர்களின் எண்ணங்களுக்கு உரிய தீனி போட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -9%

    மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்.

    0
    மலையகத்தின் அரசியல் தளத்தில் இயங்கிய 26 ஆளுமைகள் பற்றிய சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் பதிவு ஆறு தசாப்தங்கள் கழித்து நூல் வடிவம் பெறுகிறது. இது ஈழத்து அரசியல் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும் பொக்கிசமாகும்.
    மலையக அரசியல் வரலாற்றை அறிய விரும்பும் யாரும் சி.வி. எழுதிய இந்த வரலாற்றுப் புதையலைக் கடந்துபோக முடியாது.
    Original price was: ₨ 880.0.Current price is: ₨ 800.0.
    Add to cart
  • -9%

    மலையகச் சுடர்மணிகள்.

    0

    உடல் உழைப்பைத் தவிர வேறெதனையுமே அறிந்திராத மக்கள் கூட்டமாக, இரு நூற்றாண்டுகாலமாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையக சமூகத்திலிருந்து கல்வித் தீபமேந்தி, அறியாமை இருளை அகற்ற மூன்னின்று உழைத்த பெருமக்களின் வரலாற்றை தொகுத்துக் கூறும் நூல் இது.

    Original price was: ₨ 880.0.Current price is: ₨ 800.0.
    Add to cart
  • -9%

    மலையகத்தின் எழுச்சித் தலைவர். பெ. சந்திரசேகரன்.

    0

    மலையகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஓர் அரசியல் தலைவரின் உயர்ந்த குணாம்சங்களைச் சித்திரிக்கும் மலையகத்தின் எழுச்சித் தலைவர் என்ற இந்தநூல் ஒரு தீபஸ்தம்பமாக விளங்கும் என்று நம்புகிறேன்.

    Original price was: ₨ 825.0.Current price is: ₨ 750.0.
    Add to cart
  • -9%

    மறுப்பில் உயிர்க்கும் சொற்கள்.

    0

    கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு அரசியல் நகர்வுகளைக் குறித்த இந்தத் தொகுப்பு ஒவ்வொரு அரசியல் கட்சியின் உள்ளார்ந்த நிலைப்பாடுகளை விமர்சிக்கிறது. அதன் உள் நோக்கங்களை ஆராய்கிறது. இதன் மூலம் அந்தக் கட்சிகளின் நிறத்தை வாசகர்களுக்குக் காட்டிக்கொடுக்கிறது.

    Original price was: ₨ 880.0.Current price is: ₨ 800.0.
    Add to cart