Description

-பிரபஞ்சன்

பிரபஞ்சன் கதைகள், மானுட மகத்துவம் பேசுபவை; சாதாரண மனிதருக்குள் புதைந்து கிடக்கும் பரிவை, அருளை, நியாய உணர்வை, ஒரு சினேகிதனின் நெகிழ்ந்த தொனியில் சொல்பவை: ஊற்றுநீர்போலக் கனிந்து. சந்தர்ப்பங்களில் வெளிப்படும் மனிதர்களின் அரிய மானுடத் தருணங்களை இனம்கண்டு, கலாபூர்வமாக விளம்புபவை. பகை, வெறுப்பு, துவேஷம் எதுவுமற்ற மனம் கொண்ட ஈரத் தமிழ்க் கதை சொல்லியான பிரபஞ்சன். தன் காலத்துப் புனைவைச் செழுமைப்படுத்திய எழுத்தாளர். வரலாற்று நாவல்துறையில் ஒரு புதிய பாதை வகுத்தவர். கட்டுரைகள், நாடகம் என சமூக இலக்கியத்துறையில் தொடர்ந்து இயங்கியவர். தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டிய படைப்புகளைத் தந்த பிரபஞ்சன், 2018 டிசம்பர் 21ம் தேதி மறைந்தார்.

பி.என்.எஸ்.பாண்டியன்                                                                                                                                                                                                                                                                                                                                தலைவர், பிரபஞ்சன் அறக்கட்டளை

Reviews

There are no reviews yet.

Be the first to review “ருசி”

Your email address will not be published. Required fields are marked *