Description
அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் மைத், இலங்கை மண்ணில் உதிந்த தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களுன் ஒருவர், ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரீகத் துறையில் முதுமாணிக் கற்கையை நிறைவு செய்தவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய சட்டவியல், மகாஸிதுஷ் ஷரீஆ, குடும்பவியல், கல்வியியல், ஆன்மீகம் போன்ற துறைகளில் சிறந்த புலமைத்துவமும் ஈடுபாடும் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆக்கங்களுக்கும் ஆய்வுக் கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர். மகாஸிநுஷ் ஷரீஆ அறிமுகக் கையேடு என்னும் மொழிபெயர்ப்பு நூல் ஈமானிய அமர்வுகள் என்னும் ஆன்மீக நூல் போன்றன இவற்றுள் முக்கியமானவை.







Reviews
There are no reviews yet.