Description
ஈழத்தில் அரசியல் கவிதையின் வரலாற்றை 1940களிலிருந்து தொடங்கலாம். இடதுசாரி இயக்கங்கள் முன்னணிக்கு வந்த அக்காலகட்டத்தில் கவிதையில் இடதுசாரிச் சிந்தனை முனைப்பாக வெளிப்படத் தொடங்கியது. எல்லாவகையான பாகுபாடுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக அது குரல் எழுப்பியது. இலங்கையில் இன முரண்பாடு முதிர்ச்சியடைந்த 1970களின் பிற்பகுதியிலிருந்து இனத்துவ அரசியலின் வெளிப்பாடாக, ஈழத்துக் கவிதை கிட்டத்தட்ட முழுமையாகவே, அரசியல் எதிர்ப்புக் கவிதையாக மாற்றமடைந்தது
இன வன்செயல்களும், இராணுவ ஒடுக்குமுறையும், மூன்று தசாப்தங்கள் தொடர்ந்த யுத்தமும், பேரழிவுகளும், இடப்பெயர்வுகளும் ஈழத்துக் கவிதையின் அரசியலை, அதன் பாதையைத் தீர்மானித்தன. ஈழத்துக் கவிதை இனத்துவ அரசியலைத் தாண்டிச் செல்ல முடியாத நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தின . யுத்தம் முடிவுக்குவந்து சுமார் பதினைந்து ஆண்டுகள் முடிந்தபின்னரும்கூட இனத்துவ அரசியலின் வெக்கை இங்கு இன்னும் தணியவில்லை.
கவிதையும் அரசியலும்: ஈழத்து அனுபவம் என்னும் இந்நூல் இது பற்றியே பேசுகின்றது. அவ்வகையில் இந்த நூல் சுதந்திரத்துக்குப் பிந்திய ஈழத்துத் தமிழ்க் கவிதையின் அரசியல் வரலாற்றைப் பேசுகின்றது எனலாம்.சமூக, வரலாற்றுப் பின்னணியிலும், கோட்பாட்டு அடிப்படையிலும் சுதந்திரத்துக்குப் பிந்திய ஈழத்துத் தமிழ்க் கவிதையைப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்று







Reviews
There are no reviews yet.