Description

நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம்தள்ளி வைக்க நம்மிடம் இப்போது உள்ளன றஷ்மியின் கவிதைகள். அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை காவியங்கள். காவிய இலக்கியத்திற்குப் புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண் அழகும் மானுட வேட்கையும் சிந்தனையும் கூடும் படைப்புகள் இவை. வரலாற்றுக்குச் சாட்சியாகக் கவிஞன் நிற்க மறுத்தாலும் தவிர்க்க முடியாமல் கவித்துவ சாட்சியாக மாறும் முரண்நகையும் இந்தத் தொகுப்பில் இழையோடுகிறது.

சேரன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “‘ஈ’ தனது பெயரை மறந்துபோனது”

Your email address will not be published. Required fields are marked *